கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 31 10

செல்வா குளியலறைக்குள் குளித்துக் கொண்டு இருக்க, நடராஜன் தன் முகத்தில் பூசிய சோப்பு நுரையுடன் கண்ணாடிக்கு முன் ஷேவிங்கில் மும்மரமாக இருந்தார். மீனா வேகமாக தன் மூச்சிரைக்க சீனுவிடம் ஓடினாள்.

“சீனு… எதிர் வீட்டுக் கெழம் நம்ம வீட்டுக்கு வேக வேகமாக ஓடியாந்ததைப் பாத்தீங்களா?”

“ம்ம்ம்.. பாத்தேன்…” சீனு வெற்றுப் பார்வையொன்றை மீனாவின் முகத்தில் வீசினான்.

“நாம கிஸ் அடிச்சதை அது பாத்துட்டுதுன்னு எனக்குத் தோணுதுங்க… இப்ப என்னப் பண்றது?” அவள் முகத்தில் ஒரு தொய்வு வந்திருந்தது.

“மொத மொதல்ல எனக்கு கிஸ் குடுத்தே..!! நல்ல சகுனம் பாத்தியாடீ? ஒத்தைப் பாப்பான் எதிர்ல கிஸ் அடிச்சது யாருடீ..? நீதானே அது? இப்ப என்னைக் கேக்கறியா நீ? மனதுக்குள் இருந்த கிலியை மறைத்துக்கொண்டு அவன் கிண்டலாகப் பேசினான்.

“அயாம் ஸாரி… சீனு…?”

“என்னை நீ கிஸ் அடிச்சதுக்கு வருத்தப்படறீயா…? இல்லே நீ சீனுவைத் திருத்தணுங்கற பிரச்சனையில ஏன்டா மாட்டிக்கிட்டோமேன்னு கவலைப் படறீயா?” சீனு ஏளனமாக அவளை நோக்கிச் சிரித்தான்.

“உனக்கு சுத்தமா புத்தியே இல்லையாடா? எந்த அர்த்தத்துல நீ இந்தக் கேள்வியை நீ என் கிட்ட கேக்கறே? நான் உன்னை காதலிக்க ஆரம்பிச்சாச்சு… நீதான் என் கழுத்துல தாலி கட்டப்போறவன். அய்யரு நடுவுல வந்தாலும் சரி… அப்துல் காதர் வந்தாலும் சரி…! அதுல எந்த மாத்தமும் கிடையாது… !”

“ம்ம்ம்..”

“செல்வா பிரச்சனை இப்பத்தான் ஒரு முடிவுக்கு வந்திருக்கு. அதுக்குள்ள நம்மப் பிரச்சனை வீட்டுக்குள்ள ஆரம்பிச்சுடுமோன்னு எனக்கு பயமா இருக்கு..!”

“இதல்லாம் என்னை கிஸ் அடிக்கறதுக்கு முன்னாடி நீ யோசனைப் பண்ணியிருக்கணும்..”

“நான் யோசனைப் பண்ணலே… தப்புத்தான்… நீயும் தானே பதிலுக்கு என்னை கட்டிப்புடிச்சி கிஸ் குடுத்தே?” மீனா அவனிடம் தன் அடிக்குரலில் சீறினாள்

“ம்ம்ம்… நான் இங்க வேணாம்ன்னு அப்பவே சொன்னனா இல்லையா?”

“இப்ப என்னை நீ வெறுப்பேத்தாதே சீனு..” அவள் முகம் சுண்டியது.

“சரி.. ஓ.கே… நான் உன்னை எதுவும் சொல்லலை…!!! நீ மூஞ்சைத் தூக்கி வெச்சுக்காதே…”

“அம்மாவை நெனைச்சா எனக்கு பயமாயிருக்கு சீனு.. இப்ப இந்த விஷயம் அவங்களுக்குத் தெரிஞ்சா என் தோலை உரிச்சு உப்புத் தடவிடுவாங்க…”

“உன் தோலை உரிக்கறவங்க, நடுக்கூடத்துல என்னை உக்காரவெச்சு, வாங்க மாப்ளேன்னு எனக்கு சோறு போடுவாங்களா?”

“அவங்க போடலன்னா நான் போடறேன் உனக்கு…” சீனுத் தன்னை அந்த வீட்டு மாப்பிள்ளை என்று டிக்ளேர் செய்ததும் அவள் முகம் தாமரையாக மலர்ந்தது. மீனா அவன் சட்டைப் பித்தானை திருகினாள்.

“மீனா.. எனக்கு உங்க அப்பாவை நெனைச்சாத்தான் பயமாயிருக்குடீ… இந்தக் கிழம் எதையாவது அவருகிட்ட உளறி வெச்சா.. அவர் மூஞ்சை எப்படி நான் நிமிர்ந்துப் பாப்பேன்னு எனக்குத் தெரியலை…”

“அந்த கெழம் வீட்டுக்குள்ள வராம ஏன் கேட்டோட திரும்பிப் போயிடுச்சி…?”

“ஒரு வேளை என் மீசையில்லாத மூஞ்சைப் பாத்துட்டு, பயந்து இருக்கலாம்…” சீனு சிரித்தான்.

“சனியனே… கொஞ்சம் சீரியஸா பேசேன்டா..” மீனா அவன் மார்பில் குத்தினாள்.

“மீனா… நீ மொதல்ல அந்த நொண்டிக் கருப்பனுக்கு சூடா ஒரு இட்லி வெய்டீ… அது குடுத்த கொரல்லதான் அய்யரு பயந்து போய் திரும்பி ஓடியிருக்கணும்…” சீனு அவளை நோக்கி கண்ணடித்தான்.

“சீனு… இப்ப எதுக்கு அசிங்கமா சிரிச்சு என்னைப் பாத்து கண்ணடிக்கறே நீ? இதெல்லாம் எனக்கு சுத்தமா புடிக்காது… சொல்லிட்டேன்..”

“மீனா… கோச்சுக்காதேடி தங்கம்…”

“சரி…சரீ… மேலப் போ…”

“மீனா.. மாடி ரூமுக்கு போய் வெச்சுக்கலாங்கறீயா? இப்ப யாரும் அங்க வரமாட்டாங்களா?”

“டேய்… என் கோபத்தைக் கிளறாதே? நீ சொல்ல வந்ததை சொல்லுன்னு சொன்னேன் நான்…”