கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 31 10

ராமசாமிக்கு அசாத்திய எரிச்சல். வேலையுல இருந்த காலத்துல அந்த ப்யூன் முனுசாமி என்னை என்னைக்கும் மதிச்சதேயில்லே… காலையில குரல் குடுத்தா சாயங்காலம் வந்து நிப்பான்.

வேலையிலேருந்து ரிட்டையர் ஆயிட்ட என்னை இப்ப என் ஆத்துக்காரியே மதிக்க மாட்டேங்கறா? அவ்வளவு ஏன்? நடராஜன் வீட்டு மிச்சம் மீதி எச்சில் சோறு திங்கற இந்த தெரு நாய் நொண்டிக் கருப்பன் கூட என்னை மதிக்க மாடேங்குது… அப்புறம் ஊர்ல இருக்கறவன் ஏன் என்னை மதிக்கப் போறான்? தன் தலையை ஒரு முறை அழுந்த தடவிக்கொண்டார்.

கிராப்புத்தலை மொத்தமாக நரைத்திருந்தது, ஆனால் தலையில் இன்னும் வழுக்கை சுத்தமாக விழவில்லை. நெற்றில் பட்டையாக விபூதி. கழுத்தில் பொன்னால் கட்டிய ருத்திராக்ஷ மாலை. மார்பின் குறுக்கில் ஓடும் பூனூல்.

பளிச்சென்று அகன்ற முகம். நீளமான மூக்கு. நீள மூக்கின் நுனியில் எப்போதும் ஒரு மெல்லிய கோபம் குடி கொண்டிருக்கும். எப்போ எப்போவென காரணமேயில்லாமல் புறப்பட்டு குதிக்கும்.

வர்ஜா வர்ஜமில்லாமல் நிறைய படித்திருந்ததால் கண்களில் ஒரு அகங்காரம் நிலைகொண்டிருந்தது. மனசுக்குள் எனக்கு எல்லாம் தெரியும் என்னும் கர்வம் அவர் பேச்சில் பளிச்சிடும். எதிராளி குரலை உயர்த்திவிட்டால் ஓட்டுக்குள் அவசர அவசரமாக தன்னை ஒடுக்கிக்கொள்ளும் சாதுர்யமான ஆமை அவர். சற்று நேரம் அமைதியாக கண்ணை மூடி சப்பணமிட்டு உட்க்கார்ந்து கொள்ளுவார். மீண்டும் கோபம் மூக்கு நுனியில் வந்து வழக்கம் போல குடியேறும்.

நாலும் தெரிஞ்ச பெரியவங்க சும்மாவா சொன்னாங்க;
“தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டுமின்னு..?” யாருக்கு இது பொருந்துமோ இல்லையோ… ராமசாமிக்கு நிச்சயமாக இது பொருந்தும்.

“இப்ப என்ன வேணுங்கறேள்?” சியாமளா சற்றே குரலில் கோபத்துடன் சமையலறையிலிருந்து எட்டிப்பார்த்தாள்.

“பக்கத்துல வந்தாதானேடீ விஷயம் என்னங்கறதை நான் விவரமா நோக்குச் சொல்லமுடியும்?” மனைவியின் குரல் உயர்ந்ததும் ராமசாமி மெல்ல தன் குரலில் வேகத்தைக் குறைத்து குழைய ஆரம்பித்தார்.

“அப்படி என்ன தலெ போற விஷயம்…? இப்ப நான் அடுப்புலேயும் துடுப்பிலேயுமா நிக்கறேன். உங்க கூட ஆற அமர உக்காந்துண்டு வெட்டிப் பேச்சு பேச இப்ப எனக்கு நேரமில்லே…” சலித்தவாறு வந்தாள் சியாமளா.

“எதிர் வீட்டு மீனாட்சியும் அந்த தடிப்பய சீனுவும் கொஞ்சம் கூட கூச்ச நாச்சமில்லாம ஒருத்தரை ஒருத்தர் கட்டிப்பிடிச்சிண்டு, நடராஜன் ஆத்து மாடிப்படி முக்குல, பட்டப் பகல்ல முத்தம் குடுத்துக்கிட்டாடீ… நேக்கு ஒடம்பே ஆடிப்போச்சு?

“என்னப் பேத்தறேள்..?”

“பேத்தறேனா.. நம்மாத்து மொட்டை மாடீல்லேருந்து என் ரெண்டு கண்ணாலப் பாத்தேன்டீ”

“மொட்டை மாடிக்கு காலமே நீங்க ஏன் போனேள்?”

“ஸ்நானம் பண்ணிட்டு துண்டை காயவெக்கப் போனேன்…”

“இன்னைக்கும் உங்க கோமணத்தை அங்க போடலியே? நேத்து பக்கத்து வீட்டு மைதிலி நம்மாத்துக்கு வந்து என்னை சண்டை இழுக்காத கொறை…”

“என் கோமணத்துக்கும் அவாளுக்கும் என்ன சம்பந்தம்..?”

“உங்க புழுத்துப் போன கோமணம் தானாவே காத்துல பறந்து போய் அவா ஆத்துல சம்பந்தம் பண்ணிண்டா, அதுக்கு நீங்கதானே பொறுப்பு?”

“செத்த புரியறமாதிரி பேசுடி… வயசானாலே பொம்மனாட்டிக நீங்க கேக்கறவாளுக்கு புரியாத மாதிரி பொடி வெச்சுப் பேசறேள்…”

“உங்களால நேக்கு மானம் போறது… இந்த எழவு கோமணத்தை விட்டுத் தொலைங்கன்னா நீங்க கேக்க மாட்டேங்கறேள்… உங்க புள்ளை டஜன் கணக்குல உங்களுக்கு ஜெட்டி வாங்கிக் குடுத்திருக்கான்…அதுல ஒண்ணை எடுத்து இடுப்புல மாட்டிக்கிட்டா என்ன?” முகத்தை வேகமாக நொடித்தாள் சியாமளா.

“அந்தக் கடங்காரன் பேச்சை எங்கிட்ட எடுக்காதே.. நேக்கு கெட்ட கோவம் வரும்…சொல்லிட்டன்…”

“மைதிலியோட ஆத்துல சுத்த பத்தமா தலை முழுகிட்டு மாடிலே வடாமிட்டு காய வெச்சிருக்கா…!! உங்க சனியன் புடிச்ச கந்தல், அவாத்து வடாம் மேல விழுந்தா சும்மா இருப்பாளோ?”

“அபசாரமா…அபாண்டமா பேசறதுகள்…”

“ஆமாம்.. அவாளுக்கு வேற வேலையில்ல பாருங்கோ…!!! மைதிலி உங்க கோமணத்தை ஒரு குச்சியிலே சுத்திண்டு வந்தா..!! நேக்கு தூக்கு போட்டுக்கிட்டு தொங்கலாம்ன்னு தோணித்து…!!”

“ம்ம்க்க்கூக்க்கும்..” தொண்டையை செருமினார் ராமசாமி…
“அப்புறம் அந்த குட்டி மைதிலி என்னச் சொன்னா?”

“மாமீ… மாமாவண்ட நீங்களாவது ஜட்டி போட்டுக்கச் சொல்லப்படாதான்னு ஒரு கொறை அழுது பொலம்பிட்டுப் போனா!!”

“சியாம்ளீ… நானே பதறிப்போய் வந்து நிக்கறேன்? என்னடி நீ… புரியாம போலீஸ்காரா மாதிரி கேள்வி மேல கேள்வி கேட்டு என் உயிரை எடுக்கறே?”

“வீட்டுக்கு வீடு வாசப்படித்தானே? இந்த சின்ன விஷயம் நோக்கு ஏன் புரியலேன்னு தெரியலை… சதா ஊர் வம்புக்கு ஏன் அலையறேள்?

“வெய்யில் இன்னும் முத்தலையே… நேக்கு என்னப் பைத்தியமா பிடிச்சிருக்கு? வம்புக்கு அலையறவனா நான்?” சியாமளாவை அவர் முறைத்தார்.

சியாமளா அவரை ஏற இறங்க ஒருமுறை பார்த்துவிட்டு பதிலொன்றும் சொல்லாமல், தன் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் திரும்பி கிச்சனை நோக்கி நடந்தாள்.

“ஏன்டீ சியாம்ளீ… நான் மெனக்கெட்டு.. உன் கிட்ட ஒரு விஷயம் சொல்றேன்… எதையும் காதுல போட்டுக்காம, என்னை அலட்சியமா பாத்துட்டு போயிண்டே இருக்கே..?”