கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 31 10

“ரெண்டு நாளைக்கு சும்மா இருங்கோ… நீங்க வெட்டியா இதிலே உங்க மூக்கை நொழைக்காதேள்… எதையாவது வாய்க்குப் வந்தபடி நடராஜன் வீட்டுலே உளறிக்கொட்டாதேள்… உங்களுக்குன்னு இருக்கற ஒரு நல்ல ஃப்ரெண்டையும் இழந்துடாடேள்…”

“ம்ம்ம்.. நீ சொல்றதும் சரின்னுதான் தோணறது..”

“நான் மல்லிகா காதுலே நமக்கு தெரிஞ்சதை சாவகாசமா போட்டுடறேன்… அதுக்கு மேல அவா பாடு…”

“ஏன்டீ இப்ப வேணாங்கறே?”

“இந்த வாரக்கடைசியிலே செல்வாவுக்கு நிச்சயம் பண்ண போறாளாம்… பெண்ணுக்கு சொந்த ஊர் கும்பகோணமாம்… செல்வா ஆஃபீஸ்லேதான் அந்த குட்டியும் வேலை செய்யறதாம்… பாக்கறதுக்கு மூக்கும் முழியுமா நன்னா இருக்காளாம்..

நம்ப செல்வாவுக்கும் என்ன கொறைச்சல்… ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பறதா செல்வா சொல்லவேதான்… பத்து நாள் முன்னாடி அவா ஆத்துலே ஒரே கூச்சல் கொழப்பம்…”

“என்ன சத்தம் ஆத்துலேன்னு கேட்டேன்.. நடராஜன் சிரிச்சிண்டே அப்புறமா சொல்றேன்னு மழுப்பிட்டார். செல்வா கல்யாணம்… நிச்சயம் பண்றதைப்பத்தி என்கிட்ட ஒண்ணும் சொல்லலியே..?” ராமசாமி தன் தலையை சொறிந்து கொண்டார்.

“நடராஜனுக்குப் பொண்ணை பிடிச்சிருக்காம்… இந்த சம்பந்தத்துல மல்லிகாவுக்குத்தான் அவ்வளவா விருப்பமில்லையாம்…”

“ம்ம்ம்…போச்சுடா பகவானே? ஈஸ்வரன் ஏன் இப்படீ லோகத்துல இருக்கவா எல்லாரையும் ஆட்டிப் படைச்சிண்டு இருக்கார்ன்னு புரியலே?”

“அவா ஆத்துல ஒரு நல்ல காரியம் நடக்கறப்ப… நாம ஏன் மீனாட்சியைப் பத்தியோ, அந்த பொண்ணு விருப்பப்படற சீனுவைப் பத்தியோ தூஷணையா பேசி, அவா சாபத்தை வாங்கிக் கட்டிக்கணும்? நமக்கென்னத் தலையெழுத்துங்கறேன்..”

“ம்ம்ம்…”

“என்ன ஊம்ம்ம்ங்கறேள்?”

“சொல்லேன்டீ… இந்தாத்துல நீ வெச்சதுதான் சட்டமாயிருக்கு… நான் என்ன சொல்றது நடுவுலே?”

“அவாவா வெனையை அவாவாதான் அனுபவிக்கணும்… நம்ம வெனையை நாம கழிச்சிட்டு, அடுத்தவாளுக்கு தொந்தரவு கொடுக்காம, நேரத்தோட ஈஸ்வரன் கிட்ட போய் சேந்தா அதுவே போதாதா? நீங்க என்ன சொல்றேள்?”

“வாஸ்தவம்டீ…” ராமசாமி சியாமளாவின் தோளில் தன் மெலிந்த கரத்தைப் போட்டு அவளைத் தன்னுடன் சேர்த்துக்கொண்டார்.

“மீனாட்சிக்கும், அந்த சீனுவாசனை மனசுக்குள்ள புடிச்சிருக்க போய்த்தானே… நடுவீட்டுல யாருக்கும் பயப்படாமல், அந்த சீனுவை கட்டிண்டு, மொகத்துல முத்தம் வாங்கிண்டாள்…”

“ம்ம்ம்…”

“அப்படி மனசு நெறைய ஆசை வெச்சிருக்கவாளை, நீங்க ஏன் பிரிக்க நெனைக்கறேள்..”

“நீ சொல்றதுலேயும் அர்த்தமிருக்குடீ..”

“சீனு குடிக்கறதும், சிகரெட் பிடிக்கறதும் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும் போது… மீனாவுக்கு தெரிஞ்சிருக்காதா?”

“ம்ம்ம்…”

“அப்புறம் நீங்க ஏன் அந்த சின்னஞ்சிறுசுங்க மத்தியிலே கெட்டப் பேர் வாங்க துடிக்கறேள்… அவா அவா வாங்கிண்டு வந்துருக்கற வரத்தை அவாவாதானே அனுபவிக்கணும்?”

“ம்ம்ம்ம்…”

“புரியறதோல்லியோ..”

“நன்னாப் புரிஞ்சுண்டேன்…”

“அப்ப வாயைப் பொத்திண்டு சாப்பிட வாங்கோ..”

சியாமளா தன் கணவரின் முகத்தை சற்று நேரம் உற்று நோக்கினாள். உணர்ச்சிப் பெருக்கால், விம்மி விம்மி தணியும் அவர் மார்பை தன் வலது கரத்தால் மெல்ல தடவிவிட்டாள். கலங்கியிருந்த அவர் கண்களைத் தன் முந்தானையால் மெல்லத் துடைத்தாள்.

“எழுந்திருங்கோன்னா…” சியாமளா தன் கணவரை உலுக்கியெழுப்பி வீட்டுக்குள் அழைத்துச் சென்றாள்.
ராமசாமியின் மனதில் ஓடிய எண்ணங்களை அறியாத மீனா, அவர் தன் வீட்டுக்குள் நுழைந்ததும், அவள் தங்கள் வீட்டு ஹாலுக்குள் நுழைந்தாள். மல்லிகா சமையல் அறையில் இட்லித் தட்டுகளில் மாவை ஊற்றிக்கொண்டிருந்தாள்.