கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 31 10

ராணி மெல்ல திரும்பி தன் கணவனைப் பார்த்தாள். ராணி தன் கணவனை, அவர் முகத்தில் படிந்திருந்த தன் விழிகளை எடுக்காமல் சற்று நேரம் உற்று நோக்கிக் கொண்டிருந்தாள். அவள் மனதிலிருந்த இது வரை கடினமான உடைத்தெறிய முடியாத ஒரு கல், ஒரு உருகாத வலுவான பனிப்பாறை மெல்ல உருகியது. அவள் சித்தம் கலங்கியது. அவள் கண்களும் கலங்கியது. முகம் கோணியது. துககம் தொண்டையை அடைக்க கூவினாள்.

“சிவா … என் சிவா… ஐ லவ் யூ சிவா…. ஐ லவ் யூ …” நல்லசிவத்தை தன் மார்புடன் இறுக்கிக்கொண்டாள். அவர் முகத்தை தன் முகத்துடன் சேர்த்துக்கொண்டாள். அவர் முகமெங்கும் ஆசையுடன் முத்தமிட்டாள். அவர் மார்பில் தன் முகத்தைப் புதைத்துக்கொண்டு, தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள்.

நல்லசிவம் திகைத்தார். தன் மனைவி தன்னை நோக்கி, தன்னை மார்புடன் அணைத்து, தன்னிடம்
“ஐ லவ் யூ” என்று சொன்னதும் அவர் நிலை குலைந்தார். அடுத்த வினாடி அவர் மனம் வானில் மகிழ்ச்சியுடன் சிறகடித்தது. எத்தனை வருடங்களாக அவர் ராணியின் வாயிலிருந்து இந்த ஒரு வார்த்தைக்காக அவர் பொறுமையுடன் காத்திருந்தார்.

நல்லசிவத்தின் மனம் பின்னோக்கி வேகமாக ஓடியது. அவர் ஆசை மனைவி ராணி, இதே போன்ற ஒரு மழை பொழிந்து கொண்டிருந்த நாளில், பாம்பேயில், அவளுடைய பெற்றோர், முன்னறையில் படுத்திருக்க, தங்கள் படுக்கையறையில் தனித்திருக்கும் போது, எட்டு வயது சம்பத் அவர்களுடைய ஆசை மகன், அவர்கள் கட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருக்க, தன்னிடம் ஆவேசத்துடன் கத்தியது அவர் நினைவுக்கு வந்தது.

“உங்களை நான் காதலிக்கலை. உங்களை என்னால காதலிக்க முடியாது. நீங்க என் புருஷன். நீங்க என் உடம்புக்கு தாலிக்கட்டின புருஷன். இந்த உடம்பு மேல உங்களுக்கு முழு உரிமையிருக்கு. என் உடம்பை நான் உங்களுக்கு மறுக்கலை. மறைக்கலை. எப்பவும் என் உடம்பை உங்களுக்கு நான் மறுக்கமாட்டேன். உங்க ஆசைத் தீர என்னை நீங்க அனுபவிக்கலாம்.”

“ஆனா என் மனசுக்குள்ள இன்னும் என் ஞானசம்பந்தன் மட்டும்தான் இருக்கான். நான் காதலிச்ச ஞானசம்பந்தன் இருக்கான். அவன் ஒருத்தனைத்தான் என்னால காதலிக்க முடியும். உங்களை என்னால் காதலிக்க முடியாது. நீங்க என் கிட்ட ஆயிரம் தரம்
“ஐ லவ் யூ” ன்னு சொல்லலாம். என்னால அப்படி உங்க கிட்ட சொல்லமுடியாது ஏன்னா… இன்னும் நான் என் ஞானசம்பந்தனைத்தான் மனசுக்குள்ள் நினைச்சுக்கிட்டு இருக்கேன்…

“என் அப்பா அம்மா வற்புறுத்தலால, அவங்க அழுது அடம் பிடிச்சதால, நாங்க தூக்குல தொங்கிடுவோம்ன்னு என்னை மிரட்டினதால, நீங்களும் நாலுதரம் என்னைத்தான் பண்ணிக்குவேன்னு, ஆள்விட்டதால, உங்களுக்கு என் ஒறவு மொறை என்னை கழுத்தை நீட்டச்சொன்னதால, நான் உயிருக்கு உயிரா நேசிச்சவனை விட்டுட்டு, உங்களை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.”

“உங்க கூட உண்மையா நான் வாழறேன். உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு அப்புறம், உங்களைத் தவிர வேற எவனுடைய விரலும் என் மேலப் பட்டதில்லே… உங்க மூலமா ஒரு பிள்ளையைப் பெத்துக்கிட்டேன். நான் காதலிச்சவனை என்னால மறக்க முடியலை. அவன் நெனைப்புலத்தான் நான் என் புள்ளைக்கு சம்பத்குமார்ன்னு பேர் வெச்சேன்.”

“உங்கக்கூட என் உயிர் இருக்கற வரைக்கும் நான் உண்மையா வாழுவேன்… ஆனா உங்களை என்னால காதலிக்க மட்டும் முடியாது” ராணி உறுதியுடன் அவரிடம் பேசினாள்.

‘என்னங்க ஒன்னும் பேச மாட்டேங்கறீங்க…” ராணி, திடீரென மவுனமாகிவிட்ட தன் கணவரை உலுக்கினாள்.

“பழைய நினைவுகள்ல மூழ்கிட்டேன்.” அவர் ராணியை அணைத்துக்கொண்டார்.

நல்லசிவத்தை திருமணம் செய்து கொண்ட மூப்பத்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தன் கணவரை தன் மார்புடன் அள்ளி அணைத்துக்கொண்டு, அவருடைய பூரணமான காதலை தன் மனதால் உணர்ந்து,
“ஐ லவ் யூ” என ராணி சொன்னாள். அந்தக் கணம் வரை அவள் அடிமனதின் ஒரு மூலையில் உட்க்கார்ந்து கொண்டு, தன்னை ஆசையுடன் மணமுடித்த, தன் கணவனை, நல்லசிவத்தை
“நான் உன்னை காதலிக்கிறேன்” என்று சொல்ல தடையாக இருந்த ஞானசம்பந்தன் அந்த நொடியில் காணாமல் போனான்.

ராணிக்கு தன் மனதிலிருந்த ஒரு பெரிய பாரம் இறங்கியது போலிருந்தது. தன் மனசு முழுவதிலும் தன் கணவன் நல்லசிவம வியாபித்து இருக்க, அவள் அவர் மடியில் கண்மூடி படுத்திருந்தாள்.

“ராணி, உன் மனசாரத்தான்
“என்னை காதலிக்கறேன்னு’ சொல்றீயாமா?”