கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 31 10

ராமசாமி தங்கள் வீட்டை நோக்கி வெகு வேகமாக வருவதைக் கண்டதும் வெராண்டாவில் நின்று கொண்டிருந்த மீனாவுக்கு, அந்த நேரத்தில் தங்கள் வீட்டுக்கு வரும் ராமசாமியின் வருகை ஏதோ விபரீதமாகப் பட்டது. வெராண்டாவின் ஸ்க்ரீனை சட்டென இழுத்து மூடி அதன் பின் நின்று அவரைப் பார்க்கத் தொடங்கினாள்.

வேணாம் வேணாம்னு சொல்லிக்கிட்டே ஒதுங்கிப் போன சீனுவை, சும்மாயிருந்த சங்கை ஊதிக் கெடுத்த மாதிரி அவனை நான் வம்புக்கிழுத்து, அஞ்சு நிமிஷம் முன்னாடி, நான் கட்டிபுடிச்சி முத்தம் குடுத்ததை இந்த கெழம் பாத்து கீத்து தொலைச்சிடுச்சா…? அப்பாவும், இந்த வெட்டிப் பேச்சு வீராசாமி மேல ஒரு சாஃப்ட் கார்னர் வெச்சிருக்கார்; இப்பல்லாம் இதும் கிட்டத்தானே எந்தவிஷயமா இருந்தாலும் ஒரு ஒப்பீனியன் கேக்கறார்.

அந்த ஹோதாவுல இந்த எதிர் வீட்டு கெழம் எங்களை நெருக்கமா பாத்துட்டதை, நம்ம வீட்டுல போட்டுக் குடுக்கத்தான் இவ்வளவு வேக வேகமா வந்துகிட்டு இருக்கா? இது என்ன வம்பாப் போச்சு? அவள் திகைப்பும் திகிலுமாய் தன் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு ஒரு கணம் தடுமாறி மனதுக்குள் பதைத்தாள். என்ன செய்வது எனத் தெரியாமல் நின்றாள். சீனுவை உஷார் படுத்தலாமா? அவள் மனதில் குழப்பத்துடன் நின்றாள்.

தான் எடுத்த தீர்மானத்தை உடனடியாக செயலில் காட்டிவிட வேண்டும் என்ற எண்ணத்துடன், வேகமாக நடராஜன் வீட்டை நோக்கி ஓடி வந்த ராமசாமி, கருப்பனின் மெல்லிய உறுமலைக் கேட்டதும் ஒரு நொடி தயங்கி நின்றார்.

வந்த அவசரத்துல கையில தடியைக் கொண்டு வர்றலே? இன்னைக்குன்னுப் பாத்து இடுப்புல கோமணமும் கட்டலை… இந்த கர்மம் புடிச்ச நொண்டி சனியன் என் மேலப் பாய்ஞ்சு எங்கேயாவது ஏடா கூடாம புடுங்கி கிடுங்கி வெச்சா என் கதி என்னாவறது? ராமசாமி அந்த வீட்டின் கேட்டருகில் வந்தவுடன் ஒரு நொடி தயங்கி நின்றார்.

மாடிப்படிக்கட்டில் உட்க்கார்ந்து, மீனா தன்னை ஆசையுடன் இறுக்கியதில் அவள் மெல்லிய உடல், தன் மார்பில் உண்டாக்கிய கதகதப்பை மனதுக்குள் அனுபவித்துக்கொண்டிருந்த சீனு, கேட்டருகில் ராமசாமியைக் கண்டதும், தான் உட்க்கார்ந்திருந்த இடத்திலிருந்து தலையை நிமிர்த்த, ராமசாமியின் ஈரவேட்டி, அவர் மாடியில் காற்றில் ஆடிக்கொண்டிருப்பதைக் கண்டதும், அவன் மனதில் விருட்டென ஒரு அபாய சங்கு ஒலிக்க ஆரம்பித்தது.

போச்சுடா…! டேய்… சீனு உன் கதை கந்தலாயிடுச்சுடா !! மீனா என்னை கிஸ் அடிச்சதை இந்த
“புத்தர்” தன் வீட்டு மாடியிலேருந்து பாத்துட்டு இருக்கணும்..!! அய்யரு வூட்டுல மணியடிச்ச சத்தம் இன்னைக்கு கேக்கலையே? அதான் நெத்தியில பட்டை, கழுத்துல கொட்டைன்னு பதறிப் போய் இன்னும் பூஜையைக் கூட முழுசா முடிக்காம இங்க ஓடியாரா சாமியாரு?