கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 31 10

என் காதல் ஆரம்பிச்சு இன்னும் முழுசா இருபத்து நாலு மணி நேரம் கூட ஆவலை. அதுக்குள்ள என் காதலுக்கு சங்கு ஊதறதுக்கு இந்த அய்யிரு சிவகோலத்துல, காலங்காத்தால பல்லு வெளக்கிட்டு வந்துட்டாரு…!!

காதலியை எப்படி யாருக்கும் தெரியாம கிஸ் அடிக்கணும்ன்னு ஊருக்கெல்லாம் நான் உபதேசம் பண்றேன். ஆனா என் கதை இப்ப காத்துல பறக்கப் போவுது..!! இதுக்குத்தான் நேத்திக்கு
“வயசுக்கு வந்த” சின்னப் பொண்ணுங்க சகவாசம் கூடாதுன்னு விஷயம் தெரிஞ்ச நான் எல்லாருக்கும் சொல்றேன்.

அனுபவப்பட்ட பொண்ணுங்களா பாத்து கரெக்ட் பண்ணணும், கடலைப் போடணும்ன்னு நம்ம பசங்களுக்கு நான் சொல்றேன்…!! ஆனா இன்னைக்கு என் விதி எனக்கு முன்ன வலுவா நிக்கும் போது நான் என்ன செய்யமுடியும்? நான் கேவலமா ஆவப்போற விஷயம் நம்ம பசங்களுக்கு தெரிஞ்சா… என்னை எவனாவது மதிப்பானுங்களா?

எல்லாம் என் தலையெழுத்து…!! செய்கூலி, சேதாரம்ன்னு எந்த வீண் செலவும் இல்லாம, தன்னால வர்ற ஃபிரி ஆஃபர்ன்னு, லட்டு மாதிரி நமக்கு நல்லாத் தெரிஞ்ச மீனா எனக்கு கெடைச்சிட்டாளேங்கற அதுப்புல, அக்கம் பக்கத்தைப் பாக்காம, அவசரப்பட்டு அவ வீட்டுக்குள்ளவே அவளைக் கட்டிபுடிச்சது இப்ப வெனையா ஆகிப் போச்சு…!

நேத்துதான் வேலாயுதத்துக்கு பொறுத்தவன் பூமியாள்வான்டா… சும்மா சும்மா டாவடிக்கற பொண்ணு மார்லே கன்னாபின்னான்னு கையை போடாதடா, உன் ஆளு பயந்துடப் போவுதுன்னு புத்தி சொல்லிட்டு வந்தேன்… அவனுக்கு பாடம் நடத்திட்டு நான் சும்மாயிருந்தனா? மீனா கிட்டவந்தா என் புத்தி எங்கப் போச்சு… டேய் சீனு… உன் தப்புக்கு, உன்னை நீயேதான், உன் செருப்பால அடிச்சுக்கணும்…!!

மீனா சொன்னாளேன்னு ஏற்கனவே தாடி மீசையெல்லாத்தையும் வழிச்சிட்டு அடையாளம் தெரியாம நிக்கறேன்..!! இப்ப இந்தத் தெரு பெரிய மன்சன் ராம்சாமி, எனக்கு கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதை மேல ஏத்தறதுக்கு வேகமா வந்துக்கிட்டு இருக்கான்.

ம்ம்ம்… விதின்னு சொல்றாங்களே அது இதானா? நடக்கறது நடக்கட்டும் அப்படீன்னு வுட்டுடலாமா? இல்லே…
“டேய் சீனு உனக்கு மீயுஜிக் ஸ்டார்ட் பண்ண வந்துட்டேன்னு” தலைத் தெறிக்க ஓடியார அய்யரை தெரு கோடிக்கா தள்ளிகிட்டு போய்… ஒரு தபா மன்னிச்சுடு
“தலை” ன்னு அவரு கால்ல சட்டுன்னு விழுந்துடலாமா?

சீனுவின் மனம் நிலைமையை எப்படி சமாளிக்கலாம் என்று மெல்லிய பயத்துடன் ஊசலாடிக் கொண்டிருந்தது. மவனே நீ என்னைக்காவது இந்த பெருசுகிட்ட மரியாதையா ஒரு வணக்கம் சொல்லியிருப்பியா…? அய்யரு உன் வருங்கால மாமனாரோட க்ளோஸ் பார்ட்டிட்டா… நான் சொல்றது உனக்குப் புரியுதாடா நாயே? அவன் மனசு அவனைப் புரட்டிப் போட்டு இரக்கமில்லாமல் அடித்தது.

வேகமாக வந்த ராமசாமியின் மனதில் இன்னொரு விஷயம் பட்டென உதித்தது. இப்ப நான் நடராஜன் வீட்டுக்குள்ளப் போனா அந்த கேடு கெட்ட சீனுக்கு நான் தான் அவனைப் பத்தி போட்டுக்குடுக்க வந்திருக்கேன்னு தெரிஞ்சு போவும்… அவன் என்னை மொறைச்சுக்குவான். அவனோ ஒரு கேடு கெட்ட குடிகாரப்பய…!! அவனைப் பத்தி நல்லபடியா ஒண்ணும் சொல்றதுக்கு இல்லே?

நான் தனியா எங்கயாவது போகும் போது என்னை மடக்கி என் வேட்டியைப் புடிச்சு இழுத்து வம்பு பண்ணாலும் பண்ணுவான்! இல்லேன்னா இந்த நொண்டிக்கருப்பனுக்கு அப்ப அப்ப அவன் பொறை வாங்கிப் போடறானே; இந்த சனியனை எனக்குப் பின்னாடி
“சூ” காட்டி வுட்டாலும் வுடுவான். அதுவும் அவன் நன்றிக் கடனைத் தீத்துடறேண்டா
“படவா ராஸ்கல்ன்னு” என் காலை கவ்வினாலும் கவ்வித் தொலைக்கலாம்..

மொதல்ல அவன் இங்கேருந்து போய்த் தொலையட்டும். நின்ற இடத்திலிருந்து நடராஜன் வீட்டை அவர் நோட்டம் விட்ட போது, மாடிப்படியோரத்தில் மீனாவை காணவில்லை. சீனு மட்டும் மாடிப்படிக்கட்டில் தன் தலையை கவிழ்த்துக் கொண்டு உட்க்கார்ந்திருந்தான்.

ராமசாமி தான் இருந்த குழப்பத்திலும், கருப்பனிடம் கொண்டிருந்த பயத்திலும், வெரண்டாவை சரியாக ஏறெடுத்து நோக்காததால், மீனா திரைச்சீலைக்கு பின் நின்றவாறு தன்னைப் பார்த்துக்கொண்டிருந்தது அவர் கண்ணுக்குப் புலப்படவில்லை. தான் வந்ததை யாரும் பார்க்கவில்லை என்ற திருப்தியில், ஒரு பெருமூச்சுடன் ராமசாமி சத்தமெழுப்பாமல் வந்த வழியே திரும்பி தன் வீட்டை நோக்கி வேகமாக நடந்தார்.

ராமசாமி தன் வீட்டை நோக்கி நகர்ந்ததும், நொண்டிக் கருப்பனும் ஆசுவாசத்துடன் ஒரு முறை தன் உடலை முறுக்கி நீட்டிக்கொண்டான். பின் நிம்மதியாக முருங்கைமரத்து அடிவேரில் தன் உடலைச்சாய்த்துக்கொண்டு, இளம் வெய்யில் தந்த சுகத்தில் கண்ணுறங்க ஆரம்பித்தான்.
“அடியே சியாம்ளீ… சட்டுன்னு குடிக்கறதுக்கு கொஞ்சம் தூத்தம் கொண்டாடீ…” ராமசாமி தன் மனைவியை உரக்கக் கூவி அழைத்தார்.

“இப்ப எதுக்கு இப்படி ஒரு கூப்பாடு… எனக்கு என்ன காது அடைஞ்சாப் போச்சு?”

சியாமளா தன் வலது புறத்தை ராமசாமிக்கு கொடுத்த அர்த்தநாரினி. அவர் வீட்டில் முப்பத்தஞ்சு வருஷத்துக்கும் மேலாக சமையலறை மேடையில் குக்கரும் கையில் சில்வர் கரண்டியுமாக நிற்பவள், தன்னைக் கொண்டவரிடம் எல்லையில்லா அன்பு பூண்டவள்.

சியாமளா தன் கணவரின் கூப்பிட்ட குரலுக்கு பதிலாக
“ஏன்னா கூப்பிட்டேளா?” என்னும் தன் வழக்கமான முனகலைப் பதிலாக்கி வென்னீர் டம்ளரை அவரிடம் நீட்டினாள்.

ராமசாமிக்கு சியாமளா கொடுத்த வென்னீரின் சுகம் அவர் தொண்டைக்கு வெகுவாக இதமளிக்க, அந்த இதமான சுகத்தில் சிறிது நேரம் தன் கண்களை மூடி உட்கார்ந்திருந்தார். தன் கண்ணைத் திறந்தபோது சியாமளாவை பக்கத்தில் காணாமல் மீண்டும் குரல் கொடுத்தார்.

“சியாம்ளீ…அடியே சியாம்ளீ… இங்க வாடீ… ஒரு நிமிஷம் பக்கத்துல நிக்கமாட்டாளே” அவர் கண்டத்திலிருந்து மெல்லிய கூச்சல் கிளம்பியது.