ஒரு பொண்டாட்டியின் ஏக்கம் 4 159

அவர் என் கணவரின் பாஸின் மனைவி, அவர் எப்படி அழைத்தாலும் நான் கோப பட முடியாது. இருப்பினும் அவர் இவ்வாறு கூறும் போது அவர் பண்பு புரிந்தது.

“இட்’ஸ் ஓகே மேடம்,”உங்களுக்கு அப்படி கூப்பிட உரிமை உண்டு.

அவர் சிரித்துக்கொண்டு,”உரிமை கிரீமை ஒன்றும் கிடையாது, வயதை பயன்படுத்தி கொண்டேன். எனக்கு சம்பிரதாயமாக பேசுவது பிடிக்காது. நீயும் என்னை மேடம் என்று கூப்பிடாதே, என் பெயர் கௌதமி, அப்படியே என்னை கூப்பிடு.”

“யெஸ் மேடம்..சாரி கௌதமி.”

“தட்’ஸ் எ குட் கேர்ள்.”

அவர் கண்கள் நேருக்கு நேர் பார்க்க பார்க்க கடினமாக இருந்தது. அவரின் கூர்மையான பார்வையில் நான் எதுவும் மறைக்க முடியாதென்று தோன்றியது. அவர் நிச்சயமாக மிகவும் அறிவார்ந்த பெண். என் முகபாவத்தை நான் முடிந்த அளவுக்கு இயல்பான நிலையில் வைக்க முயற்சித்தேன். அனால் அவர் பார்வைக்கு சாமானியமாக எதுவும் தப்பாது என்று தோன்றியது.

“நீ இதற்கு முன் பலமுறை வந்து இருந்தாலும் உன்னை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. எனக்கு இன்றைக்கு அந்த வாய்ப்பு கிடைத்ததில் ரொம்ப சந்தோசம்.”

அவர் சொல்வது உண்மை தான். என் கணவர் வேலை செய்யும் நிறுவனம் வேகமாக முன்னேறி வரும் ஒரு நிறுவனம். இப்படி பல முறை பார்ட்டி நடந்து இருக்கு அனால் இவரை நான் முன்பு சந்தித்ததில்லை.

“உங்களை சந்திப்பதில் எனக்கு தான் மேடம்.. சாரி கௌதமி சந்தோசம்,” என்றேன்.

கௌதமி என் கையை அவர்கள் கையில் பற்றிக்கொண்டு,”உன் புருஷனை பற்றி என் கணவர் மிகவும் உயர்வாக நினைக்கிறார். அவர் ‘வன் ஒப் தி பிரைட்டெஸ்ட் யங் மனஜேர்ஸ்’ என்பர்.”

இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ஓர் புன்முறுவல் மட்டும் செய்தேன்.

“உன் புருஷனை நினைத்து உனக்கு பெருமையாக இருக்க வேண்டும்.”

என் மனதோ பெரும் குழப்பத்தில் இருக்க இவர்கள் வேறு என் புருஷனை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்கள். நான் சிரமப்பட்டு ஒரு புன்னகையை என் முகத்தில் வரவழைத்தேன். அவர்கள் இன்னும் சில நேரம் என்னிடம் பேசிக்கொண்டு இருந்தார். நான் முடிந்தவரை இயல்பாக அவரிடம் பேசினேன். அனால் அவர்களுக்கு எதோ ஒரு பிரச்னை இருக்கும் என்று தோன்றி இருக்க வேண்டும்.

போகும் முன் சொன்னார்கள்,” என்னை ஒரு தோழியாக நினைத்துக்கொள் என்னுடன் எதுவும் ஷேர் பண்ணனும் என்றால் தயங்காமல் கூப்பிடு. முடிந்தவரை உதவி செய்கிறேன்.”

6 Comments

  1. காமக் கதையிலும் ஒரு குடும்பக் கதையை சுவையாகத் தந்த எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள்.

  2. En manaivi ennai cuckold aakkiya kadhai.story continue pannunga bro

  3. Awesome story

  4. எனக்கு ஒருத்தர பிடித்துவிட்டால் போதும் அவர்களை விட மாட்டேன் அந்த கதையையும் இதேபோல் சுபமாக முடித்து வையுங்கள் ப்ளீஸ்

    1. Epo antha stry finish aachi

Comments are closed.