என்ன பண்றது என் காதலனச்சே!! 2 154

“ஏங்க மரியாதை குறைஞ்சுருச்சு எதுவும் இல்ல.. கிஷோர் எதையோ நினச்சு சங்கட படறான், அதுக்கு தான் சௌமியா உம் கூட போறா”

“சின்னவனுக்கு ரொம்ப செல்லம் கொடுத்து கெடுத்து வச்சுருக்க டி நீ.. அருமையான பொண்ணு மலர், நம்ம வீட்டுக்கு மருமகளா வந்திருந்தா குடும்பமே சந்தோசமா இருந்திருக்கும். உன் மவன் எல்லாத்தையும் கெடுத்து விட்டுட்டான்”

“ஏங்க சும்மா திட்டிட்டே இருக்காதீங்க அவனை, ஏன் நீங்க கூட எத்தனை தடவ என்னை எங்கம்மா வீட்டுல விட்டுட்டு ரெண்டு நாள்ல திரும்ப வந்து கூட்டிட்டு போயிருக்கீங்க, அது மாதிரி கிஷோரும் மலரை கூட்டிட்டு வருவான்”

“இதுவும் அதுவும் ஒன்னு இல்ல டி, எனக்கு என்னமோ மலரை கை விட்டுருவானோ ன்னு தோணுது. ஏன் டி என் மேல ஏதாச்சும் தப்பு இருக்கா? நான் மலர் கூட நெருக்கமா இருந்ததை நினச்சு தப்பா எடுத்திருப்பானோ?”

“உங்களுக்கு என்ன புத்தி கெட்டுப்போச்சா? மருமக மேல இவ்ளோ பாசம் காட்டுற மாமனார் நினச்சு எல்லாரும் சந்தோசம் படுவாங்க. அதுங்க சின்னசிருக குள்ள ஏதாச்சும் இருக்கும்”

“சரிடி என்ன ரெண்டு பெரும் உள்ள போனாங்க, இன்னும் வரல”

“நான் வேணா, என்னனு போய் பாத்துட்டு வரட்டுமா?”

“நீ போகாத, கதிரை போய் கேக்க சொல்லு”

அறைக்குள்ளே மகனுடன் விளையாடி கொண்டிருந்த கதிர், தன் அறைக்கு வந்த அம்மா வள்ளியை பார்த்து சட்டென நெற்றியை பொத்தி கொண்டான்.

“டேய் என்னடா நெத்தியை மூடுற”

கையை எடுத்துவிட்டு “ஹ்ம்ம் அவ கிட்ட கேக்காம ப்ளவுஸ் எடுத்து மலர் ட்ட கொடுக்க சொன்னேன் ல. அதுக்கு தான் சௌமியா எனக்கு பரிசு கொடுத்திருக்கா”

சிரிப்பை அடக்கிக் கொண்டே பாசமாக அவன் நெற்றியை தேய்த்து விட்டாள். “இருக்கட்டும் கதிர், கிஷோர் சோகமா இருக்கான் ன்னு, சௌமியா போய் பேசிகிட்டு இருந்தா. போய் என்னன்னு பாத்துட்டு அப்டியே மதியத்துக்கு சமைச்சு வைக்க சொல்லு”