என்ன பண்றது என் காதலனச்சே!! 2 153

எங்களுக்கு மலர் மருமகளா வர்றதுல ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்.. அதுவும் இவ்ளோ பெரிய இடத்துல இருந்து..

இப்பொழுது சௌமியா குறுக்கிட்டு நீங்களே பேசிட்டா எப்புடி மாமா, கிஷோர் கிட்ட கேக்க வேண்டாமா?

சிங்காரம்: அம்மாடி நீ சொல்றதுலாம் சரி தான்மா.. ஆனா தம்பி க்கு பிடிக்காமலா ரெண்டு பேரும் லவ் பண்ணாங்க..

சௌமியா: மனசு எப்போவும் ஒரே மாதிரியே இருக்காது இல்லையா.. மாறலாம்.

கிஷோர் அப்பா: சௌமியா…

சிங்காரம்: இருங்க சம்பந்தி, உங்க மூத்த மருமக எனக்கு மக மாதிரி.. நானே எடுத்து தெளிவா சொல்றேன்..

இங்க பாரும்மா, மாப்ள கிஷோர் நல்ல பெரிய படிப்பு படிச்சிருக்கார், ஆனா ஒரு நல்ல வேலை இருந்தா தான ஊருக்குள்ள மதிப்பு, அட மதிப்பை விட்டுதள்ளு.. கல்யாணம் ஆச்சுன்னா குடும்பத்தை நடத்துறதுக்கு நல்ல வேலை வேண்டாமா?

மலர் கழுத்துல தாலி கட்டட்டும் மாப்ள.. வேலையே வேண்டாம், நம்மகிட்ட இருக்குற சூப்பர் மார்க்கெட் பிசினஸ்ஸை மாப்பிளையே சொந்தமா வச்சு நடத்தட்டும். மாப்பிள்ளை நூறு பேருக்கு வேலை போட்டு கொடுப்பாரு..

இந்தா கைப்புள்ள, கடைய மாப்பிள்ளை பேருல சிக்கல் எதுவும் வராம மாத்திரலாம் தான..

கைப்புள்ள ராமசாமி: ஐயா தம்பி கையெழுத்து போட்டா ரெண்டே நாளுள்ள மாத்திரலாம்.

சிங்காரம்: பாருங்க ரெண்டு நாள் தான். நிச்சயம் ஆன உடனே கடைய பேர் மாத்துறதுக்கு வேலை ஆரம்பிச்சுருவோம்..