என்ன பண்றது என் காதலனச்சே!! 2 153

தாயி இதுல 65 ரூபா தான் இருக்கு, இன்னும் 5 ரூபா மட்டும் கொடு தாயி.

சில்லறை இல்ல. நீங்க அடுத்து வரும் போது வாங்கிக்கங்க.

இதையே தான் நேத்தும் சொன்ன, தினமும் அஞ்சு அஞ்சு ரூபா கம்மியா கொடுத்தா, நான் எப்படி தாயி பொழப்பு நடத்த.

அதெல்லாம் உங்களுக்கு நல்லா தான் கட்டுப்படி ஆகும். சும்மா வழவழ ன்னு பேசாம போங்க. அடுத்து வரும் போது பாத்துக்கலாம்.

பாவம் அந்த தள்ளுவண்டி காரர் முணுமுணுத்தவாறே நகர்ந்து சென்றார்.

அந்த பெண் சௌமியா பக்கம் வந்திருக்க, “ஏய்ய் சௌமியா!! கூப்பிட கூப்பிட காது கேக்காம என்னடி சிலையா நிக்குற” என்று அவள் தோளை பிடித்து உலுக்கினாள்.

சௌமியா: பானு அக்கா எப்போ வந்தீங்க

பானு: நல்லா கேட்ட போ!! என்னடி ஏதாச்சும் நேத்திகடனா இப்படி உச்சி வெயில்ல நிக்கணும் ன்னு, காய் வாங்க கூப்பிட்டதுக்கு கூட வரல. இப்போ பாரு அவர் போயிட்டாரு.

சௌமியா: (கண்களில் நீருடன், மூக்கை உறிஞ்சுக்கொண்டே) இல்லக்கா, கிஷோரு (அடுத்த வார்த்தை வர விடாமல் தொண்டை அடைத்தது)

பானு: (பயந்து போய்) கிஷோருக்கு என்னடி ஆச்சு? (சௌமியா வின் முகத்தை உற்று கவனித்து விட்டு) உனக்கு ஏன் டி கண்ணெல்லாம் சிவந்து போயி, முகமே வாடி போயி இருக்கு.

சௌமியா: அக்கா, கிஷோரு வீட்டுல சண்டை போட்டுட்டு காலைல போனான், இன்னும் வரல க்கா. (கண்களில் இருந்து நீர் வலிந்து தரையை தொட்டது, அடுத்தும் அவள் கண்களில் நீர் இன்னும் ஊற்றியது)

பானு: அடச்சீ!! கிறுக்கு சிறுக்கி!! இதுக்கு தான் இம்புட்டு அழுதியா. நான்கூட என்னமோ எதோ ன்னு நினச்சு பதறி போயிட்டேன் டி. சரி நம்ம கிஷோர் சண்டை லாம் போடா மாட்டானே!! எப்போவும் சிரிச்ச முகமா அக்கா அக்கா என்னை சொல்வான். அவனா சண்டை போட்டான், சரி அவனுக்கு போன் போட்டு பாக்க வேண்டி தானே டி.