என்ன பண்றது என் காதலனச்சே!! 2 150

அவள் கணவன் அறைக்குள்ளே இருக்க, மாமனாரும் மாமியாரும் சோபாவில் அமர்ந்து இருந்தனர். இருவரையும் கண்டு கொள்ளாமல் சௌமியா நேராக கிஷோரின் அறைக்குள் சென்றாள். அவர்களுக்கும் சௌமியா விடம் என்னவென கேட்க தைரியம் இல்லாமல் அமர்ந்து இருந்தார்கள்.

கிஷோர் அங்கே ஒரு புறமாக ஒருக்களித்து படுத்து அவன் முகத்தை கைக்குட்டையால் மூடி இருந்தான். மெதுவாக அவனருகில் அமர்ந்த சௌமியா, அவன் கைகளை ஆதரவாக தடவி விட்டு, அவன் முகத்திலிருந்த துணியை விளக்கினாள்.

தம்பி!! ஏன் டா இவ்ளோ நேரம் எங்க போயி தொலைஞ்ச. நான் ரொம்ப பயந்து போயிட்டேன் டா.

ப்ளீஸ் அண்ணி, என்னை கொஞ்சம் தனியா இருக்க விடுங்க, தயவு செஞ்சு இங்க இருந்து போங்க, எல்லாம் உங்களால தான்.

கிஷோரின் கடும் சொற்கள் ஒவ்வொன்றும் அவளை ஈட்டி போல் குத்தி காயப்படுத்த, அவள் உடைந்த குரலில் “தம்பி, என்னை பார்த்து சொல்லு டா, என் முகத்த பார்த்து போக சொல்லு, நான் போறேன்”

அவன் எழுந்து உக்காந்து அவளை பார்க்க, அன்பே உருவமாய் திகழும் என் அண்ணியின் முகமா இப்டி கலையிழந்து காணப்படுகிறது, என்மேல இவளுக்கு ஏன் இப்டி ஒரு பாசம், இப்டி அழுது அழுது சிவந்து போன கண்கள்ல இன்னும் கண்ணீர் குளம் மாதிரி தேங்கி இருக்குது. அடுத்து ஒரு வார்த்தை கோவமா சொன்னா கூட, பொலு பொலு வென அந்த குளம் கீழே சிந்தி விடும் போல இருக்குது. அவள் தலை முடி களைந்து, கண்கள் வீங்கி பார்க்கவே பாவமாய் இருந்தால் அண்ணி. அவள் என்னதான் தவறு செய்தால் என யோசிக்க, ஒன்றும் கிட்டவில்லை, மாறாக நான் செய்த தவறிலிருந்து என்னை மீட்க வந்தவளை நான் இப்டி அலங்கோலமா ஆக்கி விட்டிருக்கிறேன். பாவம் அவள்!! நான் அவளை வெறுத்து விடுவேன் என நினைத்து பயந்து போய் இருக்கிறாள், ஆனால் நான் அவளை சந்திக்க துணிவு இல்லமால் அவளை தவிர்க்கிறேன் என்பது அவளுக்கு புரியவில்லை. எனக்கே என்மேல் வெறுப்பாய் இருந்தது,

கிஷோர் மெதுவாக அவன் விரல்களை அவள் நெற்றியில் படர விட்டு களைந்து இருந்த அவள் முடிகளை அவள் காது ஓரங்களில் ஒதுக்கி விட்டான், அவள் முந்தானை நுனியை எடுத்து அவள் கண்களை துடைத்து விட்டான்.