என்ன பண்றது என் காதலனச்சே!! 2 153

“எதுக்கு சாரி சொல்ற, நீ அவளையே நினைச்சுக்கோ, எனக்கு பிரச்னை இல்ல. வேணும்னா போய் கூட்டிட்டு வா” என்று கண்களில் நீர் தேங்க உடைந்த குரலில் சொன்னாள்.

“அதெல்லாம் தேவை இல்ல அண்ணி, நான் சாரி சொன்னது எதுக்குன்னா, உங்க சமையலுக்கு நான் எதுவும் பாராட்டு தரலை ல அதுக்கு தான்”

உதட்டில் புன்னகை எட்டி பார்க்க, அவன் முகத்தை நேரடியாக பார்க்காமல் வலது பக்கம் தலையை திருப்பி “அப்போ பாராட்டு” என்றாள்.

“ம்ஹூம் நோ, நான் பாராட்ட மாட்டேன்”

அவள் புருவங்கள் சுருங்கி அவனை முறைக்க, அடுத்த நொடி அவள் புருவங்களை ஒட்டியவாறு அவள் நெற்றியில் முத்தமிட்டு “இது அதிரசத்துக்கு”

கண்களை மூடி சிரிக்க, அவள் கன்னங்கள் பொறுமியது.

அடுத்து அவள் கன்னத்தில் முத்தம் வைத்து விட்டு “இது லட்டுக்கு” என்றான்.

கண்களை திறந்தவள் அவனை பார்த்து சிரித்து தேங்க்ஸ் சொல்ல வாயெடுக்க, அவள் உதட்டில் முத்தம் வைத்து “இது பிரியாணிக்கு” என்றான்.

“அய்யயோ!!! சாரி அண்ணி ஒரு ப்லொவ் ல உதட்டுல முத்தம் கொடுத்துட்டேன். மன்னிச்சுருங்க”

அவள் பதில் எதுவும் சொல்லாமல் எந்த ஒரு பாவனையும் முகத்தில் காட்டாமல் அவன் முகத்தையே கூர்மையாக பார்த்து கொண்டிருந்தாள். தன் வலது கையால் அவன் கன்னத்தில் பளாரென்று ஓங்கி ஒரு அரை கொடுத்து “இது நீ மலரை நினைச்சதுக்கு”

பளாரென்று கன்னத்தில் கொடுத்த அரையில் அவன் முகம் திரும்ப, திரும்பிய முகத்தை பிடித்து இழுத்து அவன் உதட்டில் முத்தம் வைத்து “இது நீ இனிமேல் மலரை நினைக்க கூடாது அதுக்காக”