என்ன பண்றது என் காதலனச்சே!! 2 153

சௌமியா: இங்க பாருங்கக்கா இருபத்தி ஏழு தடவ போன் போட்டிருக்கேன், அவ எடுக்கவே இல்ல, பயமா இருக்குக்கா.

பானு: சரி இப்போ என்ன!! சண்டை போட்டா தான் போடட்டுமே!! கோவம் கொறஞ்சதும் கொஞ்சம் நேரம்சென்னு பொறுமையா வருவான். நீ பயப்படாம உள்ள போ

சௌமியா: இல்லக்கா நான் இங்கயே இருக்கேன். வீட்டுக்குள்ள இருந்தா, கிஷோர் கூட சண்டை போட்ட அவங்க முகத்தை பாக்க பாக்க கோவம் தான் வருது. நீங்க போங்க.

பானு: ஹ்ம்ம்!! என்ன ஊருல உலகத்துல இல்லாத கொழுந்தனோ தெரியல. நீ வேணா உன் கொளுந்தனுக்காக வெயில்ல நில்லு. நான் போறேன் என் வீட்டுக்கு.

சௌமியா: நான் எப்போக்கா அவனை கொளுந்தனா பாத்து இருக்கேன். அவன் எப்போவுமே என் சொந்த தம்பி. (என்று சொல்லிவிட்டு முந்தானையால் முகத்தை மூடி கண்ணீரை துடைத்து கொண்டிருந்தாள்)

சில அடிகள் வீட்டை நோக்கி நடந்து சென்ற பானு சௌமியா விடம் திரும்பி “உன் தொம்பி வந்துட்டான் டி, நல்லா வச்சு கொஞ்சிக்கோ” ன்னு கத்தி விட்டு அவள் வீட்டிற்குள் சென்றாள்.

சௌமியா தன் கண்ணீரை துடைத்து விட்டு முந்தானையை எடுக்க சரியாக கிஷோர் பைக் வந்து நின்றது. இறுகிய முகத்துடன் வந்த கிஷோர் பைக்கை நிறுத்திவிட்டு, சாவியை கூட எடுக்காமல் வேகமாக வாசலை கடந்தான்.

அவனை கண்ட ஆனந்தத்தில் அவன் கையை பிடித்து “தம்பி” என்றாள். துக்கம் மற்றும் கோவம் இரண்டும் கன்னாபின்னா வென அவன் முகத்தில் தாண்டவமாட அவள் கையை உதறி விட்டு வீட்டிற்குள் நுழைந்தான். கல்யாணம் முடிந்து அவள் இங்கு வந்த இரண்டு வருடங்களில் சௌமியா வை கிஷோர் உதாசீனப்படுத்தியது இதுவே முதல் முறை. அதுவும் நேற்று வந்த மலருக்காக, ஏற்கனவே அவனை காணாமல் நொந்து போயிருந்த அவளுக்கு இது கிஷோர் அவளிடமிருந்து விலகி போவது போல் தெரிந்தது. நான் இல்லாம வேற யாரால அவனை பாசமா பாத்துக்க முடியும், என்ன ஆனாலும் கிஷோரை விட்டு விட கூடாது என்று தீர்க்கமாக முடிவு எடுத்தாள். அவன் விட்டு சென்ற பைக்கில் இருந்து சாவி எடுத்து வீட்டிற்குள் நுழைந்தாள்.