இது எல்லாமே மாப்ள கிஷோர் சொல்றதுல தான் இருக்கு.
வள்ளி: சம்பந்தி எங்க என் மருமக மலரை காணோம்..
சிங்காரம்: அவ கார்ல தான் உக்காந்து இருக்கா, கிஷோர் கூப்பிட்டா தான் வருவேன் ன்னு அடம் பிடிச்சு உக்காந்திட்டா..
வள்ளி: டேய் கிஷோர் ஒழுங்கா போய் மலரை கூட்டி வா..
கிஷோருக்கு மனதெல்லாம் பட்டாம்பூச்சி பறந்தாலும் சௌமியாவை பார்த்து அவள் சம்மதத்திற்கு காத்திருந்தான்.
சௌமியா இன்னும் திகைப்பிலிருந்து மீளவில்லை, தன்னை அறியாமல் தலை அசைத்து கிஷோருக்கு சம்மதத்தை தெரிவித்தாள்..
கிஷோர் வேகமாக ஓடி காருக்கு சென்றான்.. அது ஒரு ஜாக்குவார் – XF மாடல் கார், ஐம்பது லட்சம் இருக்கும். பின் சீட்டில் சோகமாக மலர் அமர்ந்து இருந்தாள்..
கிஷோரை பார்த்ததும் கார் ஜன்னலை கீழே இறக்கினாள்..
மலர்
அவள் திரும்பாமல் அழுது அழுது வீங்கிய முகத்துடன் அவனை கண்டு கொள்ளாமல் இருந்தாள்.
மலர் வா உள்ள
போ.. சிணுங்கினாள்..
என்னை மன்னிச்சுரு மலர், இனிமேல் நான் அந்த மாதிரி நடந்துக்க மாட்டேன்..
என்மேல சத்தியம் பண்ணு..
உன்மேல சத்தியமா..