எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 16 53

“தேங்க்ஸ்டி..!!” என்று இவன் இப்போது பைத்தியம் போல் உளறுவான்.

ஐந்தே வருடங்கள்.. ஒன்று கழுத்தை பற்றி தொங்கும்.. ஒன்று மீசை பற்றி இழுக்கும்.. ஒன்று தொடையில் விழுந்து கடிக்கும்.. ஒன்று மூக்கில் விரலை நுழைக்கும்.. எல்லாவற்றிற்கும் கடைக்குட்டியோ மடியில் கிடந்துகொண்டு, எட்டி எட்டி இவன் மார்பிலேயே உதைக்கும்..!! ஐந்து குழந்தைகளுடன் இவன் அவஸ்தைப் படுவதை.. அடக்கமுடியா சிரிப்புடன் அவள் பார்த்து ரசிப்பாள்..!!

இந்த மாதிரியாகவே அவனது கனவு நீளும்.. திரும்ப திரும்ப அதே கனவினை காணுவான்.. சற்றேனும் திகட்டிடாது..!!

உறக்கத்தில் காண்கிற கனவு, உறங்கி எழுகையில் உபயோகமில்லாமல் போகலாம்.. விழித்திருக்கையில் காண்கிற கனவு, விழிப்புடனே வைத்திருக்க உதவலாம்..!! அசோக் கண்ட கனவு அவனது மனநிலைக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.. அடுத்த நாளை நோக்கி அவனது வாழ்க்கையை உந்தித் தள்ளியது.. நனவாக அக்கனவினை மாற்றிட வேண்டுமென.. நம்பிக்கையையும், வைராக்கியத்தையும் கொடுத்தது..!!

அசோக்கிடம் மட்டுமில்லாது அவனை சுற்றி இருந்தவர்களிடமும் ஒரு மாற்றத்தை காண முடிந்தது..!! அவனிடம் எதிர்மறையாக பேசுவதை முதலில் விட்டொழித்தார்கள்.. அசோக்கின் மனநிலையை இலகுவாக்குகிற மாதிரியான வார்த்தைகளையே கவனமாக சிந்தினர்.. ‘இன்றோ நாளையோ மீரா கிடைத்துவிடப் போகிறாள்’ என்பது மாதிரியான கற்பனையை அவர்களுமே மனதுக்குள் வளர்த்துக் கொண்டனர்.. அது அவர்களது பேச்சிலும் வெளிப்பட்டது.. அசோக்கின் மன இறுக்கம் அகல, அது மிக அவசியமாயிருந்தது..!!

“தைரியமா இரு மச்சி.. எங்க போயிட போறா அந்த கோயில்பட்டி வீரலட்சுமி.. புடிச்சிடலாம்..!!” என்று நம்பிக்கையாக சொன்னது, எப்போதும் எதிர்மறையாக பேசுகிற சாலமனேதான்.

எல்லாம் பாரதி இட்ட கட்டளை.. தனது குடும்பத்தாரிடம் மட்டுமில்லாது, அசோக்கின் நண்பர்களிடமும் கடுமையான உத்தரவு பிறப்பித்திருந்தாள்..!! அசோக் தூக்க மாத்திரையை தூக்கி சென்ற விஷயத்தை.. இரண்டு பேரிடம் மட்டுமே பாரதி சொல்லியிருந்தாள்..!! ஒன்று அசோக்கின் அப்பா மணிபாரதியிடம்.. இன்னொன்று கிஷோரின் அக்கா பவானியிடம்..!! பவானியை டெலிஃபோனில் அழைத்த பாரதி.. அன்றே அவளை வீட்டுக்கு வரவழைத்தாள்.. அசோக்கின் நிலையை கவலையுடன் எடுத்துரைத்தாள்..!!

“எப்படி இருந்த எம்புள்ளை இப்படி ஆயிட்டான்.. ஆளாளுக்கு எதை எதையோ சொல்லி அவன் மனசை ரொம்ப நோகடிச்சுட்டோம்..!! அவனை நெனச்சா எனக்கு ரொம்ப பயமா இருக்குது பவானிம்மா..!!” தளர்ந்த குரலில் சொன்ன பாரதிக்கு,

“ப்ச்.. என்னத்தை நீங்க..?? நீங்களே இப்படி உடைஞ்சு போயிட்டா எப்படி..?? ஹ்ம்ம்.. அவனை பத்தி நீங்க இனிமே வொர்ரி பண்ணிக்காதிங்க.. எல்லாம் நான் பாத்துக்குறேன்..!!” பவானி தைரியமூட்டினாள்.

அசோக்கை தனது அரவணைப்புக்குள் எடுத்துக்கொண்டாள் பவானி..!! தனது உறவினன் என்பதை மறந்து.. மனஅழுத்தம் கொண்ட ஒரு பேஷண்ட்டை எப்படி அணுகுவாளோ, அந்த மாதிரி மிக கவனமாக அவனை அணுகினாள்..!! அசோக்கின் நிலை பற்றிய கவலையும், பாரதிக்கு கொடுத்த வாக்குறுதியும் அவள் மனதில் இருந்தன.. ஆனால் அவற்றை எப்போதும் அவளது குரலிலோ, நடவடிக்கையிலோ அவள் காட்டிக்கொண்டது இல்லை..!! இயல்பாக நடந்து கொள்வாள்.. இலகுவான குரலில் பேசுவாள்.. மிக அழகாக அசோக்கின் கவனத்தை திசை திருப்புவாள்.. அவன் அறியாமலே அவன் மனதுக்குள் நம்பிக்கை விதைகளை தூவுவாள்..!! மேற்சொன்ன அசோக்கின் மனமாற்றத்தில் பவானியின் பங்கும் மிக முக்கியமானது..!!

“உனக்கு ஒரு விஷயம் தெரியுமா..?? Stress-ன்றது நம்ம எல்லார்ட்டயுமே இருக்குது அசோக்.. நம்மளோட நார்மல் லைஃப்க்கு அந்த Stress ரொம்ப ரொம்ப essential..!! Stress இல்லாத மனுஷன்னா.. அது ஏதாவது கோமால கெடக்குற பேஷன்ட்தான்..!! என்ன.. அந்த Stress ஒருஅளவுக்கு மேல போறப்போதான் பிரச்னை.. அமிர்தம் கூட அளவுக்கு மிஞ்சினா நஞ்சுதான..?? காய்ச்சல் தலைவலி மாதிரிதான் இதுவும்.. கொஞ்சநாள் ட்ரீட்மன்ட் எடுத்துக்கிட்டா எல்லாம் சரியா போய்டும்..!! உன் ஆளு திரும்ப வர்றப்போ.. இப்படியா சீக்குக்கோழி மாதிரி அவ முன்னாடி நிப்ப..?? அப்படியே சிங்கம் மாதிரி நிக்க வேணாம்.. ஹஹா..!! என்ன சொல்ற..??”

2 thoughts on “எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 16<a href="#" class="jm-post-like" data-post_id="4193" title="Like"><i id="icon-unlik" class="fa fa-heart"></i> 53</a>”

  1. Ethu vara yentha storykum comments pannathu ella etha en 1st Comment please “Full story sikiro podunga” please 🙏

Comments are closed.

Scroll to Top