எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 16 45

“அ..அவகூடதான் என் லைஃப்னு.. நான் எப்போவோ முழுசா நம்பிட்டேன் மம்மி.. மனசுக்குள்ள என்னல்லாம் ஆசை தெரியுமா..?? இப்போ.. ‘அவ இல்லாம ஒரு லைஃப் இருக்குது.. அடம்புடிக்காம வாழ்ந்துபாரு’ன்னு.. நீங்க எல்லாரும் சொல்றப்போ.. என்னால அதை அக்ஸப்ட் பண்ணிக்க முடியல மம்மி..!! அந்த லைஃப் மேலேயே எனக்கு வெறுப்பா வருது..!!”

அசோக் சொல்ல சொல்ல.. பாரதியின் மூளைக்குள் பலவித யோசனைகள்..!! அவளும் மற்றவர்களும் செய்த தவறு, இப்போது அவளுக்கு தெளிவாக புரிந்தது.. ஆறுதலும், நம்பிக்கையும் நாடியவனுக்கு அவநம்பிக்கையை கொடுத்துவிட்ட தவறு..!! தாங்கள் செய்த அந்த தவறை உடனே சரி செய்தாகவேண்டும் என்று அவளுக்கு தோன்றியது.. இல்லாவிட்டால் ஆசையாக வளர்த்த மகனை அநியாயமாக இழக்க நேரிடும் என்றும் புரிந்தது..!!

அதே நேரம்.. அசோக் செய்த தவறும் அவளுடைய மனதை தைக்காமல் இல்லை.. அதையும் அவனுக்கு சுருக்கென சுட்டிக்காட்ட வேண்டும் என்று நினைத்தாள்..!! இனி இந்த மாதிரி எண்ணம் அவனுக்கு என்றுமே தோன்றக்கூடாது..!! மனதுக்குள்ளேயே ஒரு கணக்கு போட்டவள்.. சற்றே தைரியத்தை வரவழைத்துக்கொண்டு.. குரலிலும் ஒரு கடுமையை கூட்டிக்கொண்டு.. பட்டென்று சொன்னாள்..!!

“சரி எங்களுக்குத்தான் அறிவு இல்ல.. உனக்கு எங்க போச்சு புத்தி..??”

பாரதி திடீரென அந்தமாதிரி கேட்பாள் என்று அசோக் எதிர்பார்த்திரவில்லை.. பேசிக்கொண்டிருந்தவன் பேச்சை படக்கென நிறுத்தினான்.. முகத்தில் ஒருவித திகைப்புடன் அம்மாவை திரும்பி பார்த்தான்..!! சற்றே தடுமாற்றமான குரலில்..

“எ..என்ன சொல்ற..” என்றான்.

“பின்ன என்ன..?? நாங்க ‘மறந்துடு’ன்னு சொன்னா.. ‘என்னால மறக்க முடியாது.. உங்க வேலையை பாத்துட்டு போங்க’ன்னு மூஞ்சில அடிச்சமாதிரி நீ சொல்ல வேண்டியதுதான..?? ‘அவ கெடைக்க மாட்டா’ன்னு சொன்னா.. ‘கண்டுபிடிக்கிறனா இல்லையா பாருங்க’ன்னு சவால் விட வேண்டியதுதான..?? குடிச்சுட்டு கண்டவன் கூட ரோட்ல சண்டை போடுறதுக்கு பதிலா.. அவளை கண்டுபிடிக்கிறதுக்கு வேற ஏதாவது வழி இருக்கான்னு யோசிச்சிருக்கலாம்ல..??”

பாரதி படபடவென பேசப்பேச.. அசோக்கின் மனதில் ஒரு புதுவித உணர்வு பரவ ஆரம்பித்தது..!! இரண்டு வாரங்களாக இருந்த இறுக்க உணர்வை தளர்த்த ஆரம்பித்த, ஒரு இலகுவான உணர்வு.. தளர்ந்து போயிருந்த அவனது இதயத்திற்கு தைரியமூட்டுகிற மாதிரியான நம்பிக்கை உணர்வு..!! பாரதி தொடர்ந்து பேசினாள்..!!

“அடுத்தவங்க சொல்றதைக்கேட்டு உனக்கா ஒரு வைராக்கியம் வந்திருக்கனும்.. ‘இதுக்குலாம் உடைஞ்சு போயிடக்கூடாது.. அவளை தேடிக்கண்டுபிடிச்சு எல்லார் முன்னாடியும் நிறுத்தனும்..!! அவ கழுத்துல தாலியை கட்டி.. நாலஞ்சு கொழந்தையை பெத்து.. பேரன் பேத்தியை அவங்க கொஞ்சுறப்போ.. ஒருகாலத்துல என்னல்லாம் சொன்னீங்கன்னு கேலி பண்ணனும்..!!’ அந்த மாதிரிலாம் உனக்கு வைராக்கியம் வந்திருந்தா.. உனக்கும் புத்தி இருக்குன்னு அர்த்தம்..!!”

…………………………

“அதைலாம் விட்டுட்டு.. இப்படி தம்மடிக்கிறதும், தண்ணியடிக்கிறதும், பொலம்புறதும், சண்டை போடுறதும்.. என்னடா இதெல்லாம்..?? அதெல்லாம் பாக்குறப்போ எங்க மனசு என்னபாடு படும்னு கொஞ்சமாவது நெனச்சு பாத்தியா..?? பத்தாக்கொறைக்கு மாத்திரை டப்பாவை வேற தூக்கிட்டு வந்துட்டான்.. புத்திசாலிப்புள்ள..!!”

2 Comments

  1. Admin , super storie

    Uyirulla oru love

  2. Ethu vara yentha storykum comments pannathu ella etha en 1st Comment please “Full story sikiro podunga” please ?

Comments are closed.