எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 16 45

பாரதி இகழ்ச்சியாக சொல்ல.. அசோக் தலையை தொங்கப் போட்டுக்கொண்டான்..!! அவனுக்குமே இப்போது அவன் செய்த தவறு தெளிவாக விளங்கிற்று..!! தனக்கிருந்த மன அழுத்தைத்தை அப்பட்டமாக வெளியே காட்டி.. தன்மீது அன்பு வைத்திருந்தவர்களை பயமுறுத்திவிட்டோம் என்று தோன்றியது.. தைரியம் இழந்தது தவறென்று புரிந்தது..!!

“உன் காதல் உண்மையானதுதானடா..??” பாரதி திடீரென கேட்க, அசோக் திகைத்துப் போனான்.

“எ..என்ன மம்மி இப்படி கேக்குற..??”

“ப்ச்.. சொல்லுடா..!! உன் காதல் உண்மையானதுதான..??”

“ஆ..ஆமாம்..!! அதுல என்ன உனக்கு சந்தேகம்..??”

“உன் காதல் மேல உனக்கு நம்பிக்கை இருக்கா..??”

“கா..காதல் மேல நம்பிக்கையா.. அ..அப்படினா..?? என்ன கேக்க வர்றன்னு எனக்கு புரியல..!!”

அசோக் குழப்பமாக அம்மாவின் முகத்தை ஏறிட.. இவள் இப்போது சற்றே நிதானித்தாள்..!! எதைச்சொல்லி மகனுக்கு புரியவைப்பது என்று ஒருசில வினாடிகள் யோசித்தாள்..!! பிறகு ஒரு முடிவுக்கு வந்தவளாய்.. பார்வையை வேறெங்கோ திருப்பிக்கொண்டு.. மெல்லிய குரலில் ஆரம்பித்தாள்..!!

“உன் அப்பாவோட எழுத்தை மட்டுந்தான் நான் அப்போ பாத்திருக்குறேன் அசோக்.. வேற எதுவும் எனக்கு அறிமுகம் இல்ல.. அவரு கருப்பா செவப்பான்னு கூட எனக்கு தெரியாது.. அவரோட குரலை கூட மெட்ராஸ்க்கு கெளம்புறதுக்கு மொதநாள்தான் கேட்டேன்..!! வீட்டுக்கு பின்னாடி இருக்குற ஆத்துக்கு போறதுக்கே அவ்வளவு பயப்படுற பாரதிதான்.. ஐநூறு கிலோமீட்டர் தனியா தாண்டி வந்தேன்..!! உடம்பெல்லாம் ரத்தம் வடிய.. கைல காசு இல்லாம.. கால்ல செருப்பு இல்லாம.. கட்டின பொடவையோட.. முன்னப்பின்ன அறிமுகமே இல்லாத ஊருக்கு..!! எந்த நம்பிக்கைல வந்தேன்னு நெனைக்கிற..??” பாரதி கேட்டுவிட்டு மகனை கூர்மையாக பார்க்க,

“………………………….” அவனிடம் எந்த பதிலும் இல்லை.

“காலங்காத்தால நாலு மணிக்குலாம்.. கொஞ்சம் சீக்கிரமாவே.. அந்த ட்ரெயின் மெட்ராஸ் வந்துடுச்சு.. கொட்டுற பனில.. சென்ட்ரல் ஸ்டேஷன்ல தன்னந்தனியா நின்னுட்டு இருந்தேன்..!! யாராரோ வர்றாங்க போறாங்க.. ஒருமாதிரி பாக்குறாங்க.. பேச்சு குடுக்குறாங்க.. அம்மாக்கு ரொம்ப பயமா இருந்துச்சுடா..!!”

“………………………….”

“உன் அப்பா வந்து சேர்றதுக்கு அரை மணி நேரம் ஆச்சு..!! அந்த அரைமணி நேரமும்.. ‘எப்போடா அவர் வருவாரு.. அவர் நெஞ்சுல சாஞ்சு ஓன்னு அழலாம்..’னு நெனச்சுட்டு இருந்தேனே ஒழிய.. ஒரு செகண்ட் கூட.. ‘அவரு வருவரோ வரமாட்டாரோ’ன்னு என் மனசு சந்தேகப்படல அசோக்.. சத்தியமா..!!”

“………………………….”

“என் காதல் மேல எனக்கு அவ்வளவு நம்பிக்கைடா.. ‘நம்ம காதல் உண்மையானது.. அது நம்மள கஷ்டத்துல தள்ளிடாது’ன்னு ரொம்ப நம்பிக்கை..!! இன்னைக்கு எனக்கு ஒரு நிறைவான வாழ்க்கை கெடைச்சிருக்குன்னா.. அதுக்கு காரணம், என் காதல் மேல நான் வச்சிருந்த நம்பிக்கைனாலதான்..!! அந்த நம்பிக்கை உன் காதல் மேல உனக்கு இருக்கா..?? ஒரு நல்ல வாழ்க்கையை அந்தக்காதல் அமைச்சு குடுக்கும்னு.. உன் மனசார நம்புறியா..??”

“………………………….” அசோக் அமைதியாகவும், திகைப்பாகவும் பார்த்துக்கொண்டிருக்க, பாரதியே தொடர்ந்தாள்.

“நம்பு.. உன் காதலை முழுசா நம்பு..!! காதலும் கூட கடவுள் மாதிரிதான்டா.. நம்புனவங்களை சோதிக்கும்.. ஆனா கைவிடாது..!! காதலுக்கு உண்மையா இருந்தா மட்டும் பத்தாது.. உண்மையான அந்த காதல் மேல அசைக்கமுடியாத நம்பிக்கையும் வைக்கணும்..!! இது ரெண்டும் இருந்துட்டா.. அந்த காதலே உங்களை சேர்த்து வைக்கும்..!!”

மிக உறுதியான குரலில் சொல்லி முடித்தாள்..!! அசோக் எதுவுமே பேசத்தோன்றாதவனாய் அமர்ந்திருந்தான்.. அம்மா சொன்ன வார்த்தைகளில் பொதிந்திருந்த அர்த்தத்தையே, அவன் மனம் அசை போட்டுக்கொண்டிருந்தது..!! அந்த அர்த்தம் புரிய புரிய.. இருண்டு போயிருந்த அவனது இதயத்தில்.. மெலிதாக ஒரு ஒளிக்கீற்று எட்டிப்பார்த்தது..!!

தீவிர யோசனையில் இருக்கும் மகனையே.. பாரதி சிறிது நேரம் கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தாள்..!! மகனின் மனநிலை இப்போது அவளுக்கு தெளிவாக புரிய.. அவள் மனதில் ஒரு நிம்மதி..!! அந்த நிம்மதி அவளது முகத்திலும் பரவ.. பெருமூச்சொன்றை வெளிப்படுத்தியவாறே.. கட்டிலில் இருந்து எழுந்துகொண்டாள்..!!

2 Comments

  1. Admin , super storie

    Uyirulla oru love

  2. Ethu vara yentha storykum comments pannathu ella etha en 1st Comment please “Full story sikiro podunga” please ?

Comments are closed.