எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 16 45

“அச்சச்சோ.. அக்காக்கு லேட் ஆயிடுச்சுடா.. உன் பைக்ல என்னை ஹாஸ்பிடல் வரை ட்ராப் பண்றியா..??”

“ம்ம்.. வந்தது வந்துட்ட.. ‘Art of Living’ class ஆரம்பிக்கப் போகுது.. சும்மா அட்டண்ட் பண்ணி பாக்குறியா..??”

தற்கொலையை முயலாம் என்று அசோக் நினைத்த அன்றே.. அவன் வாழ்தல்கலையை பயிலுமாறு அமைந்து போனது..!! முதல்நாள் அனுபவம் அவனுக்குமே பிடித்திருந்ததால்.. அதன் பிறகு தினமும் அந்த வாழ்தல்கலை வகுப்புக்கு வருகை தர ஆரம்பித்தான்..!! முன்பொருமுறை டாகுமன்ட்ரி எடுப்பதற்காக அங்கே வந்திருந்தபோது அறிமுகமான மும்தாஜ்தான்.. இப்போது அசோக்கிற்கு யோகா பயிற்றுவித்தாள்..!! அசோக்கின் நிலையை பவானியின் மூலமாக மும்தாஜும் ஓரளவு அறிந்திருந்தாள்.. அவளும் அசோக்கிடம் தனிக்கவனம் எடுத்துக் கொண்டாள்..!!

“தலையை மேல கொண்டு போறப்போ மூச்சை நல்லா உள்ள வாங்கணும்.. அப்புறம் தலையை கீழ கொண்டு வர்றப்போ கொஞ்சம் கொஞ்சமா ரிலீஸ் பண்ணனும்..!!” கண்கள் மூடி அமர்ந்திருந்த அசோக்கின் தாடையை தாங்கியவாறு மும்தாஜ் சொன்னாள்.

“உடம்புன்றது நாம சாப்பிட்ட சாப்பாட்டோட விளைவு.. மனசுன்றது நாம பார்த்த, கேட்ட, படிச்ச விஷயங்களோட விளைவு..!! உடம்பு, மனசு.. இது ரெண்டுமே நாம கெடையாது..!! இது ரெண்டுல இருந்தும் நம்மள நாமளே பிரிச்சு எடுக்குறதுதான் தியானம்..!!” மேடையில் நின்று மும்தாஜ் சொல்ல, தரையில் இன்னும் சிலருடன் அமர்ந்திருந்த அசோக், அதை கவனமாக கேட்டுக்கொண்டான்.

“இந்த உலகத்துல வந்து பொறக்குறதை.. நாம எப்படி முடிவு பண்றது இல்லையோ.. அந்த மாதிரி இந்த உலகத்தை விட்டு போறதையும்.. நாம முடிவு பண்ணக் கூடாது அசோக்..!! அட்வைஸ் பண்றேன்னு நெனச்சுக்காதிங்க.. எனக்கு அந்த அருகதைலாம் இல்ல.. ஹ்ஹ..!! ஏதோ என் மனசுல தோணுனதை சொன்னேன்.. அவ்வளவுதான்..!! ம்ம்.. இந்தாங்க..!!” அசோக்கிற்கு தேநீர் கலந்து நீட்டிக்கொண்டே, ஒரு இதமான புன்னகையுடன் மும்தாஜ் சொன்னாள்.

வகுப்பின்போதும்.. வகுப்பு முடிந்து உரையாடுகிறபோதும்.. அசோக்கின் மனக்காயம் ஆறுவதற்கு.. மும்தாஜும் முடிந்த அளவு உபயோகமாக இருந்தாள்..!! மீதி நேரங்களில்.. பவானி தன்னால் இயன்ற அளவுக்கு அசோக்குடன் நேரத்தை செலவழித்து.. அவனது மனமாற்றத்துக்கு பெருவுதவி செய்தாள்..!!

“ஏன் கோவம் வருது..?? உன் மனசுல ஒரு கான்ஃபிடன்ஸ் இருந்தா.. உனக்கு கோவம் வர்றதுக்கு அவசியமே இல்லையே..?? யாரோ என்னவோ சொல்லிட்டு போறாங்கன்னு நீ கூலா இரு..!!” – அசோக்குடன் பைக்கில் செல்கையில் பவானி.

“தம்மடிக்கிறது தண்ணியடிக்கிறதுலாம் உனக்கு ஒரு temporary comfort தரலாம் அசோக்.. But.. long termல பாக்குறப்போ.. it’s too dangerous..!! உன் ப்ராப்ளத்துக்கு அது சொல்யூஷன் இல்ல..!!” – அலுவலக அறையில் தனக்கு எதிரே அமர்ந்திருந்த அசோக்கிடம் பவானி.

“ஏண்டா.. அவளுக்கு பிடிக்குமேன்னு ஆசையா வளர்த்தேன்னு சொல்ற.. இப்படியா தண்ணி ஊத்தாம காய விடுறது..?? நாளைக்கு அவ வந்து இதை பாத்தான்னா என்ன நெனைப்பா..?? அவ வர்றவரைக்கும் நீதான் இதை நல்லா கவனிச்சுக்குற.. சரியா..?? மார்னிங், ஈவினிங் ரெண்டு நேரமும் மறக்காம தண்ணி ஊத்தணும்.. அவ வந்து பாக்குறப்போ அப்படியே சொக்கிப் போயிடணும்..!!” – வீட்டின் பின்புறமிருந்த மஞ்சள் ரோஜா தோட்டத்தை நோட்டமிட்டவாறே பவானி.

மீராவின் வருகை பற்றி, அசோக் அறியாமல் அவன் மனதில் நம்பிக்கை வளர்ப்பது மட்டுமல்லாமல்.. சில சமயங்கள் நேரிடையாகவே, அசோக்கிடம் மீரா பற்றி பேசி அறிந்துகொள்வாள்..!!

“ஹ்ம்ம்.. தேடுதல் வேட்டை எந்த லெவல்ல இருக்குது..?? ஏதாவது லீட் கெடைச்சதா..?? என்னைக்கு அந்த அழகு மூஞ்சியை என் கண்ணுல காட்டப்போற..??”

“ப்ச்.. எந்த லீடும் கெடைக்கலக்கா.. எல்லாம் அப்படியே ப்ளாங்கா இருக்கு.. ஏதோ இருட்டு ரூமுக்குள்ள குருட்டு பூனை அலையுற மாதிரி இருக்கு..!!”

“ஏண்டா இப்படி பேசுற..?? அவகூட பேசினது பழகினதுலாம் கொஞ்சம் பொறுமையா நெனச்சு பாரு.. ஏதாவது லீட் கெடைக்கும்..!!”

“எல்லாம் நெனச்சு பாத்துட்டேன்க்கா.. எதுவும் பிடிபடல..!! எவ்வளவு பொய் சொல்லிருக்கா தெரியுமா..?? நான் உண்மைன்னு நெனச்சது எல்லாமே.. கடைசில பொய்..!! வரைமொறையே இல்லாம பொய் பொய்யா சொல்லிருக்கா.. சரியான புழுகு மூட்டை..!!” அசோக் சொன்னவிதம் பவானிக்கு சிரிப்பை வரவழைத்தது.

“ஹாஹாஹாஹா..!! ஓகே ஓகே..!! ஹ்ம்ம்… சரி.. அப்போ இப்படி பண்ணு.. கொஞ்சம் உல்ட்டாவா திங்க் பண்ணி பாரு.. ஏதாவது யூஸ்ஃபுல் மேட்டர் கெடைக்குதான்னு பாக்கலாம்..!!”

“உல்ட்டானா.. எப்படி..??”

“ம்ம்ம்ம்ம்.. எப்படி சொல்றது.. நீ உண்மைன்னு நெனச்சது எல்லாம் பொய்யா போச்சுன்னு சொன்னல..?? அப்படினா.. நீ பொய்னு நெனைக்கிற விஷயம் எதாவது ஏன் உண்மையா இருக்க கூடாது..?? அந்த ஆங்கிள்ல யோசிச்சு பாரு..!!”

“ம்க்கும்.. ஏன்க்கா நீங்க வேற..?? நானே கன்ஃப்யூஸ் ஆகிப்போய் கெடக்குறேன்.. நீங்க காமடி பண்ணிட்டு இருக்குறீங்க..??” அசோக் நொந்துபோன குரலில் சொல்ல,

“ஹாஹாஹாஹா..!! காமடி பண்ணலடா.. சீரியஸா சொல்றேன்..!!” பவானி சிரித்தாள்.

பவானியின் சிரிப்பு அசோக்கின் முகத்திலும் புன்னகையை பூக்க செய்தது..!! இந்த மாதிரி.. அசோக்கின் மனநிலை தேறுவதற்கும்.. ஒரு இதமான சூழ்நிலையை அவனுக்கு உருவாக்கி தருவதற்கும்.. அடுத்த நாளின் மீது அவனுக்கு ஒரு பிடித்தத்தை ஏற்படுத்துவதற்கும்.. பாரதி, பவானி, மும்தாஜ் ஆகிய மூன்று பெண்களுமே.. மிக மிக முக்கியமான பங்காற்றியிருந்தனர்..!!

2 Comments

  1. Admin , super storie

    Uyirulla oru love

  2. Ethu vara yentha storykum comments pannathu ella etha en 1st Comment please “Full story sikiro podunga” please ?

Comments are closed.