எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 16 45

சற்றுமுன் அசோக்கிடம் தயங்கி தயங்கி கேட்டதே அவள்தான்..!! அவன் மீதிருந்த நன்மதிப்பில் அவ்வாறு கேட்டுவிட்டாலும்.. இப்போது அருகில் அமர்ந்து பயணிக்கையில், அவளிடம் ஒரு கூச்சம்.. அந்த கூச்சம் தந்த ஒருவித அவஸ்தையுடனே பயணித்துக் கொண்டிருந்தாள்..!!

முனுசாமி சாலையில் இருந்து இடதுபுறம் திரும்புகிற மற்றொரு குறுகிய சாலையில்தான்.. அசோக்குடைய அலுவலகம் இருக்கிறது..!! பேருந்து நிலையத்துக்கும் அந்த குறுகிய சாலை வழியாகத்தான் சென்றாக வேண்டும்..!! சீறிக்கொண்டிருந்த வண்டியின் வேகத்தை குறைத்து.. அலுவலகம் இருக்கிற கட்டிடத்தின் முன்பாக நிறுத்திய அசோக்.. பின்பக்கமாக திரும்பி..

“ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க மும்தாஜ்.. வந்துடுறேன்..!!” என்றான்.

மும்தாஜ் இறங்கிக்கொள்ள, வண்டியை சாய்த்து ஸ்டான்ட் இட்டுவிட்டு, அவனும் இறங்கிக்கொண்டான்.

“உங்க ஆபீஸ்க்கு எங்களைலாம் இன்வைட் பண்ண மாட்டிங்களா..??” மும்தாஜ் சற்றே குறும்பாக கேட்க,

“இ..இல்ல.. அ..அதுக்காக இல்ல..!!” அசோக்கிடம் ஒரு தயக்கம்.

“அப்புறம்..??”

“நீ..நீங்க நெனைக்கிற மாதிரிலாம் எங்க ஆபீஸ் இருக்காது..!! ஒரே குப்பையா.. ஒரு கேவலமான ஸ்மெல்லோட.. ரொம்ப கச்சடாவா இருக்கும்..!!”

“ஹாஹா.. அதனால என்ன.. எனக்கு ஓகே..!!” சொல்லிவிட்டு மும்தாஜ் புன்னகைக்க, அசோக் மேலும் ஓரிரு வினாடிகள் தயங்கினான். பிறகு,

“தென்.. இட்ஸ் ஃபைன்..!!”

என்று சொல்லிவிட்டு அவன் முன்னால் நடக்க.. மும்தாஜ் அவனை பின்தொடர்ந்தாள்..!! பக்கவாட்டில் இருந்த படிக்கட்டு ஏறி, இருவரும் மேலே சென்றார்கள்.. மூடியிருந்த கதவு திறந்து, அலுவலகத்துக்குள் நுழைந்தார்கள்..!!

2 Comments

  1. Admin , super storie

    Uyirulla oru love

  2. Ethu vara yentha storykum comments pannathu ella etha en 1st Comment please “Full story sikiro podunga” please ?

Comments are closed.