எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 16 45

அவர்கள் சொன்னதை எல்லாம்.. அசோக்கின் குடும்பத்தினர் அதிர்ச்சியும் திகைப்புமாய் கேட்டுக்கொண்டனர்..!! அசோக்கைப் பற்றி அவர்கள் சொன்னவை எல்லாம்.. பாரதியைத்தான் மிகவும் பாதிப்பதாக அமைந்தன.. பெற்ற மகனுக்கு நேர்ந்த பெருந்துயரத்தை.. குமுறுகிற நெஞ்சுடன் கேட்டுக்கொண்டாள் பாரதி..!! ‘ஐயோ.. எம்புள்ளை..’ என்று மனதுக்குள்ளேயே மருகி மருகி.. கலங்கி கண்ணீர் வடித்தாள்..!!

“இவ்வளவு நடந்திருக்கு.. இத்தனை நாளா எதையுமே சொல்லாம மறைச்சுட்டிங்களேடா..?? ஒன்னுக்கு மூணு பேரு ஃப்ரண்டுன்னு இருந்தும்.. எம்புள்ளையை இப்படி தொலைச்சுட்டு வந்து நிக்குறீங்களே..??”

வேதனையுடன் பாரதி வெடித்து சிதற.. பதில் சொல்ல வார்த்தையின்றி நண்பர்கள் மூவரும் தலையை குனிந்துகொண்டனர்..!!

அசோக்கை தேடி இரண்டு காரில் கிளம்பினார்கள்.. நண்பர்கள் மூவரும் வேணுவின் காரில்.. பாரதி, மணிபாரதி, சங்கீதா மூவரும் மணிபாரதியின் காரில்..!! வெளியே கோடைமழை ‘ச்ச்சோ’வென்று கொட்டிக்கொண்டிருந்தது.. மழை நீர் பாதையை மறைக்காமல் இருக்க.. காரின் வைப்பர்கள் ‘தடக் தடக்’என அடித்து.. தமது பணியை செய்துகொண்டிருந்தன..!!

அசோக்கின் குடும்பத்தினர்.. தங்களுக்கு தெரிந்தவர்கள், நண்பர்கள் வீட்டிற்கெல்லாம் சென்று.. அவனை தேடினர்..!! அசோக்கின் நண்பர்கள்.. அவன் வழக்கமாக தண்ணியடிக்கிற பார்களுக்கெல்லாம்.. சென்று பார்த்தனர்..!! மணி இரவு பத்துமணியையும் தாண்டிப் போனது.. ஆனால் அசோக்கை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை..!!

“கொஞ்ச நேரம் முன்னாடிதான் ஸார் வந்துட்டு போனாரு.. கன்னாபின்னான்னு குடிச்சாரு.. சொன்னாகூட கேக்கல..!!”

அண்ணாநகரில் இருக்கிற ஒரு பார் பேரர் சொன்ன செய்தியை.. சங்கீதாவுக்கு கால் செய்து சற்றே நாசுக்காக சொன்னான் கிஷோர்..!! அதை அவள் அப்படியே அம்மாவிடம் சொன்னாள்..!! பாரதியின் கண்களில் இருந்து வடிகிற கண்ணீரின் அளவு இப்போது இன்னும் அதிகமானது.. வேதனையில் துடித்த அவளது உதடுகள் மேலும் வெடவெடத்தன.. அவளுடைய பதைபதைப்பு எல்லை மீறி சென்று கொண்டிருந்தது..!!

சங்கீதா திடீரென.. “ஒருவேளை..” என்று ஆரம்பித்து.. அசோக் சென்றிருக்கக் கூடிய இடத்தை கெஸ் செய்ய.. அனைவருக்கும் அதில் ஒரு நம்பிக்கை பிறக்க.. மணிபாரதி காரை யு-டர்ன் அடித்து திருப்பினார்..!!

சங்கீதாவின் கணிப்பு நூறு சதவீதம் சரிதான்..!! அசோக் அந்த நேரத்தில்.. அவர்கள் வழக்கமாக சாப்பிடுகிற அந்த ஃபுட்கோர்ட்டில்தான் அமர்ந்திருந்தான்..!! வெளியே ‘சடசட’வென மழை கொட்டுகிற சப்தம் இரைச்சலாக கேட்டது.. அசோக் அல்ரெடி மழையில் நனைந்திருப்பான் போலிருக்கிறது.. அவனுடைய சட்டையும் தலைமுடியும் ஈரமாக இருந்தன..!!

பரந்து விரிந்த அந்த தளத்தில்.. அவனையும், டேபிள் சேர்களையும் தவிர வேறு ஆட்களை காணோம்..!! அவன் மட்டும் தனியே.. அவனும் மீராவும் எப்போதும் அமர்ந்து உண்கிற அந்த டேபிளில் அமர்ந்திருந்தான்..!! அளவுக்கதிகமான போதையில்.. அவனுடைய கருவிழிகள் இரண்டும் மேலே ஏறி செருகியிருந்தன.. அவனது தலை நிலையில்லாமல் தள்ளாடியது..!!

வெகுநேரம் பொறுத்து பொறுத்து பார்த்த ஃபுட்கோர்ட் ஊழியர்கள் நான்கு பேர்.. இப்போது அவனுக்கு எதிரே வந்து நின்றனர்..!! கைகளை பின்னால் கட்டியிருந்தவர்கள்.. கடுமையான குரலில் அசோக்கிடம் சொன்னார்கள்..!!

“ஹலோ.. சொன்னா உங்களுக்கு புரியாதா..?? சர்விஸ் டைம் முடிஞ்சு போச்சு.. எடத்தை காலி பண்ணுங்க..!!”

“ஹ்ஹ.. எ..என் மீரா வராம.. நா..நான் எடத்தை காலி பண்ண மாட்டேன்..!! ஓகே..??” அசோக் குழறலாக சொன்னான்.

“மீராவா.. அது யாரு..??” ஒரு ஆள் அந்த மாதிரி கேட்க, இப்போது அசோக் சேரை விட்டு எழுந்தான்.

“மீ..மீரா தெரியாது உனக்கு..?? ம்ம்..?? உனக்கு தெரியுமா..?? உ..உனக்கும் தெரியாதா..??” கிண்டலாக கேட்டவாறே, சுற்றி நின்றவர்களின் கன்னத்தில் ‘பட்.. பட்.. பட்..’ என்று தட்டினான்.

2 Comments

  1. Admin , super storie

    Uyirulla oru love

  2. Ethu vara yentha storykum comments pannathu ella etha en 1st Comment please “Full story sikiro podunga” please ?

Comments are closed.