இந்த வீட்டின் உரிமையாளர் 6 63

ரோஷன் கால் கட் செய்த பிறகு தான் அவனிடம் நவீன் வீட்டு சாவியை குடுத்து இருந்தால் பிரெச்சனை என்ன செய்வது என்று யோசித்தேன். விக்ரம் எழுந்ததும் அவனிடம் ரோஷன் பேசியது பற்றியும் அவனுக்கு என்ன பதில் சொன்னேன் என்பதையும் சொல்லி விட்டு வீட்டு சாவியை பற்றியும் சொன்னேன். விக்ரம் கொஞ்சம் யோசித்து நித்தியா உனக்கு நம்பிக்கை இருந்தா உன் கிட்டே இருக்கிற சாவியை என் நண்பனுக்கு கொரியர் செய்து அந்த பூட்டை எடுத்து விட்டு புது பூட்டு போட்டு விடலாம் அதுவும் உடனே செய்யணும் என்று சொல்ல நான் கொஞ்சம் கூட யோசிக்காமல் என் பையில் இருந்த வீட்டின் வாசற்கதவு சாவியை விக்ரமிடம் குடுக்க அவன் தன்னுடைய நண்பனிடம் பேசினான். பேசி விட்டு ஒரு கவரில் சாவியை வைத்து அந்த நண்பரின் முகவரியை எழுதி எடுத்து கொண்டு வெளியே சென்றான். ஓரளவு விக்ரமை முழுமையாக நம்ப ஆரம்பித்து விட்டேன்.

வெளியே என்று விட்டு உடனே திரும்பி விட்டான். நித்தியா கொரியர் அனுப்பியாச்சு தேங்க்ஸ் என்று சொல்ல நான் புரியாமல் எனக்கு எதுக்கு தேங்க்ஸ் சொல்லறே நான் தான் உனக்கு தேங்க்ஸ் சொல்லணும் என்றதும் அவன் ஐயோ இந்த தேங்க்ஸ் நீ என் கால் வலியை சரி செய்ததற்கு உண்மையை சொல்லறேன் நீ செஞ்ச மசாஜ் என்னை அப்படி ஒரு தூக்கம் போட வைத்தது என்றதும் நான் சரி இப்போ வலி எப்படி இருக்கு என்றேன். விக்ரம் விளம்பர பாணியில் போயே போச்சு என்று சொல்ல நான் ரசித்து மதார சிரித்தேன். சிரித்ததால் மனதில் இருந்த பயம் விலகியது போல ஒரு உணர்வு. விக்ரம் நித்தியா நைட் வெளியே சென்று சாப்பிடலாமா என்றதும் எனக்கும் காலையில் இருந்து அறைக்குள்ளே அடைந்து கிடந்ததால் ஒத்துக்கொண்டேன். ப்ரெஷா குளிச்சு உடை மாற்றி கொண்டு அவனுடன் ஜோடியாக சென்னை தெருக்களில் சுதந்திரமாக நடக்க நல்லா தான் இருந்தது. ஆட்டோ எடுக்கலாமா என்று கேட்க நான் வேண்டாம் நடந்தே போகலாம் என்று சொல்லிவிட்டேன். எவ்வளவு தூரம் நடந்தோம்னு தெரியவில்லை ஒரு ரெஸ்டாரன்ட் உள்ளே செல்ல பெங்களூர் ஹோட்டல்கள் போல மங்கலான வெளிச்சம் தள்ளி தள்ளி போடப்பட்டிருந்த மேஜைகள் ஒன்றில் அமர்ந்தோம். வெய்ட்டர் வந்து எங்கள் ஆர்டர் எடுத்து போக என்னை கேட்காமலே எனக்கும் சேர்த்து விக்ரம் ஆர்டர் செய்தான் அவன் செய்த ஆர்டர் எல்லாமே எனக்கு பிடித்த உணவு தான் என்பது ஆச்சரியம்.