இந்த வீட்டின் உரிமையாளர் 6 63

சரி ஏதாவது பேச்சு குடுக்கனுமேனு அதையே டாப்பிக்காக ஆரம்பித்தேன். விக்ரம் நீ ஜிம் போற பழக்கம் இருக்கா என்றதும் விக்ரம் போவேன் ஆனால் தினமும் போகும் பழக்கம் இல்லை நேரம் கிடைத்தால் மூட் இருந்தால் போவேன் ஏன் கேட்கிறே என் பைஜாமா பாக்கெட்டில் ஏதாவது உறுப்பினர் அட்டை இருக்கா என்று கேட்க அவன் என் கேள்வியை புரிந்து கொண்டே வேண்டும் என்று கேட்கிறான் என்று தெரிந்து அவன் கண்டையில் விரலுக்கு கிடைத்த சதையை பிடித்து நறுக்கென்று கிள்ளி நான் கேட்டது இந்த இடம் இப்படி இரும்பு போல இருக்கே என்று தான் என்றேன். நான் எதிர்பார்க்காத சமயத்தில் விக்ரம் திரும்பி படுத்து நவீன் கால்கள் இபப்டி தான் இருக்குமா என்றான். நான் நீ வேறே வடிவேலு ஜோக் போல நவீன் பாக்கத்தான் ஸ்ட்ராங் ஆனா பேஸ்மென்ட் வீக் கொஞ்ச தூரம் நடந்தாலே அவன் கால்கள் நடுங்க ஆரம்பிச்சு விடும் நான் அப்பொயெல்லாம் அது நரம்பு தளர்ச்சின்னு எடுத்துப்பேன் இப்போதானே தெரியுது அவர் குடிக்கறாதாலேதான் அவ்வளவு வீக்கா இருக்காருன்னு.

இப்படி பேசி கொண்டிருக்கும் போது தான் புரிந்தது நான் என்ன செய்ய ஆரம்பித்தேனோ அதை நிறுத்தி விட்டு இவனிடம் கதை அளந்து கொண்டிருக்கிறேன் என்று. விக்ரம் திரும்பி படு மாசாஜ் செய்ய சொல்லிட்டு நீ என் மூஞ்சியை பார்த்து பேசி கொண்டிருக்கிறே இதுக்கு நாம் சினிமாவே பார்த்து இருக்கலாம் என்றதும் விக்ரம் அதுவும் சரி தான் நித்தியா ஆனா தெரிஞ்சோ தெரியாமலோ நாம ஒரு நல்ல காரியம் செஞ்சு இருக்கோம் என்று சொல்ல நான் என்ன படம் செகண்ட் பாதி அவ்வளவு அறுவையா என்றேன். அவன் இல்லயா சீக்கிரம் திரும்பி விட்டதாலே டிரைவர் இப்போ மனைவியோடு சந்தோஷமா இருப்பானே அந்த நல்ல காரியத்தை சொன்னேன் என்றான். நான் சலிப்புடன் அவன் மனைவியோடு இருப்பான் ஆனா நான் கணவனை பிரிந்து அவர் நண்பனுக்கு பயந்து இங்கே ஒளிந்து கொண்டிருக்கிறேன் நான் எப்படி சந்தோஷப்பட முடியும் சரி திரும்பு மசாஜ் செய்வது மூலமாக உனக்கு வலியாவது குறையட்டும் என்றேன்

விக்ரம் அப்போவும் திரும்பாமல் நித்தியா முதலில் முன் பக்கம் முடித்து விடு அப்படியும் வலி இருந்தா திரும்பி படுக்கறேன் முன் பக்கம் செய்யும் போது நீ மசாஜ் செஞ்சா மாதிரியும் இருக்கும் எனக்கும் உன் கூட பேசி கிட்டு இருக்கலாம் என்ன நான் சொலல்றது சரிதானே என்றான். நான் அவன் கீழே இருந்த டவலை இழுத்து அவன் கால்கள் மேலே போட்டு சரி கால்களை நேராக வைத்து கொள் என்றேன். விக்ரம் நித்தியா இந்த டவல் ஏன் போடறே தெரிஞ்சுக்கலாமா என்று கேட்க எனக்கு உண்மையிலேயே காரணம் தெரியாமல் முழித்தேன்.