இந்த வீட்டின் உரிமையாளர் 6 63

என் வாழ்க்கை பயணம் வேறு திசைக்கு திரும்பி விட்டது. இனி என் காலில் நிற்க விக்ரம் ஒரு வழி காண்பித்து இருக்கிறான் இப்போதைக்கு அதுவே சிறந்த வாய்ப்பு என்ற முடிவை ஏற்கனவே எடுத்தும் விட்டேன் அடுத்து விக்ரம் காட்டும் வழியில் செல்வது தான் நல்லது என்று புரிந்தது. விக்ரம் அவன் நண்பனை அனுப்பி விட்டு வர நான் அவனிடம் நீ போனதும் யோசித்து பார்த்தேன் நீ சொல்லுவது சரி என்று தெரிகிறது ஆனால் வழக்கை சந்திக்க நான் பெங்களூர் செல்ல வேண்டும் அங்கே கண்டிப்பாக ரோஷன் வருவான் அது மட்டுமில்லாமல் என் பெற்றோர் அவர்களுக்கு பதில் சொல்ல முடியும் என்ற சந்தேகத்தை எழுப்ப விக்ரம் ஒரே வாக்கியத்தில் என் சந்தேகத்தை தீர்த்து வைத்தான் அவன் சொன்னது நித்தியா நீ நினைத்து பார்த்தாயா ஒரு மாதம் முன்பு இப்படி புதிய இடத்தில் வாழ்கையை துவங்க போகிறாய் என்று வரும் நிகழ்வுகளை ஏற்று கொள்வதே நல்லது. அப்படியே உன் பெற்றோர் வந்தாலும் அவர்கள் உன் செயல்களை ஏற்று கொள்ள போவதில்லை மன்னிக்கப்போவதும் இல்லை என்றான்.

அவன் பேச பேச எனக்கும் விவாகரத்து சரியான முடிவு என்று தோன்ற ஆரம்பித்தது. ஆனால் இன்னும் ஒரு மாதம் கூட முழுசாக தெரியாத ஒருவனின் வார்த்தைகளை நம்புவதா என்ற கேள்வியும் எழத்தான் செய்தது. இறுதியில் உடனே முடிவு செய்ய வேண்டாம் ரெண்டு நாள் அதன் சாதக பாதகங்களை அலசுவோம் என்று முடிவு செய்து விக்ரமிடம் ரெண்டு நாள் அவகாசம் வாங்கினேன். அவனும் என்னை வற்புறுத்தாமல் அவனுடைய நண்பனை அனுப்பி வைத்தான். இரவு உணவிற்கு பிறகு விக்ரமிடம் விக்ரம் எனக்கு தனியாக இருந்து யோசிக்கணும் என்று சொல்ல அவன் வேறு ஒன்றுமே சொல்லாமல் குட் நைட் நல்லா யோசிச்சு முடிவு செய் என்று சொல்லி கொண்டே கதவை மூடி கொண்டு வெளியே சென்றான். இவ்வளவு நல்லவனா என்று தான் யோசிக்க வைத்தது.

விக்ரம் சென்றதும் கதவை மூடி கொண்டு படுக்கையில் சாய்ந்து விவாகரத்தின் சாதக பாதகங்களை அலசினேன். ஒரு புறம் விவாகரத்து என்பது என் திருமண வாழ்க்கைக்கு என் பெற்றோரின் கனவுகளுக்கு முற்றுபுள்ளி வைப்பது என்று தோன்றியது. ஆனால் மறுபுறம் விருப்பபட்டோ தவறுதலாகவோ திருமண பந்தம் என்ற எல்லையை கடந்து விட்டோம் எல்லை தாண்டிய பிறகு மீண்டும் அதே எல்லைக்குள் போவது தார்மீகமே இல்லை. கணவன் என்னதான் திருட்டுத்தனங்கள் செய்து இருந்தாலும் அதை காரணமாக எடுத்து நானும் கணவனின் நண்பனுடனே உறவு கொண்டது நம் வாழ்க்கை முறைக்கு ஏற்றதாகாது . அப்படி தவறு செய்த நண்பனை இச்சை தீர்ந்ததும் தூக்கி எரிந்தது அதை விட பெரிய தப்பு அப்படியே கணவனோடு சேர நினைத்தாலும் கண்டிப்பாக அவன் நண்பன் என்னை விட மாட்டான் நானும் தவற நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.