இந்த வீட்டின் உரிமையாளர் 2 144

ரோஷன் சொன்னது போல ஏழு மணி ஆகும் போது பெட் ரூமில் நவீன் கூப்பிடும் சத்தம் கேட்க எழுந்து சென்று பார்த்தேன். நவீன் சாரி நித்தி நேத்து கோவிச்சுகிட்டு போனதுக்கு ரொம்பே லேட்டா வந்தேன். நீ தூங்கி கிட்டு இருந்ததாலே உன்னை டிஸ்டர்ப் செய்யாமல் படுத்து விட்டேன். ரொம்ப தலை வலிக்குது சூடா ஒரு காபி என்றான். அவன் பேசியது அடங்கி இருந்த என் கோபத்தை கிளறி விட்டது. நான் பதில் ஒன்றும் சொல்லாமல் சமையல் அறைக்கு சென்று ரோஷன் சொனனது போல டீ போட்டு அவன் முன்னே எடுத்து கொண்டு போய் வச்சுட்டு ஹாலுக்கு சென்றேன். நவீன் டீ குடிச்சுகிட்டே ஹாலுக்கு வந்தார். என்ன எதுக்கு இந்த பெர்முடாஸ் போட்டிருக்கீங்க நைட் படுக்கும் போது போட மாட்டீங்களே என்று கேட்க அவன் அப்பத்தான் குனிந்து பார்த்து தன்னுடைய உடை மாறி இருப்பதை உணர்ந்து கொஞ்ச நேரம் திணறி பிறகு இல்ல நித்தி நேத்து வீட்டுக்கு வரும் போது மழை பெஞ்சுது டிரஸ் நனைசு போச்சு அது தான் சேஞ் செஞ்சேன் என்றான். நான் ஐயோ என்னங்க பழைய பெஞ்சுதுன்னு இவ்வளவு லேட்டா சொல்லறீங்க பால்கனியில் துணி எல்லாம் உலர்த்தி இருந்தேன். என்று சொல்லி கொண்டே பால்கனி பக்கம் போக அங்கே எல்லா துணியும் காய்ந்து இருப்பது எனக்கு நல்லாவே தெரியும் இருந்தும் தொட்டு பார்த்து இல்லைங்க துணி நனையவே இல்லையே என்றேன்.
நவீன் அதற்கு மேல் பேசாமல் மீண்டும் பெட் ரூம் சென்றான். நான் அன்றைய தினசரியை எடுத்து கொண்டு பெட் ரூம் சென்று பேப்பரை அவன் மேல்போட்டு விட்டு படுக்கையில் உட்கார்ந்தேன். நவீன் புரிந்து கொண்டான் நான் ஏதோ கோபமாக இருக்கிறேன் அதற்கு காரணம் அவன் நேற்று கோபித்துகொண்டு வெளியே சென்றது பிறகு குடித்து விட்டு வந்தது என்று. வேறு வழியில்லாமல் சாரி நித்தி நேற்று கொஞ்சம் அதிகமாக கோபப்பட்டு விட்டேன். நீ செஞ்சது மட்டும் சரியா என்னை அவ்வளவு மூட் ஏத்தி விட்டு அப்புறம் ஒதுங்கிகிட்டெ அதனாலே தான் நான் குடிச்சேன். நான் விளக்கம் எல்லாம்வேண்டாம் நான் இன்னைக்கு ஊருக்கு போறேன் ஏற்கனவே சொனனது போல என் ப்ரெண்ட் தங்கச்சி திருமணம் முடிந்த பிறகு தான் வருவேன் என்றுசொல்லி விட்டு அறையை விட்டு வெளியே சென்றேன்.

நவீன் குளித்து ரெடியாகி காலை உணவு சாப்பிடாமலே வேலைக்கு கிளம்பினான். அவன் போகும் போது எனக்கு கொஞ்சம் வருத்தம் தான் நவீன்சென்றதும் கதவை அடைத்து விட்டு வீட்டிற்கு கால் செய்தேன். அம்மா சொல்லு நித்தியா எப்படி இருக்கே மாப்பிள்ளை எப்படி இருக்கார் இப்போஒன்னும் சண்டை இலையே என்று முதல் சுற்று விசாரணையை முடித்து கொள்ள நான் எந்த கேள்விக்கும் பயத்தில் சொல்லாமல் அம்மா நான்இன்னைக்கு ஊருக்கு வரேன் என்று மட்டும் சொன்னேன்.