இந்த வீட்டின் உரிமையாளர் 2 143

கவலை மறந்து பசி ஆரம்பிக்க ரோஷன் தோள் மீது சாய்ந்து இருந்தவள் எழுந்து உட்கார்ந்து ரோஷன் என்ன சாப்பாடு பசிக்குது என்றேன். ரோஷன் என்னை அழைத்து கொண்டு கீழ் தளத்திற்கு சென்று டைனிங் ஹாலுக்குள் சென்றோம். அங்கே ஒரு சிறிய டைனிங் டேபிள் நான்கு பேருக்கு மட்டுமே இருக்கைகள் இருந்ததன. ரோஷன் என்னை உட்கார சொல்லிவிட்டு பைவ் மினிட்ஸ் சாப்பாடு சுட வைத்து விடுகிறேன் என்றான். நான் எழுந்து சென்று ஏன் நான் செய்ய மாட்டேனா விடு நீ போய் உட்கார் என்று அவனை அனுப்பி விட்டு பிரிட்ஜில் இருந்து ஒவ்வொரு வெசல் திறந்து பார்த்து எடுத்து சூடு செய்தேன். அவற்றை டேபிள் மேல் வைக்க ரோஷன் எழுந்து சென்றான். நான் என்ன செய்ய போகிறான் என்று பார்க்க அந்த அறையின் ஸ்க்ரீனை மூடி பக்கத்தில் இருந்த சுவிட்ச் ஆப் செய்தான் கும் இருட்டானது அறை நான் ஹே ரோஷன் உனக்கு என்ன பைத்தியமா சாப்பிட போகும் போது இப்படி விளக்கை அணைத்து இருட்டாக்கி இருக்கியே என்று சத்தம் போட அவன் டேபிளை நெருங்கி வந்து கையில் மறைத்து எடுத்து வந்திருந்த காண்டில் ஸ்டாண்டை டைனிங் டேபிள் மேலே வைத்து அந்த ஸ்டாண்டில் இருந்த நான்கு காண்டில்களையும் ஏற்றினான். மின்சார விளக்கு வெளிச்சம் இல்லை என்றாலும் போதுமான வெளிச்சம் மேஜை மீது படர்ந்தது. அந்த வெளிச்சத்தில் தெரிந்தது உணவு மற்றும் எங்கள் இருவரின் முகங்களும் தான். அவன் செய்ததை ஆமோப்பிப்பது போல என் கட்டை விரலை உயர்த்தி காட்ட ரோஷனும் அவன் கட்டை விரலை உயர்த்தினான். அவனுக்கு பரிமாற முதலில் சிக்கன் லெக் பீஸ் எடுத்து வைக்க அவன் அட இங்கே ஒரு சிக்கென்னே சிக்கன் பரிமாறுது என்றதும் நான் அவன் தலையில் குட்டி நான் சிக்கன் இல்ல கல்யாணம் ஆன ஹென் என்று சொல்லி இருவருக்கும் பரிமாறி விட்டு நானும் அமர இருவரும் சாப்பிட ஆரம்பித்தோம்.

சாப்பிட்டு முடித்ததும் நான் என் வீட்டில் செய்வது போலவே பாத்திரங்களை எடுத்து சென்று கழுவ கிளம்ப ரோஷன் என்னை தடுத்து நித்தியா இதெல்லாம் செய்ய ஆள் இருக்கு நீ செய்ய வேண்டாம் என்றான். நான் கிண்டல் செய்யறியா ரோஷன் இந்த வீட்டிலே உன்னையும் என்னையும் விட்டா நாள் நடமாட்டமே இல்லை இன்னும் என்னவெல்லாம் பொய் சொல்ல போறே என்றேன். அவன் இருக்காங்கனு சொன்னா நம்பு அவங்க வேலை செய்யும் போது மட்டும் தான் இந்த வீட்டிற்குள்ளேயே வருவாங்க என்று சொல்லி என்னை ஹாலுக்கு இழுத்து சென்றான். எனக்கு மனதிலும் உடம்பிலும் சோர்வு இருக்க நான் ரோஷன் நான் சென்று படுக்க போறேன் குட் நைட் என்று சொல்லி விட்டு எனக்கு என்று சொன்ன அறைக்குள் சென்று கதவை அடைத்தேன். ரோஷன் அறையும் மூடும் சத்தம் லேசாக கேட்டது. நான் விளக்கை ஏறிய விட்டே படுத்தேன். மொபைல் எடுத்து பார்க்க புது சிம் மாற்றியது நினைவு இல்லாமல் ஏன் எந்த காண்டக்ட்டும் இல்லை என்று யோசித்தேன்.