இந்த வீட்டின் உரிமையாளர் 2 144

என்னை தவறாக கை வைத்து இருக்கணும்னா இன்னைக்கு மட்டும் நானே பல சந்தர்ப்பங்களை குடுத்து இருக்கிறேன் அப்போதெல்லாம் கொஞ்சம் கூட அவன் என்னை தவறாக உபயோகிக்காதவன் இப்போ தேங்க்ஸ் சொன்னதுக்கு தோளை தட்டி கொடுத்தது ஒரு பாசத்துடன்தான் என்றுதான் எடுக்கவேண்டும். நான் ஒரு முறை படுக்கை அறையை எட்டி பார்த்தேன் நவீன் என்ன செய்கிறார் என்று அவர் போதை மயக்கத்தில் ஆழ்ந்து இருந்தார்.

மீண்டும் ஹாலுக்கு வந்து ரோஷன் அருகே இருந்த சோபாவில் உட்கார்ந்து ரோஷன் இப்படி இரவு முழுக்க டிவி பார்க்க போறீங்களா போர் அடிக்காதா என்று கேட்க ரோஷன் உங்களுக்கு பிடிக்கலைனா நிறுத்திவிடுகிறேன்.

என்ன சும்மா இருந்தா என்கிட்டே இருக்க ஒரே கேட்ட பழக்கம் சிகரட் பிடிக்க தூண்டும் அதுதான் யோசனை என்றான். நான் நீங்க ஆம்பளைதானே வெளியே காலாற சென்று பிடிச்சுவிட்டு வாங்க வீட்டுக்குள்ளே பிடித்தாதானே அந்த ஸ்மெல் வரும் என்றேன். ரோஷன் உடனே நவீன் எப்படியும் எழுந்திருக்க போறதில்லை நீங்களும் வாங்களேன் அப்படி வாக் செய்து விட்டு வருவோம் நம்ம லக் இருந்தா ஒன்னு ரெண்டு ஐஸ்கிரீம் பார்லர் திறந்து இருப்பான் என்று சொல்ல எனக்கும் சரி போகலாம்னு பட சரி என்றேன். உள்ளே சென்று நைட்டியை மாற்றி ஜீன்ஸ் மேலே ஒரு டாப்ஸ் போட்டுகிட்டு வெளியே வந்தேன். வீட்டை பூட்டாமல் வெறுமனே அடைத்துவிட்டு நடக்க ஆரம்பித்தோம்

இந்த நேரத்தில் நான் பெங்களூர் வந்ததில் இருந்து வெளியே வந்ததே இல்லை குளிர்காற்று குத்துவது போல இருந்தது. ஷால் எடுத்திருக்கணும் என்று தோன்றியது.

நான் கைகளை மார்பின் மீது இறுக்கமாக கட்டி நடப்பதை பார்த்து ரோஷன் இந்த குளிருக்கு இப்படி செய்தா சரி ஆகாது ரெண்டு கையையும் நன்றாக தேய்க்கணும் அப்போ ரெண்டு கைகளுக்கு நடுவே கிளம்பும் சூட்டை முகம் கழுத்து போன்ற இடங்களில் வைத்தால் கொஞ்சம் சுகமா இருக்கும் என்றான். நானும் என்னால் முடிந்தவரை தேய்த்து பிறகு பார்த்தால் ரோஷன் சொன்னா மாதிரி சூடு எல்லாம் பெருசா ஏற்படவில்லை. கையை முகம் அருகே எடுத்து போவதற்குள் கைகள் சில்லென்று மாறி இருந்தது. ரெண்டு மூன்று முறை செய்து பார்த்து அதெல்லாம் எனக்கு சரியா செய்ய தெரியலை ரோஷன் என்றேன்.