இந்த வீட்டின் உரிமையாளர் 2 145

அம்மா மாப்பிள்ளைக்கு எத்தனை நாள் லீவ் கிடைச்சுது என்று கேட்க நான் ஐயோ அம்மாஅவர் வரலை நான் மட்டும் தான் வரேன் என்றதும் அம்மா ஹே உனக்கு பைத்தியம் பிடிச்சு இருக்கா எதுக்கு தனியா வரே மாப்பிள்ளைக்கு எப்போ லீவ்கிடைக்குதோ அப்போ வந்தா போதும் வேணும்னா சொல்லு அப்பா கிட்டே கேட்டு நானும் அவரும் அங்கே வரோம் என்றாள் . நான் முடியாது நான்தனியா வர தான் போறேன் என்றேன். அம்மா நித்தியா சொல்லறதை கேளு நீ இன்னும் சின்ன பொண்ணு இல்ல சண்டை வருவது எல்லாம் சகஜம்பொண்ணு தான் அட்ஜஸ்ட் செய்யணும். இப்போ போனை வை அப்பா வந்ததும் பேச சொல்லறேன் என்று சொல்லி வைத்து விட்டாள் .

அம்மா தனியாக ஊருக்கு வர கூடாது என்று சொன்ன பிறகு எனக்குள் வீம்பு அதிகமாகியது. அது என்ன நவீன் அவர் வீட்டிற்கு போகும்போதெல்லாம் என்னையும் அழைத்து போவதில்லையே அவருக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா என்று. இன்றும் நவீன் ஆபீஸ் சென்ற பிறகு அழைத்து பேசவில்லை அது மேலும் என் கோபத்தை அதிகமாக்கியது. நானே நவீனை அழைத்து நான் கிளம்பறேன் வீட்டு சாவி ஒன்று உங்களிடம் இருக்கு எப்போ திரும்பி வருவேன்னு பிறகு கால் செய்து சொல்கிறேன் குட் பை அந்த குட் சொல்லும் போது கொஞ்சம் அதகமான அழுத்தத்தை குடுத்தேன். நான் நினைத்தது நவீன் மீண்டும் கூப்பிடுவார் சமாதானம் செய்வார் என்று தான் ஆனால் நான் பேசி முடித்து அரை மணி நேரம் ஆகியும் அவர் கால் வரவேயில்லை. அதன் பிறகு கொஞ்ச நேரம் கழித்து என் மொபைல் அடிக்க நான் மனசுக்குள் சொல்லி கொண்டேன் நவீன் நீங்க எப்படியும் என்னிடம் சரண் அடைவீங்கனு என்று நினைத்தப்படி மொபைலை எடுக்க அந்த கால் நவீன் இல்லை அப்பா வெறுப்புடன் சொல்லுங்கப்பா எப்படி இருக்கீங்க என்ற சம்ப்ரதாயத்துடன் நிறுத்த அவர் நித்தியாமா அம்மா என்னமோ சொல்லிக்கிட்டு இருந்தா நீ ஊருக்கு வர போறேன்னு எப்போ கிளம்பி வரே ப்ளைட்ல வரியா ட்ரெயினா வண்டி அனுப்பனுமா என்று கேட்க அப்பா நா அப்பா தான் என்று கொஞ்சி விட்டு இல்லப்பா எனக்கு ரெண்டுக்கும் டிக்கெட் கிடைக்கலே நைட் ஆம்னி பஸ்ல வரேன் அது நம்ம வீட்டு கிட்டேயே நிக்கும் நான் வந்துடறேன் என்றதும் அப்பா என்ன நித்தியா மாப்பிள்ளை பஸ்ல வருவாரா சிரமமா இருக்கும் கொஞ்சம் இரு நான் இங்கே யார் கிட்டேயாவது சொல்லி பிளைட் டிக்கெட் ஏற்பாடு செய்யறேன் நாளைக்கு கிளம்பி வாங்க என்று சொல்ல அடங்கி இருந்த கோபம் எல்லாம் மீண்டும் வர நான் அப்பா அம்மா சொல்லையா நான் மட்டும் தான் வரேன் அவர் வரலை என்றேன். அப்பா உடனே அம்மா படித்த அதே புராணத்தை படிக்க ஆரம்பிச்சார். இதுவே அம்மா பேசி இருந்தா கால் கட் செய்து இருப்பேன் அப்பா என்பதால் அந்த தைரியம் வரவில்லை. ஒன்றும் பதில் பேசாமல் அவர் சொன்னதை வெறுமனே உம கொட்டி கேட்டேன்