கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 4 22

“ச… சாரி… வெரி சாரி … நான் செல்வாவோட ஃப்ரெண்ட், நான் அவர் கூட வேலை செய்யறேன். அவர் இன்னைக்கு ஊருக்கு போறார். அதனால தமாஷ் பண்ணிட்டேன்” குரலில் ஒரு நடுக்கத்துடன் அவள் திண்டாடினாள். நீங்க … நீங்க யாரு மேடம்” அவள் குரல் பயத்தில் குழைந்தது.
“நானா… அதான் நீ சொன்னியே அந்த முந்தானைக்கு சொந்தக்காரி; அவனை பெத்து வளத்து ஆளாக்கினவ; இப்ப அவன் கொஞ்ச நாளா என் பேச்சை கேக்க மாட்டேங்கிறான்; யாரோ சுகன்யாவாம் அவ பின்னால சுத்தறான்னு கேள்வி; இப்ப நீ ஒருத்தி அவனை வாடாங்கிறே, போடாங்கிறே; அவன் இப்ப ஊரை விட்டு புது ஊருக்கு வேற போறான்; இவனை என்ன பண்றதுன்னு எனக்கு தெரியல; எம்மாடி நீ யாராயிருந்தாலும் அவனுக்கு வெறும் ஃப்ரெண்ட்டா மட்டும் இரு; அவன் குளிச்சுகிட்டு இருக்கான்; உன் பேரை சொல்லு; வந்தான்னா உன் கிட்ட பேச சொல்றேன்; இந்த வீட்டுல, வர போனுக்கு பதில் சொல்ற இந்த ஒரு வேலை தான் எனக்கு பாக்கியா இருந்தது.” அவள் குரலில் ஏளனமும், கிண்டலும் சேர்ந்து வந்தது.
“நீங்க சொன்ன அந்த சுகன்யா நான்தான் மேடம். நான் இப்படி பேசிட்டேன்னு என்னை தப்பா நினைக்காதீங்க மேடம். ஏதோ விளையாட்டா பேசிட்டேன். நீங்க போன் எடுப்பீங்கன்னு எனக்கு தெரியாது; நான் நல்ல பொண்ணு; என்னை நேர்ல்ல பாத்தீங்கன்னா நீங்களே புரிஞ்சுப்பீங்க; செல்வா கிட்ட சொல்லுங்க நான் கால் பண்ணேன்னு.”
“ரொம்ப நல்லா இருக்குடியம்மா. உனக்கு நீயே சர்டிபிகேட் குடுத்துக்கற நல்லப் பொண்ணுன்னு” அவள் வெகுண்டு பேசினாள்.
“அயம் ரியலி சாரி மேடம் … பிளீஸ் என்னை மன்னிச்சுடுங்க” அவள் அதற்கு மேல் என்ன பேசுவதென்று புரியாமல் லைனை கட் பண்ணினாள்.
“ச்சே… ச்சே.. என்ன மடத்தனம் பண்ணேன்… செல்வா டென்ஷனாயிடுவான். பிள்ளையார் புடிக்கப் போய் குரங்கா போச்சே, இதுவும் ஒரு விதத்துல நல்லதுதான், வேணும்ன்னு நான் பண்ணல; அதுவா நடந்து போச்சு; இப்ப என்ன பண்றது?” வெய்ட் பண்ணுவோம் எப்படி இருந்தாலும் செல்வா கால் பண்ணுவான். அவள் தன்னை சமாதானப்படுத்திக் கொண்டாள். சுகன்யாவின் போன் ஒலித்தது; அவனேதான்;
“செல்வா சொல்லுப்பா” அவள் அவனை கொஞ்சினாள்.
“என்ன சுகன்யா இது; எத்தனை தடவை உனக்கு சொல்லியிருக்கேன்; எங்க அம்மா ஒரு டென்ஷன் பார்ட்டி; அவங்களை நீ இப்ப கடுப்பேத்திட்டியே; இப்ப யார் அவ இந்த சுகன்யா; இவ்வளவு உரிமையா உன்னை மாடு மேய்க்கிறான்னு என்னை பெரட்டி பெரட்டி எடுக்கிறாங்கடி; அப்ப நான் கேள்வி பட்டது எல்லாம் உண்மை தானா; உனக்கு நாங்க பொண்ணு பாத்துகிட்டு இருக்கோம் உனக்கும் அவளுக்கும் என்ன உறவுன்னு குதிக்கிறாங்கடி; நான் ஊருக்கு போற இன்னிக்கு அப்படி அவங்க கிட்ட என்னம்மா சொன்னே நீ; கொஞ்சம் பொறுன்னு நேத்து கூட சொன்னேனடி” செல்வா அழாத குறையாக பேசினான்.
“உன் போனை அவங்க ஏன் எடுத்தாங்க; எனக்கு எப்படி தெரியும் அவங்க எடுப்பாங்கன்னு; குதிக்கறாங்களா; இதுதான் நல்ல சந்தர்ப்பம் அதுவே வந்து தானா அமைஞ்சு போச்சு; நம்மளைப்பத்தி அவங்க கிட்ட இப்பவே நீ சொல்லிடேன்; காலையில உங்கிட்ட பேசினவ என் கையால தாலி கட்டிக்கப் போறவ; அவதான் உன் மருமகன்னு; நீ தாலியை மட்டும் கட்டிடு; அதுக்கப்புறம் பாரு; உங்கம்மா டென்ஷன்லாம் பறந்து போற மாதிரி பண்ணிடமாட்டேன்; அவங்க என்னை தலை மேல தூக்கி வெச்சுகற மாதிரி நடப்பேன்” சுகன்யா இன்று அவனுடன் விளையாடும் மூடில் இருந்தாள்.

“ஏண்டி என்ன கொல்றீங்க எல்லாருமா … ஒரு பக்கம் சாவித்திரி, ஒரு பக்கம் எங்க அம்மா, ஒரு பக்கம் நீ; என்னதாண்டி சொன்ன நீ … எங்கம்மா கிட்ட?”
“நேரா வா சொல்றேன் … உனக்கு ஒண்ணு குடுக்கணும்ன்னு இருக்கேன் அதையும் வந்து வாங்கிக்கோ” தலைக்கு மேல தண்ணி போயாச்சு, இனிமே யாருக்கு என்ன பயப்படறது. அவள் குரலில் உல்லாசம் தெறித்தது.
“என்னது … என்ன சொல்றே சுகு”
“களுக் என சிரித்தாள் சுகன்யா”
“என்ன சிரிக்கிறே” அவள் சிரிப்பில் தொனித்த காதல் வேட்கை, நேசம், ஏக்கம், தாபம், மோகம், காமம், என எல்லா உணர்ச்சிகளும் ஒன்று சேர்ந்து அவனுக்கு போதை ஏற்றி அவனை தடுமாறவைத்தன.
“இப்ப எங்கிட்ட எங்க டயமிருக்கு சுகன்யா”
“சரி … வரதும் வராததும் உன் இஷ்ட்டம்.
“ அவள் கிசு கிசுப்பு குரலில் அவனைப் பார்க்க துடிக்கும் விருப்பம் மேலோங்கி ஒலித்தது.
“எங்க வரச்சொல்றே” அவன் பதட்டம் லேசாக குறைய ஆரம்பித்தது.
“என் ரூமுக்கு வா … மூணு மணிக்குத்தானே உனக்கு வண்டி; ஒரு ரெண்டு மணி நேரம் நிம்மதியா பேசிகிட்டு இருக்கலாம்,”
“என்ன பைத்தியம் புடிச்சுப் போச்சா உனக்கு? உன் ஹவுஸ் ஓனர் வீட்டுல யாரும் இல்லயா” அவன் புரியாமல் கேட்டான்.

Updated: March 21, 2021 — 4:29 am