கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 4 13

“சர்வீசுக்கு விட்டிருக்கிறேன். காலையில பஸ்லதான் ஆபீசுக்கு வந்தேன்” தன் கையை அவன் உதறிக்கொண்டான்.
“சரி போகலாமா … கையில என்ன ஆச்சு உனக்கு? உன்மையான அன்புடன் கேட்டவள், எனக்கு பசிக்குது செல்வா” அவள் அவன் வலக்கையை தன் இடக்கையில் எடுத்து கோத்துக்கொண்டாள், அவன் தோளுடன் தன் தோள் உரச நெருங்கி நடந்தாள்.
“ம்ம்ம் … புழுக்கமா இல்லே” அவளுடன் நடக்க ஆரம்பித்தவன், அவள் கையிலிருந்து தன் கையை இயல்பாக விடுவிப்பது போல் எடுத்துக்கொண்டவன், சட்டைக் காலரை தன் இருகைகளாலும் தூக்கிவிட்டு கொண்டு தன் மார்பில் வாயால் காற்றை ஊதினான்.
“செல்வா! மழை நின்னுப்போச்சு; ஆனா தூறல் நிக்கலங்கற மாதிரி உனக்கு என் மேல இருக்கற கோபம் இன்னும் போகல அதானே? அவன் கண்களை அவள் ஆழமாக நோக்கினாள்.
“ச்சே… ச்சே… அதெல்லாம் ஒண்ணும் இல்ல” அவள் பார்வையை அவனால் நேருக்கு நேராக சந்திக்க முடியவில்லை.
“அப்ப ஏன் என் கையை விலக்கிட்டு தள்ளி நடக்கறே?” இது வரை உறுதியாக இருந்த அவள் மனம் சற்றே இளகி, அவள் கண்கள் சட்டென கலங்கத்தொடங்கி, குரல் லேசாக தழுதழுப்புடன் வந்தது.
“ச்சே… சுகு என்னம்மா இது, சின்ன புள்ளையாட்டம் எதுக்கெடுத்தாலும் அழறே; இன்னைக்கு நான் எது பண்ணாலும், எது பேசினாலும் அது தப்புத் தப்பாகி பிரச்சனையில போய் முடியுது” அவள் கண் கலங்குவதைப் பார்த்தவுடன் செல்வாவுக்கு தன் நெஞ்சே கலங்குவது போல் இருந்தது. சட்டென நெருங்கி அவள் தோளில் தன் கையை போட்டு தன்னுடன் சேர்த்துக்கொண்டான்.
“இப்ப திருப்தி தானே உனக்கு … என்னை அழ வெச்சுப் பாக்கணும்ன்னு நீ நினைச்சது நடந்து போச்சுல்ல, செல்வா! நீ உன் மனசுல புழுங்கிக்கிட்டிருக்கே; வெளியில எல்லாம் கூலாத்தான் இருக்கு”, அவள் உதடுகள் இன்னும் துடித்துக் கொண்டிருந்தன. தன் தோளில் அவன் கை விழுந்ததும், அவனை ஜெயித்துவிட்டதாக ஒரு உணர்வும் அவளுள் எழ , துடிக்கும் அவள் இதழ் ஒரத்தில் புன்முறுவலும் பளிச்சிட ஆரம்பித்தது. அவன் இடுப்பை, சுகன்யா தன் இடது கையால் வளைத்துக்கொண்டாள். அவள் இடது மார்பின் பூரிப்பும், செழுமையும், அவன் விலாவில் பதியுமாறு, அவனை ஒட்டி அவள் நடந்தாள். அவர்கள் நெருங்கி நடப்பதால் உண்டான உரசலில், மெல்லிய மின்சார அலைகள் அவர்கள் உடலில் ஓடி இருவரின் தேகங்களும் கிளுகிளுப்பை உணரத் தொடங்கின. செல்வாவின் மனம் அவனைப்பார்த்துச் சிரித்தது. இது என்ன வெட்கம் கெட்டத்தனமா இருக்கு; இவள் ஒரு பெண்; உடலால் என்னை விட வலுவில் குறைந்தவள். இவள் என் அருகில் இருக்கிறாள் என்ற எண்ணமும்; அவள் உடல் அருகாமையும் என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்கிவிடுகிறது. இவள் கண்கள் லேசாக கலங்குவதை பார்த்தவுடன், என் உடல் வெலவெலத்து கால்களில் வலு குறைந்து போகிறது. இந்த கண்ணீரில் இவ்வளவு சக்தியா? எனக்கு மிகப்பிரியமானவர்களில் இவளும் ஒருத்தி. இந்த எண்ணம்தான் என்னை இந்த அளவுக்கு வலுவற்றவானக ஆக்கிவிடுகிறது. என் மனம் அவள் கண்ணீரைத் துடைக்கப் பரபரக்கிறது. என் கை விரைந்து அவள் தோளைத் ஆதரவாக தழுவுகிறதே! சை… இவகிட்ட ஒரு அடிமை போல சரியாக சிக்கிக்கிட்டிருக்கேன் நான். இவளின் கை என் இடுப்பை வருடுகிறது; அவளின் மார்ச்சதை என் மேல் லேசாக உரசுகிறது; இத்தனையில், இவளை இனிமேல் நான் தொடமாட்டேன் என்று காலையில் நான் எடுத்த முடிவும், வைராக்கியமும் காற்றில் பறந்து விட்டன. தன் மனம் விட்டு அவன் உரக்கச் சிரித்தான். மனம் விட்டு சிரித்ததால், தான் லேசானதைப் போல் உணர்ந்தான் அவன்.
“அப்பாடா… இப்பத்தான் உன் மூஞ்சி ஒரிஜினல் மூஞ்சா இருக்கு” அவளும் தன் வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்தாள்.

“எனக்கு இருக்கறது ஒரு மூஞ்சிதானே சுகு, அதுல ஒரிஜினல் என்ன டுப்ளீகேட் என்ன?”
“ஒரு மூஞ்சிதான் உனக்கு, அதுல ஒன்னும் சந்தேகம் இல்ல; ஆனா, அதை காத்தாலேருந்து, நீதான் இஞ்சி தின்ன குரங்கு மாதிரி வெச்சிக்கிட்டு இருந்தே. ஆமா இப்ப எதுக்கு இத்தனை பெரிய சிரிப்பு சிரிச்சே என்னைப் பாத்து” அவர்கள் ஒரு ஃபாஸ்ட் ஃபூட் கடைக்கு முன் நின்றிருந்தார்கள்.
“சொல்றேன், என்ன சாப்பிடறே” அவள் முகத்தைப் பிரியத்துடன் பார்த்தான்.
“வாழைக்கா பஜ்ஜியும் காபியும்”
“சுகு, முதல்லா நீ சாப்பிடு, அப்புறம் காஃபி வேறெங்காவது குடிக்கலாம்”. செல்வா, அவளுக்கு பஜ்ஜியும் தனக்கு பூரியும் வாங்கிக்கொண்டு சற்று தள்ளி சாலையோரம் இருந்த ஒரு கல் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டார்கள்.
“இன்னைக்கு காலைல நீ உன் கேபின்ல என்னைத் தொடாதேன்னு சொன்னே”
“செல்வா, பொய் சொல்லாதே, திருப்பியும் எரிச்சல் மூட்டாதே! ஆபீசுக்குன்னு ஒரு டெக்கோரம் இருக்கு, அதனால அங்க என்னைத் தொடாதேன்னு சொன்னேன்”
“சுகன்யா, கேண்டீன்ல சாவித்திரி பொண்ணு பின்னால நான் போயிடுவேன்னு நீ என்னை சந்தேகப்பட்டே. அப்புறம் என் கையாலத்தான் தாலிக் கட்டிக்குவேன்னு டிக்ளேர் பண்ணே.”அவன் சிரித்துக்கொண்டே தொடர்ந்தான்

Updated: March 21, 2021 — 4:29 am