கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 4 13

“ரொம்ப நேரமா வெய்ட் பண்றியா?” சுகன்யா செல்லில் மீண்டும் செல்வாவின் நம்பரை அழுத்திக்கொண்டிருந்த போது, அவன் சாலையை நிதானமாக கடந்து வந்து, அவளை நெருங்கியதும், முகத்தில் எந்த விதமான உணர்ச்சியும் காட்டாமல் கேட்டான்.
“அஞ்சு மணியிலேருந்து கால் கடுக்க நிக்கறேன்; எத்தனை தரம் போன் பண்ணேன், போனை ஏன் நீ அட்டண்ட் பண்ணல?” உதடுகளை சுழித்துக் கொண்டாள்.
“ஒரு நாள் … ஒரு நாள் நீ எனக்காக நின்ன; நா…நான்ன்ன் எத்தனை நாள் உனக்காக …” வார்த்தையை முடிக்காமல் விட்ட அவன் அவள் முகத்தைப் பார்க்காமல் எதிர் திசையில் பார்த்துக் கொண்டிருந்தான்.
“ம்ம்ம்ம் …Tit for tot … அதானே … என்னைக்கும் நான் உன்னை வேணும்ன்னு காத்திருக்க வெச்சது இல்ல … நான் உனக்காக எவ்வளவு நாள் வேணா காத்திருக்க தயார் செல்வா. அதை மட்டும் நல்லா புரிஞ்சுக்க. ஆனா இந்த மாதிரி ரோட் ஓரத்துல இல்ல. ரெண்டு நிமிஷம் முன்னாடி, தெருல போற ஒரு சொறி நாய், தன் காரை நிறுத்தி வர்றியாடி; ஆள் டக்கராத்தான் இருக்க; என்ன ரேட்டுன்னு கண்ணடிச்சுக் கேட்டுது. காலைத் தூக்கி செருப்பைக் காட்டினேன்.
“அப்ப ஏண்டி இங்க ஒரு மணி நேரமா நிக்கறன்னான்; ஒரு மணி நேரமா அவன் என்னை தன் கண்ணாலயே, இந்த சமூகம் சொல்லுதே, கற்பு கற்புன்னு, எனக்கு வரப்போறவனுக்காக நான் பொத்தி வெச்சிருக்கற அந்த கற்பை அவன் அழிச்சிருக்கான், இதுல உனக்கு சந்தோஷம்ன்னா, அந்த மகிழ்ச்சியை நீ அனுபவிக்கறதுல எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லே” அவள் குரலில் கசப்புடன் ஏளனமும் கலந்திருந்தது.
“சாரி சுகன்யா; நான் சாதாரணமாத்தான் சொன்னேன். நீ நான் சொன்னதை தப்பா புரிஞ்சுகிட்டேன்னு நினைக்கிறேன். இரண்டு பேருக்குமே இன்னைக்கு மூடு சரியில்லை”. அவள் எரிச்சலும், கோபமுமாக பேசியதை கேட்டதும், ஒரு நிமிடம் அவனுக்குத் தான் தலைக்குப்புற தடுக்கி விழுந்தது போலிருந்தது. நான் ஏதோ சொல்லப் போய் அது வேறு எதுவாவோ மாறிப்போயிடுச்சே, அவன் தன்னைத்தானே நொந்து கொண்டான்.
“மத்தியானம் சாப்பிடக் கூப்பிட்டேன்; அப்ப பிஸின்னு சொன்னே; இப்ப ஆபீஸ் முடிஞ்சு ஒரு மணி நேரத்துக்கு மேல ஆச்சு, போனை கூட எடுக்க கூட முடியாம அப்படி என்ன பண்ணிகிட்டு இருந்தே?” அவள் எரிச்சல் குறையவில்லை.
“சார்ஜ் ஹேண்ட் ஓவர் பண்ண வேண்டிய ஃபைல்ஸ் பட்டியல் போட்டுகிட்டு இருந்தேன். நம்ம சீப் என் கேபின்ல வந்து உட்க்கார்ந்துட்டான். அப்ப அந்த சனியன் புடிச்ச சாவித்திரியும் கூட நின்னுகிட்டு வரட்டு பந்தா பண்ணிகிட்டு இருந்தா. டக்குன்னு எல்லாத்தையும் போட்டுட்டு எழுந்து வரமுடியல” அவன் தன் கைகுட்டையால் முகத்தை அழுத்தி துடைத்துக்கொண்டான்.
“பரவாயில்ல… நீ எப்படி வேணா சொல்லு … காலையில நான் யோசிக்கமா உங்கிட்ட பேசிட்டேன். அது என் தப்புத்தான். அதை உங்கிட்ட நான் ஒத்துகிட்டு மூணு தரம் சாரி சொல்லிட்டேன்.”
“இப்ப ஏன் நடந்து வர்ரே உன் வண்டிக்கு என்ன ஆச்சு செல்வா?” சுகன்யா தான் இயல்பாக இருப்பதாக அவனுக்கு காட்ட முயற்சி செய்தாள்.

Updated: March 21, 2021 — 4:29 am