இடை அழகி மேடம் சங்கீதா 11 71

இது எங்க ஹாஸ்பிடல் வார்டன் பாயிஸ் அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்டர்.. மொத்தமா எத்தினி பேர் இருக்காங்களோ எல்லாருமே இன்னிக்கி வந்திருக்காங்க… கூடவே அந்த யூனிஃபார்ம் போட்டு எங்கள்ள ஒருத்தனா இருந்தாதான் குமாரை கொலை செய்ய உதவுறதுக்கு சாத்தியமாகும்.. தவிர எங்க ஹாஸ்பிடல் வார்டன் பாய் டிரஸ் எந்த டைலர் கிட்ட குடுத்தாலும் தைச்சி குடுக்க ரொம்ப நாள் ஆகாது….” என்று அவர் பங்குக்கு விறைப்பாக பேசி முடித்தார்… ராகவ் இன்ஸ்பெக்டரை நோக்கி, “இன்ஸ்பெக்டர்.. நான் ஏற்கனவே சொன்னது மாதிரி இந்த விஷயத்தை தயவுசெய்து மீடியாவுக்கு தெரியப் படுத்த வேணாம். கூடவே பெரிய விஷயம் ஆக்க வேணாம்.. குமார் ஒன்னும் வி.ஐ.பி கிடையாது. என் கம்பெனியில் ஒரு சாதாரண எம்ப்லாயிதான், உங்க கான்ஸ்டபில் எடுக்குற போஃடோஸ் எல்லாம் உங்க இன்வஸ்டிகேஷனுக்கு மட்டும் பயன் படுத்திக்கோங்க, வேற யார் கைக்கும் போக வேண்டாம். ஐ ஹோப் யு அண்டர்ஸ்டான்ட்” – கொஞ்சம் கண்டிப்பாக சொன்னான் ராகவ். “ஹ்ம்ம்..” – நெற்றி சுருங்க கண்களை மூடி “சரி சார்” என்றார்… பிறகு மெல்ல பேச ஆரம்பித்தார் “உங்க சித்தப்பா கிட்ட ஏதோ என்னை பத்தி பேசுறேன்னு சொன்னீங்களே?” – இவ்வளவு நேரம் ராகவிடம் ஒத்துழைத்து பதில் சொன்னதுக்கெல்லாம் பலன் வேண்டாமா? கஷ்டப்பட்டு செயற்கையான சிரிப்பை வரவழைத்து பேசினார் இன்ஸ்பெக்டர். “ஹ்ம்ம்.. சமயம் வரும்போது பேசுறேன்.” – என்று சுருக்கமாக முடித்துக் கொண்டான் ராகவ். ராகவ் அங்கிருந்து கிளம்பும்போது டாக்டர் அவனிடம் நெருங்கி வந்து “ராகவ்…. இதுல எங்க ஹாஸ்பிடல் பேரும் சம்மந்தப்பட்டிருக்கு….” என்று லேசாக இழுத்தார்.. அதன் அர்த்தம் என்னவென்று ராகவ் புரிந்துகொண்டு “கவலை படாதீங்க, விஷயம் நமக்குள்ள மட்டும்தான் இருக்கும். வெளியே வராது. உங்க ஹாஸ்பிடல் பேர் கெடாது.” என்றான். ராகவ் சற்று அமைதியாய் சங்கீதாவின் அருகினில் வந்து அமர்ந்தான். எந்த ஒரு கஷ்டம் வந்தாலும் அதிகம் உடைந்து விடமாட்டாள் சங்கீதா. ஆனால் உயிர் பயம் என்பது பாரபட்சம் இல்லாமல் யாருக்கும் வரும். இருப்பினும் அதையும் தாண்டி மனதில் தைரியம் வரவழைத்துக் கொண்டாள். ராகவ் அங்கும் இங்கும் நீண்ட நேரம் போலீசிடமும், டாக்டரிடமும் மாறி மாறி பேசி வருவதை நீண்ட நேரம் கவனித்தாள். இப்போது அவளிடம் விசும்பல் கொஞ்சம் குறைந்திருந்தது. அருகில் ராகவின் தோள்களைப் பற்றினாள். “என்னடா….” – பரிவுடன் கேட்டான் ராகவ்.. “போதும்டா, உன்னை இன்னும் சிரமப் படுத்திக்காத..” – இந்த வார்த்தைகளை சங்கீதா சொல்லும்போது அவனுக்கு இயல்பாய் வரும் கோவம் வந்தது. “என்ன போதும்? எது சிரமம், நான் ஒன்னும் என் பக்கத்து வீட்டுக்காரிக்கு இதெல்லாம் செய்யல..” – கோவத்தில் திரும்பிக் கொண்டான் ராகவ்.. தன் வலது கையால் அவன் முகத்தை மீண்டும் தன் பக்கம் திருப்பி, “கோவப் படாதடா… என்னை சுத்தி நடக்குற விஷயமெல்லாம் எனக்கு பைத்தியம் பிடிக்க வெக்குது. உன்னை பார்த்ததுல இருந்துதான் என் மனசுக்கு ஒரு விதமான தெம்பு கிடைச்சிது. இப்போ….(சில நொடிகள் பேசவில்லை..) ஸ்ஷ்… (லேசாக அழ தொடங்கினாள்) “எல்லா சடங்கையும் செய்யணும், இதுங்க ரெண்டும் சின்ன வயசுல பார்க்கக்கூடாததை எல்லாம் பார்கும்ங்க, அதெல்லாம் எதுக்கு செய்யுறோம்னு அர்த்தம் கேட்க்கும்ங்க, அதுக்கெல்லாம் பதில் சொல்லுற நிலைமையில நான் இருப்பேனானு தெரியலடா..” – ராகவின் தோள்களில் சாய்ந்தவாறு மெதுவாக அழுதுகொண்டே பேசினாள் சங்கீதா.. ஏன் ஏதாவது ஒலரிகிட்டே இருக்கே? – சற்று அதட்டலுடன் சொன்னான் ராகவ்…. “எல்லாருக்கும் சொல்லி அனுப்பனும் ஸ்ஷ்…” – அவளது கண்ணீர் ரகாவின் தோள்களை ஈரமாக்கியது.. “இன்னும் என்னென்ன செய்யணும்னு கூட தெரியாது.. கூடவே உனக்கும் நிறைய கஷ்டம் குடுக்குறேன்.. ஸ்ஷ்…” – ராகவ் பேசுவது எதையும் காதில் வாங்காமல் கண்களை மூடி பேசிக்கொண்டே இருந்தாள் சங்கீதா.. “நான் ஒரு விஷயம் சொல்லவா…?” “இஸ்ஷ்… சொல்லு..” – விசும்பலுடன் பேசினாள் சங்கீதா.. “உன் வாழ்க்கைல முக்கியமானவங்கன்னு சொன்னா, நான், அப்புறம் உன் மேல அக்கறை எடுத்துக்குற நிர்மலா அக்கா, உன் பசங்க, உன் தோழி ரம்யா, அப்புறம் உன்னை அக்காவா நினைக்கிற சஞ்சனா.

Updated: July 29, 2025 — 6:45 pm

2 Comments

  1. Next post please

  2. திர்லீங் ரியலி சூப்பர்

Comments are closed.