இடை அழகி மேடம் சங்கீதா 11 64

இவங்களை தவிர வேற யாரும் உன் வாழ்க்கைல இனி தேவை இல்லைன்னு நான் நினைக்கிறேன்.” – ராகவ் இதை சொல்லும்போது மெளனமாக இருந்தாள் சங்கீதா…. “சாஸ்திரம் சம்ப்ரதாயம் சடங்குனு நமக்கு முன்னாடி இருந்தவங்க எல்லாம் செய்து இருக்காங்கன்னு சொல்லி நாமும் அந்த சாக்கடைல விழனும்னு அவசியம் இல்ல. தெரிஞ்சே உன் பசங்களுக்கும் உனக்கும் கஷ்டம் குடுக்குற ஒரு விஷயத்தை நீ செய்யனும்னு கட்டாயம் இல்ல. ஹாஸ்பிடல்ல சொல்லி நானே அடுத்து என்ன ஃப்பார்மாலிட்டி படி செய்யணுமோ அதை செய்ய சொல்லி சொல்லிடுறேன். திரும்பி காரியம் சடங்குன்னு சொல்லி கடுப்பேத்தாத….” – சங்கீதாவின் முகம் பார்த்து கோவம் கலந்த அக்கரையில் சொன்னான் ராகவ்..

“நா… நான் சொல்ல வந்தது..” – சங்கீதா ஏதோ சொல்ல வர ராகவ் நிறுத்தினான்.. “உன் வாழ்க்கைல ஏழு வருஷத்துக்கு முன்னாடி ஒரு விபத்து நடந்துடுச்சி.. ஐ மீன்.. தப்பான ஆள் கூட கல்யாணம் நடந்துடுச்சி. அது உன் சந்தர்ப்ப சூழ்நிலையால நடந்த விபத்து. அதன் விளைவா கடவுள் உனக்கு குடுத்தது ரெண்டு பொக்கிஷங்கள். அது உன் குழந்தைகள் ஸ்நேஹாவும், ரஞ்சித்தும்…. எவ்வளவோ நல்ல குணங்கள் இருக்குற ஆம்பளைங்களுக்கு கூட நல்ல பொண்டாட்டி அமையுறதில்ல, ஆனா எவ்வளவோ மனக்கசப்பு குடுத்தும் நீ ஒரு நல்ல மனைவியா குமாருக்கு இருந்திருக்கே. சீரியஸ்லி ஸ்பீக்கிங் நீ ஊரைக் கூட்டி ‘நான் துக்கத்துல இருக்கேன்’னு எதுக்கு சொல்லணும்?, அப்படி செய்துதான் ஆகணும்னு என்ன கட்டாயம்?” கோவமாக கேள்வி எழுப்பினான் ராகவ்….

“செய்யலைனா நாலு பேரு தப்பா பேசுவாங்கடா..” “அந்த நாலு பேரு யாரு?…” “செப்பா.. ஏண்டா புரிஞ்சிக்க மாட்டேங்குற?..” – ஒவ்வொரு முறையும் இப்படி ஏதாவது ராகவின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாத நிலைக்கு சங்கீதா தள்ளப்படுவாள், அப்போது அவனை ஒன்றும் சொல்ல முடியாமல் அவள் தவிக்கும் தவிப்பு அவளுக்கு மட்டும்தான் தெரியும். இருப்பினும் அவளின் ஆழ் மனதில் அவன் காமிக்கும் அக்கறையை எண்ணி மௌன சந்தோஷம் அடைவாள்…. “எனக்கு உடனே எதுவும் சொல்ல முடியல, கொஞ்ச டைம் வேணுன்டா.”

எவ்வளவு டைம் வேணுன்னாலும் எடுத்துக்கோ, உன்னை அமைதி படுத்திக்குற விஷயங்களைப் பத்தி மட்டும் யோசி. கூடவே நீ கொஞ்ச நாளைக்கு உன் வீட்டுல தனியா இருக்க வேணாம், என் கூட IOFI காம்பஸ் உள்ளேயே தங்கிக்கோ.” – ராகவ் பேசும்போது குறுக்கிட்டாள் சங்கீதா.. “வேணாம் ராகவ், நான் யாருக்கும் பயப்படல. நான் என் வீட்டிலேயே தங்கிக்குறேன். அங்கே இருந்தே வேலைக்கு போய்டு வரேன். பசங்களை ஸ்கூலுக்கும் அனுப்புவேன். நீ இன்ஸ்பெக்டர் கிட்ட பேசி எனக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு பண்ணு. அது போதும். மத்தபடி….” – சில நொடிகள் எதுவும் பேசாமல் இருந்தாள் சங்கீதா. “ஹ்ம்ம்…ஏன் நிறுத்திட்ட? சொல்லு.. மத்தபடி…” “மத்தபடி எனக்கு ஏதாவது ஒண்ணுன்னா நீ எப்போவுமே இருக்கியேடா… அதுக்கு மேல எனக்கு வேற என்ன வேணும்?” – இதை சொல்லும்போது கண்களை இருக்கி மூடி கண்ணீர் வழிய அவன் தோள்களில் சாய்ந்தாள்…. அவனுடைய சராவாக. எந்த ஒரு மண வலிக்கும் இயற்கையான மருந்து நேரம்தான். காயமான நேரங்கள் நாட்களை கடந்து மெல்ல மறைந்தது. நாட்கள் வாரங்களாகியது. கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு வேலையிலும் வாழ்க்கையிலும் ஓரளவுக்கு பழைய பக்குவம் அடைந்த நிலைக்கு வந்தாள் சங்கீதா. ஒவ்வொரு நாளும் காலை வேலைக்கு கிளம்பும்போது ராகவ் சடங்கு சம்பிரதாயங்களுக்கு குடுத்த விளக்கத்தை எண்ணி அவனை வியப்பாள். அவனுடைய ப்பிராக்டிகலான பேச்சு அவளுக்கு பிடித்திருந்தது. ஒவ்வொரு நாளும் அவள் நேரத்துக்கு சாப்பிடுகிறாளா, நன்றாக தூங்குகிறாளா, குழந்தைகளுடன் பத்திரமாக இருக்கிறாளா என்று பத்து இருவது முறையாவது ஃபோன் செய்து கேட்டு விடுவான் ராகவ். இருவரும் ஒருவருக்கொருவர் ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு முறையாவது பேசிக் கொள்ளாமல் அவர்களது கண்கள் உறங்காது. இடையிடையே சங்கீதாவுக்கு ஆறுதலாய் அமைந்தது அலுவலகத்தில் ரம்யாவின் தோழமையான பேச்சும், நிர்மலாவின் சகோதரி பாசமும், சஞ்சனாவின் அன்பும் அரவனைப்பும்தான். அதிலும் சஞ்சனா, சம்பவம் நடந்த நாட்களில் உண்மையாகவே உடன் பிறந்த அக்காவாக எண்ணி சங்கீதாவுடன் அவளது வீட்டில் தங்கி இருந்து குழந்தைகளுடன் விளையாடி அவளுக்கும் ஒரு துணையாக இருந்து வந்தாள். ஒரு வாரக் கடைசியில் மாலை நேரம் மிகவும் அழகாக இருந்தது. சங்கீதா வீட்டின் காலிங் பெல் சிணுங்க யாரென்று பார்த்தால் சஞ்சனா நின்றிருந்தாள்.

“ஹாய் அக்கா” – பிரகாசமாய் சிரித்தாள் சஞ்சனா.. “ஏய்.. வா… வா… உள்ள வா…” – உற்சாகமாய் வரவேற்றாள் சங்கீதா.. “இன்னிக்கி உங்க கிட்டயும் ராகவ் கிட்டயும் முக்கியமா ஒரு விஷயம் பேசணும்னு வந்திருக்கேன். ரகாவ்கும் ஃபோன் பண்ணி வர சொல்லி இருக்கேன். வந்தானா இல்லையா?” – handbag கழட்டி வைத்து தலை முடியை இருபுறமும் சரி செய்தபடியே பேசினாள்…. “இல்லையே அவன் எதுவும் வரேன்னு என் கிட்ட சொல்லல, என்ன விஷயம் டி…” “அதெல்லாம் இருக்கட்டும்.. முதல்ல நீங்க எப்படி இருக்கீங்க? அதை சொல்லுங்க..” “இப்போ கொஞ்சம் பரவாயில்ல, சீக்கிரமே பழைய சந்கீதாவா மாறிடுவேன். ஹா ஹா.. நீ எப்படி இருக்கே?” “எனக்கென்ன குறைச்சல், மகாராணி மாதிரி இருக்கேன்.” “எப்படி வந்த?” “என் பாய் ஃபிரண்ட் ட்ராப் பண்ணார்கா..” “பாய் ஃபிரண்டா?” – குறும்பாய் சிரித்து கேட்டாள் சங்கீதா. ‘வேற யாரு நம்ம அர்னால்ட்தான்” – என்று சொல்ல.. “அம்மா நான் கிளம்புறேன்மா….” – என்று ஜகா வாங்கிக் கொண்டு வேகமாய் கிளம்பினார் டிரைவர் தாத்தா.. “ஹா ஹா.. பாவம் டி, அந்த மனுஷனை ஏண்டி இப்படி படுத்தி எடுக்குற?” “இதெல்லாம் ஒன்னும் இல்லக்கா, கொஞ்ச நாளைக்கி முன்னாடி ஒருத்தன் கிட்ட ராத்திரி விளையாடினேன் பாருங்க ஒரு விளையாட்டு. பயபுள்ள அழுதுட்டான்.” – சின்ன குழந்தை அழுவது போல முகபாவனை செய்து பேசினாள் சஞ்சனா.“ஹ்ம்ம்.. என்னடி செஞ்ச? யாரு அவன்?” – மென்மையாக சிரித்துக்கொண்டே சமையலறையில் டீ தூள் தேடினாள் சங்கீதா.. “சொல்லுறேன் அதுக்குத்தானே வந்திருக்கேன், அவன் கிட்ட வாங்கின சில முக்கியமான டீடேய்ல்ஸ் பத்தி உங்க கிட்டயும் ராகவ் கிட்டயும் சொல்லணும்….

Updated: October 13, 2022 — 5:07 pm

2 Comments

  1. Next post please

  2. திர்லீங் ரியலி சூப்பர்

Comments are closed.