இடை அழகி மேடம் சங்கீதா 11 64

“ஹலோ…” “ஹ்ம்ம், சொல்லுடா…. I am sorry, காலைல உன் கிட்ட சரியா பேச முடியலடா.” “its okay, பேசுற நிலைமையில நீ இல்ல… அது எனக்கு நல்லா புரிஞ்சிது. இப்போ கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்கியா?” – அவனது குரலில் ஒரு வித ஹீலிங் டச் இருந்ததை உணர்ந்தாள் சங்கீதா. “ஹ்ம்ம்..” “என்ன ஆச்சு? மனசுல ஏதாவது இருந்தா கொட்டிடு… உள்ள வெச்சிகாத.” “ஸ்ஷ்…. ஸ்ஹா….” – மீண்டும் மெலிதாக அழத் தொடங்கினாள். “எனக்கு… எனக்கு என் வாழ்க்கைல உண்மையான நிம்மதியும், சந்தோஷமும், யார் கிட்ட கிடைக்கும்னு கடவுள் தெளிவா காமிச்சிட்டார் ஆனா கடந்த காலத்துல சூழ்நிலையால எனக்கு வேற வாழ்க்கை அமைஞ்சிடுச்சி. அப்படி இருந்தும் என் மனசுல உண்மையான அன்பையும் காதலையும் காமிக்குற உன்னை இழக்க முடியல, அதே சமயம் குடும்பத்துல பொருப்புள்ளவளா குமார் இருக்குற நிலையில எந்த முடிவுக்கும் வர முடியல. முதல்ல குமார் ஒரு நல்ல நிலைமைக்கு வரணும் அதுக்கப்புறம் அவனுக்கு எல்லாத்தையும் எடுத்து சொல்லி புரிய வெக்கலாம்னு இருக்கேன்.” “ஒகே ஒகே…. first ரிலாக்ஸ் ப்ளீஸ்…. நீ முதல்ல உன் மனசையும் உடம்பையும் பலமா வெச்சிக்க. அப்போதான் எல்லாத்தையும் சரியா யோசிக்க முடியும்.” “ஹ்ம்ம்…” “வாழ்க்கைல சில நேரத்துல சின்ன சின்ன சந்தோஷங்கள் நம்ம மனசுக்கு தேவை. அதுதான் பெரிய நிம்மதியைக் குடுக்கும். அதை நீ ஏற்கனவே அனுபவிச்சி இருப்ப. இருந்தாலும் உனக்கு இன்னொரு தடவ சொல்லுறேன். அந்த வகையில் உனக்கு இன்னைக்கி ஒரு சின்ன சந்தோஷம் குடுக்கலாம் னு இருக்கேன். ” “ஹா ஹா.. என்ன சந்தோஷம் டா?” – கடந்த 48 மணி நேரத்தில் இப்போதுதான் முதலில் ராகவின் சரா மெதுவாக சிரிக்க ஆரம்பித்தாள். “இன்னைக்கி என்ன special னு தெரியுமா?” “தெரியலடா… சொல்லு….” – அவள் குரலில் ஒரு சின்ன சந்தோஷம் தென்பட்டது. “ஸ்நேஹா கிட்ட நான் ஒன்னு குடுத்து இருக்கேன். அதைப் பாரு. பார்த்துட்டு எனக்கு ஃபோன் பண்ணு.” – என்று சொல்லிவிட்டு கட் செய்தான். “ஸ்நேஹா….” – ராகவ் ஃபோன் வைத்தவுடன் அழைத்தாள். “என்னமா?…”

“ராகவ் மாமா ஏதாவது கொடுத்தாரா உன் கிட்ட?” – சங்கீதா கேட்டவுடன் அந்த பிஞ்சு முகத்தில் அப்படி ஒரு சிரிப்பு. உடனே ஓடிப் போய் அவளது பொம்மைகள் கூடையில் இருந்து ராகவ் குடுத்த பரிசைக் கொண்டு வந்து குடுத்தாள். gift wrap செய்யப் பட்டு இருந்தது. பிரித்துப் பார்த்தாள் சங்கீதா. “box திறந்தவுடன் “Happy birthday to you…… Happy birthday to you…… Happy birthday to dear sara…. Happy birthday to you……” என்று மென்மையான சத்தத்தில் பாட்டு பாடியது அந்த வாழ்த்து அட்டை. – இதைப் பார்க்க பார்க்க ஆழ் மனதில் ராகவை அநியாயத்துக்கு மிஸ் பண்ணுவதை உணர்ந்தாள் சங்கீதா. கண்களில் சந்தோஷத்தில் கட்டு படுத்த முடியாத கண்ணீர் துளிகள் எட்டிப் பார்த்தது. அந்த அட்டையை மீண்டும் மீண்டும் மூடியும் திறந்தும் அந்த ” Happy birthday to you…… ” பாடலைப் பாட வைத்து ரசித்திருந்தாள். நெஞ்சோடு அந்த வாழ்த்து அட்டையை அழுத்தி வைத்து கண்களை மூடி மெளனமாக மனதுக்குள் ” I love you so so much da my sweet rascal, I miss you very badly…. ஸ்ஷ்.. ஸ்ஷ்” சந்தோஷமும் கண்ணீரும் கலந்து பொங்கியது சங்கீதாவுக்கு. உடனடியாக தனது phone எடுத்து ராகவிடம் பேசலாம் என்று எண்ணியவளுக்கு ஒரு “Incoming call” வந்தது. எடுத்து அட்டென்ட் செய்தாள்.. “ஹலோ..” “Mrs.Sangeetha தானே பேசுறது?” “ஆமா சொல்லுங்க…” “உங்க ஏரியா இன்ஸ்பெக்டர் பேசுறேன்மா..” “சொல்லுங்க சார்.. என்ன விஷயம்?” “சாரி மேடம், hospitalல உங்க வீட்டுகாறரை யாரோ கொலை செஞ்சிட்டாங்க….” நல்ல இருட்டில் அடிக்கும் காற்றுக்கு மரங்களின் இலைகள் சலசலவென அசையும் சத்தம் ஹாஸ்பிட்டலின் சுத்துபுற நிசப்தத்தை அமைதியாய் ஜெய்த்துக் கொண்டிருந்தது. வேகமாகவே வந்தாலும் வயதான பெரியவர் இருமுவதுபோல இருந்தது ஹாஸ்பிட்டலில் போலீஸ் ஜீப் நின்றபோது.. ஒரே ஒரு கான்ஸ்டபிள் மட்டும் வார்டன் டிரஸ்ஸில் ஒருவன் காம்பெளண்ட் சுவரை ஏறுவதை கவனித்தார்.. “உய்ங்…. உய்ங்….” என்று விசில் சத்தம் குடுத்துக்கொண்டே அவனின் காலில் தனது லத்தியை விசிறி எரிய அவனது முழங்காலில் அது நல்ல அடியைக் குடுத்திருக்க வேண்டும்… சற்று சறுக்கியது அவனுக்கு.. இருப்பினும் இன்னும் முயற்சி செய்து ஏறினான்.. கான்ஸ்டபிள் அவனை நெருங்கினார்…. இன்னும் வேகமாக முயற்சி செய்தான்…. அவர் கிட்டத்தட்ட நெருங்கி விட்டார்… வேறு வழி ஏதும் இன்றி தன் இடுப்பில் இருந்து ஒரு சிறிய பிஸ்டலை எடுத்து கான்ஸ்டபிள் காலில் சுட்டுவிட்டு முழு பலத்தையும் போட்டு அந்த சுவரின் மீது எரி தப்பித்து விட்டான்…. உடன் இருந்த இரண்டு கான்ஸ்டபிள்களில் ஒருவர் காயம் அடைந்தவரை நோக்கி எழுப்பினார்… இன்னொருவர் ஹாஸ்ப்பிட்டல் வளாகத்துக்கு வெளியே சென்று அவனை துரத்த ஓடினார் IOFI வளாகத்துக்குள் பர்சனல் வி.ஐ.பி லாஞ்சின் உள்ளே “ஐ வில் ஆல்வேஸ் லவ் யூ” என்ற ஆங்கில வெஸ்டர்ன் மியூசிக் மிருதுவான சத்தத்தில் மனதை வருடும் விதம் ஓடிக்கொண்டிருக்க அதை ஹம் செய்தபடி சோஃபாவில் ஃபோனும் கையுமாக சாய்ந்திருந்தான் ராகவ்….

Updated: October 13, 2022 — 5:07 pm

2 Comments

  1. Next post please

  2. திர்லீங் ரியலி சூப்பர்

Comments are closed.