இடை அழகி மேடம் சங்கீதா 11 64

ஹாஸ்பிடல் செக்யூரிட்டி ஆளுங்க கிட்டயும் விசாரணை நடக்குது. இங்கே ஒரு செக்யூரிட்டி கேமரா கூட இல்ல சார். எங்க நிலைமை ரொம்ப கஷ்டம். – இன்ஸ்பெக்டர் சலித்துக் கொண்டார். உங்களுக்கு முதல்ல விஷயம் எப்படி தெரிஞ்சிது? யார் சொன்னாங்க? – ராகவ் இன்ஸ்பெக்டரை கூர்ந்து பார்த்துக் கேட்டான். (கண்கள் இடுங்க பேசினார் போலீஸ்) ஒரு ஃபோன் வந்துச்சி சார், இத்தினி மணிக்கி இன்னாரு இறந்துட்டாரு, நான் யாருங்குறதை அப்புறம் சொல்லுறேன், சீக்கிரம் வாங்கன்னு மட்டும் சொல்லிட்டு ஃபோன் வெச்சிட்டான். யாரு என்ன எது… அப்படின்னு.. – போலீஸ் பேசுவதற்குள் ராகவ் இடைமறித்தான்.. “உங்களால அந்த நம்பரை….” ராகவ் பேசுகையில் “நான் கொஞ்சம் பேசி முடிச்சிடுறேன் சார்..” என்றார் கரகரத்த குரலில் ராஜேந்திரன்…. “ஸ்ஸ்ஷ்… சொல்லுங்க….” – கொஞ்சம் பொறுமையை இழந்து பேசினான் ராகவ்.. “உள்ள வந்த உடனேயே ஒருத்தன் ஹாஸ்பிடல் காம்பொளண்ட் தாண்டி ஓடினான் சார்…. பிடிக்க போன கான்ஸ்டபிள் கால்ல சுட்டுட்டான்… பாருங்க.. இவர் ஆளோட உருவ அடையாளக்ளை நியாபகம் வெச்சி இருக்காரு… அவன் எங்கே ஓடினான்ன்னு பார்க்க போன இன்னொரு கான்ஸ்டபிளை இன்னும் காணும்…” ஒஹ்… மை காட்… முகம் பார்க்க முடியலையா? இல்ல சார்.. ஆனா ஒரு விஷயம் சார்.. என்ன?… அவன் இந்த ஹாஸ்பிட்டல் வார்டன் பாய் டிரஸ்தான் போட்டிருந்தான்.. என்ன சொல்லுறீங்க?… – அதிர்ச்சியுடன் கேட்டான் ராகவ்… ஆமாம் அதான் சீஃப் டாக்டர் வந்தா அவர் கிட்டயும் சில விஷயங்கள விசாரிக்கணும் னு காத்திருக்கேன்… “நீங்க ஏதோ கேட்க வந்தீங்க.. நான் நடுவுல பேசிட்டே இருந்துட்டேன்.. உக்ஹும்… சாரி சார்… ஹச்…. என்ன கேட்க வந்தீங்க?” – சற்று இருமியவாறே கரகர குரலில் பேசினார் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன்… “இந்த நியூஸ் சொல்ல உங்களுக்கு ஒருத்தன் ஃபோன் பன்னானே அந்த நம்பரை ட்ராக் பண்ண முடியலையானு கேட்க வந்தேன்..” “பண்ணோம் சார்.. ‘நீங்கள் அழைக்கும் தொலை பேசி எண்னை சரி பார்க்கவும்’னு வந்துச்சி. ரிங் போகல” – வள வள பேச்சு ராகவிடம் இல்லை, எப்போவுமே ஸ்ட்ரைட் டு தி பாய்ண்ட்.. அவ்வப்போது நடு நடுவில் ராகவ் இப்படி கேள்வி எழுப்புவதை இன்ஸ்பெக்டர் விரும்பவில்லை என்றாலும் அவன் கேள்விக்கு சலிக்காமல் பதில் அளித்தார்.

“ஹ்ம்ம்..” – கண்களை மூடி யோசித்தான் ராகவ். “சார்.. எனக்கென்னவோ அந்த இஸ்திரி பையன் சொன்ன துரை தான் செய்திருப்பானோன்னு தோணுது, உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்குதா?..” – இன்ஸ்பெக்டர் சிந்திக்க கொஞ்சம் சிரமப்பட்டு ராகவிடம் கேட்டார். கேள்விக்குறியாக இன்ஸ்பெக்டரைப் பார்த்தான் ராகவ். அவனிடம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. “கொஞ்சம் யோசிக்க விடுங்க..” என்று ஒரு புறம் அமர்ந்தான். ராகவ் எதிரே சீஃப் டாக்டர் வந்தார்.. அவரைப் பார்த்தவுடன் விரைந்து சென்றான். “டாக்டர்….” என்று ராகவ் நெருங்கும்போதே அவன் என்ன கேட்கப் போகிறான் என்று அவருக்கு புரிந்திருந்தது. “குமாரை முறைப் படி போஸ்ட்மார்ட்டம் செய்து என்ன ஆச்சுன்னு தெளிவா சொல்ல முடியுமா டாக்டர்?” மெதுவாக அவனது கைகளைப் பிடித்து பேச தொடங்கினார் அவர்.. “அவசியம் இல்லை ராகவ்..” – சற்று லேசான பயத்தில் நெற்றி வேர்த்திருந்தது அவருக்கு. என்ன சொல்லுறீங்க? ஆப்பரேஷன் செய்யுறதுக்கு முன்னாடி வலி தெரியாம இருக்குறதுக்காக குடுக்குற அனஸ்தீஷ்யாவை ஊசியால கொஞ்சம் அளவுக்கு அதிகமா குடுத்து இருக்கான். அது ஆளையே கொன்னுடும். இப்படி செய்யுறதால எங்களுடைய கவனக் குறைவாலதான் இது நடந்துச்சின்னு ஹாஸ்பிடல் மேலயும் பழி போடலாம். யாரோ உள்ள வந்து கொலை செய்திருக்காங்கனு சுலபமா மத்தவங்களால சொல்லிட முடியாதுன்னு யோசிச்சி செய்திருக்காங்க. ஆனா இவருக்கு ஆப்பரேஷன் நேத்தே முடிஞ்சிடுச்சி. – டாக்டர் ராகவிடம் பேசிக் கொண்டிருக்கும்போது போலீஸ் அருகில் வந்தார். என்ன சொல்லுறீங்க டாக்டர்…. உங்க கவனக் குறைவாலதான் இது ஆச்சா? ச்சே ச்சே… ஏன் இப்படி செய்திருக்கலாம்னு நான் ரகாவ்கு எக்ஸ்ப்லைன் பண்றேன் அவளோதான்.. மத்தபடி இதுக்கும் எனக்கும், எங்க ஹாஸ்பிடலுக்கும் ஒரு சம்மந்தமும் கிடையாது. அப்போ ஏன் உங்க ஹாஸ்பிடல் வார்டன் பாய் ஒருத்தன் காம்பொளண்ட் சுவர் எகிறி குதிச்சி ஓடணும்.. – இன்ஸ்பெக்டர் கொஞ்சம் மூர்கமாகவே கேட்டார்.. சீஃப் டாக்டர் “அதுவும் எனக்கு தெரியாது… நீங்கதான் கண்டுபுடிக்கணும்..

Updated: October 13, 2022 — 5:07 pm

2 Comments

  1. Next post please

  2. திர்லீங் ரியலி சூப்பர்

Comments are closed.