இடை அழகி மேடம் சங்கீதா 11 64

“என்ன சொல்லுற? உனக்கு யார் சொன்னாங்க?” “ஸ்ஷ்ஷ்… போ… போலீஸ் ஃபோன் பண்ணி சொன்னார் டா…. எனக்கு என்னை சுத்தி என்ன நடக்குதுன்னு தெரியல டா..( மீண்டும் அழ தொடங்கினாள்.) குமாரை ஏன் கொலை செய்யணும்?.. அடுத்து என்னையும்….” – சங்கீதா பேசி முடிப்பதற்குள் ராகவ் தடுத்து நிறுத்தினான்.

“ஸ்டாப் இட் இடியட்.. பசங்க இருக்காங்க, அவங்க எதிர்க்க என்ன வேணுன்னாலும் பேசுவியா?… என்ன பேசுற நீ.. நான் சொல்லுறதை செய்.. முதல் வேலையா வீட்டை பூட்டிகிட்டு உட்கார்ந்திரு.. ஒரு கதவு ஜன்னல் கூட விட்டு வைக்காத. நான் உடனே வந்துடுறேன். அதுக்கப்புறம் ஹாஸ்பிடல் போகலாம். நான் இன்னும் கொஞ்ச நேரத்துல அங்கே இருப்பேன்.” – அவசரமாய் பேசி விட்டு அவனது BMWவில் சங்கீதாவின் வீட்டை நோக்கி சீறினான் ராகவ்.

விஷயத்தை முதலில் கேட்டபோது அப்படியே அதிர்ச்சியின் அதிர்வில் பயமும் குழப்பமும் கலந்து உறைந்திருந்தவள் குழந்தைகளைப் பார்த்தாள். ஒன்றும் புரியாமல் பதிலுக்கு அவளைப் பார்த்தது அந்த பிஞ்சு கண்கள். உடனே ராகவ் சொன்னது நியாபகத்துக்கு வந்து ஏதோ ஒரு வித பயம் உடல் முழுவதும் பரவியது சங்கீதாவுக்கு. முந்தானையால் முகத்தை துடைத்துக் கொண்டு அவசரமாக எழுந்து ரூம் கதவு, வீட்டின் பின் கதவு, சமையல் அறை, ஜன்னல்கள் மற்றும் வாசல் கதவு என்று அனைத்தையும் சாத்தி விட்டு லேசாக சத்தம் குடுத்து ஓடிக்கொண்டிருக்கும் ஃபேனையும் ஆஃப் செய்து விட்டு ஹாலில் தனது செல் ஃபோனை கையில் இறுக்கமாக வைத்து குழந்தைகள் இருவரையும் நெஞ்சோடு அனைத்து பத்திரமாக அணைத்தபடி அமர்ந்திருந்தாள். ஒவ்வொரு நொடியும் ராகவை மனதில் எண்ணி “சீக்கிரம் வா… சீக்கிரம் வா….” என்று மெளனமாக சொல்லிக்கொண்டே இருந்தாள். வீடு முழுவதும் நிசப்தம்.. அந்நேரம் டிங்..டிங்.. என்று காலிங் பெல் சத்தம் கேட்டது. “ஆங்” என்று ஒரு நிமிடம் பதட்டத்தில் தனக்கு தானே சொல்லிக்கொண்டு கதவை நோக்கி சென்று “டோர் ஐ” வழியாக யாரென்று பார்த்தாள். ராகவ் தலை முடியை வேகமாக கோதியபடி நின்றிருந்தான். அதைப் பார்த்ததில் அவளுக்கு பாதி உயிர் வந்தது. உடனே கதவை திறந்தவள் பயத்தில் அவனை அப்படியே அழுத்தி அனைத்துக் கொண்டாள். “இட்ஸ் ஓகே… இட்ஸ் ஓகே… நான் வந்துட்டேன் இல்ல.. பயப்படாத டா..” – மூச்சு வாங்க சங்கீதா பயத்தில் விம்மி விம்மி அழுவதை தன் நெஞ்சில் உணர்ந்தான் ராகவ்.

குழந்தைகள் இருவரையும் கூப்பிட்டு கார் கதவை திறந்து “உள்ளே உட்காருங்க..” என்று சொல்லிவிட்டு சங்கீதா வீட்டை பூட்டியவுடன் அவள் தோள்களை பற்றி அணைத்தபடி அவளை காரில் முன்பக்கம் தனது பக்கத்து இருக்கையில் அமரவைத்து வழக்கத்தை விட காரில் இன்னும் அதிக வேகம் குடுத்து சீறினான் .. ஹாஸ்பிடல் சில நிமிடங்களில் வந்தது… சற்று நேரத்தில் இருவரும் குமாரின் வார்டுக்கு உள்ளே நுழையும்போது போலீஸ் புகைப் படம் எடுத்துக் கொண்டு ஏதாவது தடயம் கிடைக்கிறதா என்று தேடிக் கொண்டிருந்தார்கள். போலீசைப் பார்த்தவுடன் உடனே விரைந்து சென்றான் ராகவ்.. “இன்ஸ்பெக்டர்.. உங்க பேரு என்னவோ சொன்ணீங்களே…..” “ராஜேந்திரன்..” – யாரென்று பார்க்காமல் குமாரைப் பார்த்தே பேசினார் போலீஸ்.. இது எப்படி ஆச்சு? – கற்ச்சீஃப் வைத்து நெற்றியை துடைத்தபடி பேசினான் ராகவ். “நீங்க….” (ராகவைப் பார்த்து சற்று நியாபகப் படுத்திக்கொண்டு பேசினார் இன்ஸ்பெக்டர்) “ராகவ் தானே..” “ஆமாம்…”- எதைப் பத்தியும் யோசிக்காமல் பதிலை எதிர்நோக்கி காத்திருந்தான் ராகவ். “ஆயுதம் எதுவுமே உபயோகப் படுத்தல சார், ஆனா ஆள் உயிரோட இல்ல. தலையணை வெச்சி முகத்தை மூடி அமுக்கி கொன்னு இருப்பானானு பார்த்தா அதுவும் இல்ல. உள்ள வந்தவன் எந்த பொருளையும் தொடவும் இல்ல. ரொம்ப காம்ப்லிகேட்டட்.

Updated: October 13, 2022 — 5:07 pm

2 Comments

  1. Next post please

  2. திர்லீங் ரியலி சூப்பர்

Comments are closed.