இடை அழகி மேடம் சங்கீதா 11 64

என்னதான் சங்கீதா குமாரின் வார்த்தைக்கு முக்கியத்துவம் குடுக்கவில்லை என்றாலும் அவன் எதிரில் ராகவ்கு பதில் சொல்லவில்லை, அது தேவை இல்லாத பிரச்சினை உண்டாக்கும் என்று எண்ணி தவிர்த்தாள். chief doctor உள்ளே வந்தார், “Mrs.Sangeethaa, நாளைக்கு நீங்க வர வரைக்கும் ஒரு நர்ஸ் இருப்பாங்க. அவங்க எல்லாத்தையும் பார்த்துபாங்க. என்ன குமார்?… ஹொவ் ஆர் யு feeling?” என்று முக மலர்ச்சியுடன் கம்பீரமாக கேட்டார். சலனமற்ற முகத்தோடு அமர்ந்திருந்தான். பதில் ஏதும் சொல்லவில்லை. சங்கீதா அவன் அருகே வந்து ” எனக்கு வேண்டிய things எல்லாம் எடுத்துகுட்டு நாளை விடியல் காலை வந்துடுறேன். அது வரைக்கும் ஏதாவது வேணும்னா எனக்கு phone பண்ண தயங்காதீங்க.” – சற்று கண்ணீருடன் கூறினாள். அதற்கும் குமாரிடம் மௌனம்தான். ராகவ் அமைதியாய் எழுந்து வெளியே சென்று காலணிகளை மாட்டினான். சங்கீதா கதவருகே செல்லும்போது. “என் எதிர்ல பேசத் தயங்காதீங்க, இப்போ எப்படி இருந்தாலும் வெளியே போய் நல்ல மணிக் கணக்குல பேசத்தானே போறீங்க.. போங்க போய் நல்ல …..” – பேச வந்து நிறுத்திக் கொண்டான். குமார் பேசிய வார்த்தைகளை ராகவ் கவனிக்க தவறவில்லை. அவன் பேசிய வார்த்தைகள் சங்கீதாவை புண் படுத்துமே என்கிற எண்ணம்தான் அவனுக்கு அதிகம் இருந்ததே தவிர அவனுக்கு ஒரு பாதிப்பும் ஏற்படுத்த வில்லை. “சங்கீதா, please…. lets move” – என்று மிகவும் கூர்மையாக அவளை மட்டும் பார்த்து பேசினான் ராகவ். ராகவ் காரில் அமர்ந்தாள் சங்கீதா, ஒன்றும் பேசவில்லை. வண்டி ஓட்டும்போது ராகவ் அவளாக ஏதாவது பேசினாள் சரி என்று எண்ணி அமைதி காத்தான். வீடு வந்தது இன்னும் அமைதியாய் இருந்தாள். கதவைத் திறந்து இறங்கும்போது முந்தானையை முகத்தினில் மூடி ஓவென்று சத்தமாக அழத் தொடங்கினாள்.

“come on…. என்ன ஆச்சு சரா?…. ஏன் இப்படி அழுற? குமார்க்கு இப்போதான் உடம்பு சரி ஆகி இருக்கு. அவர் பேசுறதை ஒரு காதுல வாங்கி இன்னொரு காதுல விட்டுடு. அவர் நல்லபடியா குணம் ஆகி வந்திருக்கார். அதை நினைச்சி சந்தோஷப் படு. நீ ஏற்கனவே ஒரு நாள் முழுக்க சரியா சாப்பிடல. இப்படி அழுதா உடம்புக்கு தெம்பு இருக்காது. தயவு செய்து உள்ள போ, ஸ்நேஹாவையும், ரஞ்சித்தையும் பாரு, அவங்களைப் பார்த்தாலாவது கொஞ்சம் ஆறுதலாய் இருக்கும். நான் ….” – ராகவ் மேற்கொண்டு பேசும்போது இடை மறித்து பேச தொடங்கினாள். “ஏன் எனக்கு மட்டும் இப்படி?…. வாழ்க்கையே வெருத்துப் போச்சு ராகவ். ஸ்ஷ்.. ஸ்ஷ்..” – பேசும்போது அழுகை கட்டு படுத்த முடியாமல் விசும்பினாள். “நான் உள்ள போய் கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்ணிட்டு பேசுறேன்.” – என்று சொல்லிவிட்டு வீட்டினுள் சென்றாள். ராகவ் அவனுக்கே உரிய வசீகர சிரிப்புடன் அவளது நலனை மட்டும் நெஞ்சில் கொண்டு “correct, first please relax and then speak with me” என்று சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பினான்.

வீட்டினுள்ளே நிர்மலாவும் பசங்களும் இருந்தார்கள். சங்கீதா வந்தவுடன் அவளது நலனை விசாரித்து விட்டு அங்கிருந்து கிளம்பினாள் நிர்மலா. குளித்துவிட்டு சூடாக காபி போட்டு குடித்துக் கொண்டு அவளது ரூமின் ஜன்னலோரம் அமர்ந்து மாலை நேர மஞ்சள் வெயிலையும், மேகங்களையும் ரசித்துக் கொண்டே ராகவ்கு ஃபோன் செய்தாள் சங்கீதா.

Updated: October 13, 2022 — 5:07 pm

2 Comments

  1. Next post please

  2. திர்லீங் ரியலி சூப்பர்

Comments are closed.