வாசமான ஜாதிமல்லி End 22

“மீரா,” அவன் மென்மையாக அவளை கூப்பிட்டான்.

அவன் குரலைக் கேட்டு அவள் உடல் விறைப்பதைக் கண்டான். அவள் நகரவில்லை, அப்படியே உறைந்து போல் இருப்பதாக தோன்றியது.

“மீரா,” அவன் மீண்டும் அவளை அழைத்தான்.

அவள் மெதுவாக திரும்பி அவன் முகத்தைப் பார்க்க சில நிமிடங்கள் ஆனது. இந்த அரை மணி நேர இடைவெளியில் அவள் முகம் வியப்பு அடையும் அளவில் ரொம்ப மாறிப்போய்விட்டது. எப்போதும் அவளுக்கு பிரகாசமான, அழகான முகம். அதற்கு பதிலாக அவள் கண்கள் எந்த ஒளி இல்லாமல் வெற்று குளம் போல் தெரிந்தது. அவள் அழுது அழுது அவள் முகம் வீங்கி இருந்தது. அவளுடைய முக தசைகள் கூட அவற்றின் உறுதியை இழந்துவிட்டதாகத் தோன்றியது. அவள் அவன் முகத்தைப் பார்த்ததும், அவளுக்குள் இது வரைக்கும் இருந்த கட்டுப்பாட்டை இழந்தாள். பிரபு இங்கே இருந்தபோது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள அவள் ஒரு மிக பெரிய முயற்சியை மேற்கொண்டிருந்தாள், ஆனால் இப்போது அவள் உள்ளே இருந்த அவளுடைய எல்லா துக்கமான உணர்ச்சிகளும் அவள் கட்டுப்படுத்த முடியாமல் போனது.

அவள் கூச்சலிட்டாள், வேதனையில் அலறினாள், அவள் உடல் கட்டுக்கடங்காமல் தூக்கி தூக்கி போட்டது, அவள் அன்பான கணவனை பார்க்க முடியாமல் துடித்தாள். இப்போது கூட அவன் அவள் முகத்தைப் பார்த்தபோது அந்தக் கண்களில் கோபமோ, அறிவுறுத்தலோ இல்லை. அவளுடைய மோசமான மற்றும் வெட்கக்கேடான நடத்தை தெரிந்து இருந்தபோதிலும் அங்கே தென்பட்டது அவளுக்கு இரக்கமும் அக்கறையும் மட்டுமே. இத்தனை ஆண்டுகளில், திருமணத்தில் அவர்களை ஒன்றிணைத்த பாசத்தோடு வாழ்ந்த அந்த புனித உறவை அவள் சீரழித்துவிட்டாள். அவள் வாழ்க்கையில் கற்பித்த எல்லா ஒழுக்கமும் அவளை பற்றிக்கொண்ட காமம் அவளை எல்லாம் மறக்க செய்து இந்த தலைகுனியும் நிலைமைக்கு கொண்டுவந்து விட்டது.

ஏன்… ஏன்… ஏன்… .எப்படி உங்களால் தாங்க முடிந்தது .. அவள் அழுதபடி எதோ பேய் பிடித்தது போல தலையை வேகமாக ஆட்டினாள்.

ஒரு ஆறுதலான கையை அவள் மீது வைக்க விரும்பி சரவணன் அவள் அருகில் சென்றான். அவன் அவளைத் தொடுவதற்குள் அவள் திகிலுடன் அவனிடமிருந்து விலகிச் சென்றாள். இப்படி அவள் செய்யும் போது அவள் கணவரின் கண்களில் ஏற்பட்ட காயத்தை அவள் பார்த்தபோது, அவள் துக்கத்துடன் பதறி போனாள். அவர் தன்னை தொட கூட பிடிக்காமல் அவள் அவர் மேல் வெறுப்பு இருக்கு என்ற தவறாக நினைத்துவிட்டாரோ என்று துடித்துப்போனாள். அவள் மேல் அவர் கணவனின் விறல் பட கூடாது என்று அவர் விரும்பினாள் அனால் அதன் காரணமே வேற. அவரின் புனிதமான விரல்கள் அவளை போன்ற பெரும் பாவம் புரிந்த ஆள் மீது பட கூடாது. அது அவர் புனித்ததைய கெடுத்துவிடும் என்று மனதில் குமுறினாள்.

இல்லை… இல்லை .. நீங்கள் என்னைத் தொடக்கூடாது. உங்கள் விரல்கள் இந்த அசுத்தமான உடலை மீண்டும் ஒருபோதும் தொடக்கூடாது, “என்று அவள் கெஞ்சினாள்.

“மீரா அப்படி சொல்லாதே….” சரவணன் சொல்ல ஆரம்பித்தான் , ஆனால் அவள் மேலும் தொடர்ந்து பேசி அவன் வார்த்தைகளை நிறுத்தினாள்.

“இல்லை .. இல்லை…,” என்று கெஞ்சினாள், “என் பாவப்பட்ட துர்நாற்றம் உங்களுக்கும் ஒட்டிக்கொள்ளும். நீங்க எனக்கு எந்த அனுதாபமும் ப்டுவதுக்கு நான் தகுதியற்றவள். நான் உங்களை எவ்வளவு ஆழமாக காயப்படுத்தினேன் என்று நான் நினைக்கும் ஒவ்வொரு முறையும் என் இதயத்தில் ஈட்டு குத்துவது போல வலியை ஏற்படுத்துகிறது.”

அவள் மீண்டும் குலுங்கி குலுங்கி அழு துவங்கினாள். அதிலிருந்து மீள அவளுக்கு சிறிது நேரம் பிடித்தது.

அவளைத் தொடாதபடி கவனமாக சரவணன் அவள் அருகில் அமர்ந்தான். அவள் இருக்கும் நிலையில் அவள் இயக்கத்தில் மிகவும் வருத்தப்பட்டாள், அவளுக்குள் அவள் மேல் தீவிரமான சுய வெறுப்பு இருக்க வேண்டும் என்று புரிந்தது. அவன் இந்த நேரத்தில் அவளுக்காக மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும்.

“பரவாயில்லை மீரா, அமைதியாக இரு. நாம் நடந்து முடிந்ததை இனிமேல் மாற்ற முடியாது. நடந்தது எதுவும் மாற செய்ய முடியாது. இனிமேல் என்ன செய்ய வேண்டும் என்று மட்டும் இப்போது பார்ப்போம், ”என்று அவன் மெதுவாகப் பேசினான்.

அவள் தன் கணவன் முகத்தைப் பார்த்தாள், அவள் முகம் வேதனையில் துவண்டு போய் இருந்தது. “இந்த அவமானத்தை நீங்கள் எப்படித் தாங்கினீங்க. நான் இனி வாழ விரும்பவில்லை .. நீங்கள் என்னை அடித்து கொன்றிருந்தால் நான் மகிழ்ச்சியுடன் உங்கள் கைகளில் இறந்திருப்பேன். ”

“இல்லை மீரா, நானும் உன்னை சரியாக கவனித்துக் கொள்ளவில்லை, நான் முற்றிலும் குற்றமற்றவன் அல்ல.”

“இல்லை .. இல்லை ..,” மீரா கதறினாள், “ஒருபோதும் .. எப்போதும் அப்படி சொல்லாதீங்க. இது முழுக்க முழுக்க என் தவறு. உங்களைப் போன்ற ஒரு நல்ல மனிதனுக்கு மனைவியாக இருக்க தான் நான் தகுதியற்றவள் … உங்களை யாரும் குறை சொன்னால் அவுங்க நாக்கு அழுகி போய்விடும்.”

சிறிது நேரம் அமைதியாக இருந்தான். அவள் தொடர்ந்து அழுதுகொண்டு இருந்தாள், சரவணன் பொறுமையாக இருந்தான், அவள் மீண்டும் கொஞ்சம் அமைதியான நிலைக்கு வர அவகாசம் கொடுத்தான்.

மீரா சோகமாக மறுபடியும் பேச ஆரம்பித்தாள், “நீங்க ஏன் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை .. நீங்க ஒருமுறை கூட என்னிடம் கோபமோ வெறுப்போ காட்டவில்லை .. நான் செய்த இந்த காரியத்துக்கு பிறகும் … ஏன் ??”

எப்படி ஒரு மனிதன் இதை பொறுத்துக்கொண்டான் என்று புரியவில்லை. இந்நேரம் அவளை துண்டு துண்டை வெட்டி போட்டு இருக்கவேண்டும்.

சரவணனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை, அவனுடைய வாழ்க்கையில் அவன் மனைவியின் கள்ள உறவு ஏற்படுத்திய வேதனையை அவனால் எவ்வாறு தாங்க முடிந்தது என்று அவனுக்கும் தெரியாது. சரவணன் மெதுவாக அவள் துக்கத்தை தணிக்க முயன்றான், ஆனால் அவள் மிகவும் சுய வெறுப்பால் நிறைந்திருந்தாள், அவள் தன்னைத் தானே வெறுப்பாக பேசி கொண்டு இருந்தாள். இறுதியாக கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து அவள் எதிர்காலத்தைப் பற்றி பேச ஆரம்பித்தாள்.

“நீங்கள் பிரபுவுடன் சொன்னது ஒன்று சரிதான் .. என்னால் இனி உங்கள் மனைவியாக இருக்க முடியாது ..”

சரவணன் அவள் முகத்தை உற்று பார்த்தான். அதைப் பார்த்த அவள் விரைவாக தொடர்ந்து பேசினாள். “அதுக்கு எனக்கு தகுதி இல்லை என்று எனக்கு தெரியும்.” அதற்காக பிரபுவின் வைப்பாட்டியாக வாழ விரும்பிய அவ்வளவு மோசமான ஒழுக்கங்களைக் கொண்ட ஒரு பெண் என்று அவர் நினைப்பதை அவள் விரும்பவில்லை.