வாசமான ஜாதிமல்லி End 22

“உன் கணவனை எனக்கு எந்த பழிவாங்கலுக்கும் எண்ணமும் இல்லை என்பதை நீ அறிவாய், ஏனென்றால் அவன் நான் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை, எனக்கு அவன் ஒண்ணுமே இல்லை. எல்லோரும் தங்கள் செயல்களுக்கு எப்படியோ ஒரு வழியில் எப்போது ஒரு காலத்தில் பாதிக்க படுவார்கள் என்று நான் நம்புகிறேன். பழிவாங்குவதில் நான் ஆறுதல் அடைந்தால் எனக்கும் அவனுக்கும் என்ன வித்யாசம்.”

அவர்கள் மூவரும் சரவணன் பேசுவதைக் உன்னிப்பாக கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவன் முதன்முறையாக தன்னை பற்றி வெளிப்படுத்திக் கொண்டிருந்தார், அவன் ஆழ்ந்த எண்ணங்கள், அவனை உருவாகின அவன் குணங்கள், தெளிவு படுத்திகொண்டு இருந்தான். மீரா கூட அவள் வாழ்க்கையிள் பல வருடங்கள் அவருடன் வாழ்ந்த பிறகும் முதல்முறையாக அவரை பற்றி புது விஷயங்கள் தெரிந்துகொண்டு இருக்கிறாள்.

“ஒருவரின் சொந்த நேர்மையான நடத்தை ஒரு நபரை வரையறுக்கும் என்று நான் நம்புகிறேன். வேறு எந்த நபரின் நடத்தையும் உங்கள் சொந்த தன்மையை வடிவமைக்கக் கூடாது. எனது கொள்கைகள் எனக்கு முக்கியமாக உள்ளன. அதற்க்கு உண்மையாக இருக்கிறேன் என்று நான் நம்புகிறேன். நான் சொன்னது போல் உன் கணவர் எனக்கு ஒரு பொருட்டல்ல. அவனுக்கு என்ன நடக்க போவதும் முக்கியமில்லை, அவனை தண்டிப்பது எனது விருப்பமும் இல்லை. ஒரு வேலை இப்போது இல்லை என்றாலும், அவன் செய்த செயல்களுக்கு அவன் உண்மையிலேயே வருத்தப்பட வேண்டிய ஒரு காலம் வரும். ”

எனக்கு முக்கியமானது என் குடும்பம். எனது குழந்தைகளின் எதிர்காலம். என் மனைவி மற்றும் குழந்தைகளின் மகிழ்ச்சி. நீங்க உண்மையிலேயே அவர்கள் மேல் அக்கறை மற்றும் பாசம் இருந்தால் அவர்களை ஒருபோதும் காயப்படுத்த நீங்கள் விரும்ப மாட்டீர்கள். என் மனைவி வாழ்க்கையில் தவறுகளை செய்திருக்கலாம். அந்த தவறுகள் நடக்க நான் ஓரளவு கூட காரணமாக இருக்கலாம், ஆனால் அவள் என்மீது வைத்திருக்கும் அன்பு எப்படியும் குறைந்துவிடவில்லை என்று எனக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. இப்போது நம் வாழ்க்கையை மீண்டும் மீட்டெடுக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. தவறான செயல்களையும் கடந்த காலத்திள் நடந்தை நினைத்து நினைத்து வாழ்வது எதிர்காலத்திற்கு ஒருபோதும் நல்லதாக இருக்காது. நான் என் மனைவியை நேசிக்கிறேன், கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதனால் வேறொரு பெண்ணுடன் நான் சேர்வதை நினைத்துப் பார்க்க முடியவில்லை. அப்படி இல்லையென்றால் எனக்கும் பிரபுவுக்கும் என்ன வித்தியாசம். ”

சரவணன் உண்மையில் பிரபுவைப் பற்றி நேரடியாக இழிவான எதையும் சொல்லாமல் அவமானப்படுத்தியிருந்தான்.

கணவர் பேசுவதைக் கேட்டு மீராவின் இதயம் அப்படியே உடைந்து போனது. அவளிடம் எவ்வளவு பெரிய பொக்கிஷம் இருந்தது, அனால் அதை தான் அவளுக்கு பாதுகாக்க தெரியவில்லை. இதுபோன்ற ஒரு நபருக்கு அவள் எப்படி தகுதியாவாள். கணவனிடம் அன்பால் அவள் இதயம் நிரம்பி இருந்தது. அவள் என்ன செய்ய முடியும் .. அவள் என்ன செய்ய வேண்டும்… மீரா முன்பை விட இப்போது மேலும் குழம்பி போனாள்.

கோமதி முதலில் அவள் கணவன் முகத்தை பார்த்தாள். சரவணன் அந்த வார்த்தைகளை சொன்னதை கேட்டு அவன் முகம் பிரகாசம் ஆனது. அவள் தன கணவரின் எதிர்வினையை கவனித்தாள், பின்னர் சரவணனின் முகத்தைப் பார்க்க மீண்டும் திரும்பினாள். ஒரே நிகழ்வுக்கு அந்த இரண்டு ஆண்களின் வேறு பட்ட எதிர்வினையை எப்படி வேறுபடுத்தாமல் அவள் இருக்க முடியும். இது அந்த இரண்டு மனிதர்களின் ஒழுக்கத்தையும், எப்படி பட்டவர்கள் என்ற தன்மையையும் முழுமையாக பிரதிபலித்தது. அவள் எடுத்த இந்த முடிவை எப்படி அவள் கணவன் எதிர்த்தான், அவர்களிடையே எவ்வளவு வாக்குவாதம் நடந்தது என்று கோமதிக்கு மட்டும் தான் தெரியும். ஆனால் அவளுடைய விருப்பத்தை எதிர்ப்பதற்கு அவனுக்கு எந்தவித தார்மீக உரிமை இல்லை என்பதை கோமதி திட்டவட்டமாக பிரபுவிடம் சொல்லிவிட்டாள்.

“நீங்க தான் என் குழந்தையின் தந்தையாக இருக்க வேண்டும் என்று நான் விரும்பியது எவ்வளவு சரி என்பதை உங்கள் வார்த்தைகள் மீண்டும் நிரூபிக்கின்றது.”

“உங்க இதயத்தில் பழிவாங்குதல் போன்ற எண்ணம் இல்லை. வேறு ஒரு பெண்ணுடன் படுக்க வாய்ப்பு கிடைத்து, அதை எதுவும் அல்லது எவரும் தடுக்க முடியாது என்று தெரிந்தும் நீங்க இது தான் வாய்ப்பு என்று மகிழ்வு அடையவில்லை. இதற்க்கு மேலே எந்த சிறந்த மனிதனை ஒரு பெண் தேர்ந்தெடுக்க முடியும்.”

“இங்கே பாரு கோமதி, நீ விரும்பியபடி நான் செய்யப் போவதில்லை என்ற காரணத்தை நான் ஏற்கனவே உன்னிடம் சொல்லிவிட்டேன், ஏன் உன் நேரத்தை மேலும் வீணடிக்கிறீரா,” என்று சரவணன் கூறினான், அனால் கோமதி தனது முடிவில் வெற்றி பெற இன்னும் பிடிவாதமாக இருந்தாள்.

“நீங்க கூறியது எனக்குப் புரியுது, உங்க விருப்பத்தை நான் மதிக்கிறேன், ஆனால் நீங்க கருத்தில் கொள்ள வேண்டிய வேறு ஒன்று இருக்கு. நீங்க அதை அறைந்தால் உங்க எண்ணத்தை நீங்க மாற்றலாம். ”

சரவணன் எரிச்சலடைந்து கொண்டிருந்தான். அவன் பொதுவாக யாரிடமும் பண்பு இல்லாதபடி நடந்துகொள்ள விரும்ப மாட்டான், ஆனால் கோமதி அவனது பொறுமையை ரொம்ப சோதிக்கிறாள்.

“இன்னும் என்ன கருத்தில் கொள்ள வேண்டும்? எதுவும் என் மனதை மாற்றிவிடும் என்று நான் நினைக்கவில்லை, அதனால் தயவுசெய்து அந்த விஷயத்தை இதோடு விட்டுவிடுவோம். ”

சரவணனின் தொனியால் கோமதி அச்சம் அடைய போவதில்லை. “நான் உங்களுடன் தனியாக கொஞ்சம் பேச வேண்டும், அதற்கான காரணத்தை நான் உங்களுக்கு அப்புறம் தெரிவிக்கிறேன்.”

“ஏன் தனியாக பேசணும். என்ன இருந்தாலும் எல்லாம் இங்கேயே சொல்லலாம். என்ன இருந்தாலும் என்ன பெரிய வித்யாசம் இருக்க போகுது என்று எனக்கு புரியில.”

கடவுளே, இந்த மனிதன் மிகவும் பிடிவாதமாணவன் கோமதி தனக்குள் திட்டிக்கொண்டாள். சும்மா வாயை மூடு என்று சொல்லிவிட்டு அவனை படுக்கை அறைக்கு இழுத்துகிட்டு போகலாம் என்று தோன்றியது அவளுக்கு. அனால் அதற்க்கு பதிலாக ஒன்னும் சொல்லாமல் சரவணனிடம் எழுத்து நடந்து சென்றாள். மீரா கோமதியைப் பார்த்தாள், அவள் இதயம் வேகமாக துடித்தது, ஒருவேளை அவள் தன் கணவனை என்ன செய்யப் போகிறாள் என்று கூட கொஞ்சம் பயந்திருக்கலாம். பிரபு அவன் மனைவி செய்வதை, கண்கள் விரிந்து, மூச்சு விடுவதை கூட நிறுத்திவிட்டு பார்த்துக்கொண்டு இருந்தான். கோமதி அவனை நோக்கி வர, சரவணன் தடுமாறி பின்னே நகர்ந்தான், அவன் உட்கார்ந்திருந்த நாற்காலியில் அவன் கால்கள் மொத, மேலும் போகமுடியாமல் நின்றுவிட்டான். இதைப் பார்த்த கோமதி கிட்டத்தட்ட சிரித்துவிட்டாள்.

“நகராதிங்க, நான் எதுவும் செய்யப்போவதில்லை. நான் உங்களிடம் ஒன்னு சொல்ல விரும்புகிறேன், அவ்வளவு தான்.”

சரவணனும் அவன் நடந்து கொண்ட விதத்தை நினைத்து முட்டாள்தனமாக உணர்ந்தான். அவன் சொன்னது வீட்டில், அதுவும் நாடு ஹாக்களில், அவன் மனைவி மற்றும் கோமதி கணவன் இருக்க, கோமதி என்ன செஞ்சிர போறாள். கோமதி அவள் தலையை அவன் தலையின் பக்கவாட்டில் கொன்றுசெண்டு அவன் காதுகளில் ஏதோ கிசுகிசுத்தாள். சரவணனின் கண்கள் ஒரு யோசனையில் குறுகின. கோமதி அவனிடம் கூறியதை அவன் பரிசீலிக்கிறான் என்று தோன்றியது. கோமதி சரவணனுக்காகக் காத்திருக்கவில்லை, திரும்பிப் பார்க்காமல் டைனிங் ஹாலுக்கு நடக்க ஆரம்பித்தாள். மீரா கோமதி அங்கு இருந்து நடந்து செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தாள், கோமதியின் செயல்களைப் அவள் ஆச்சிரியத்தில் வாய் திறந்து பார்த்துக்கொண்டு இருந்தாள். மறுபுறம் பிரபு சரவணனைப் பார்த்துக் கொண்டிருந்தான். சரவணனின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்பதைப் அவன் மிகவும் அச்சத்தோடு பார்த்துக்கொண்டு இருந்தான். ஒருவேளை அவன் தனது மனைவியின் வாத திறனைப் அறிந்ததால் பயப்படுகிறானோ.

சரவணன் சில நொடிகள் அங்கே நின்றான். அவன் தனது அடுத்த செயலைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தான். கோமதி அப்படி நடந்து சென்ற பிறகு அவளைப் பின்தொடர்வதைத் தவிர அவனுக்கு வேறு வழியில்லை. அவன் தயங்கினான், ஆனால் கோமதி கேட்டபடி செய்யாமல் அங்கேயே நின்றிருந்தாள் அது அவமதிப்பாக இருக்கும் என்று உணர்ந்தான். அது மட்டும் அல்ல, அவன் காதில் அவள் கிசுகிசுத்ததைப் பற்றி முழுதாக அறிவதால் தீங்கு ஒன்னும் ஆகா போவதில்லை. சரவணன் மெதுவாக கோமதி நின்று கொண்டிருந்த இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான். இதை பார்த்து பிரபுவின் தோள்கள் சரிந்ததால் பிரபுவின் வலிமை/நம்பிக்கை அவனை விட்டு விலகியது என்று தெரிந்தது. மறுபுறம் மீரா உண்மையில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் திடுக்கிட்டு இருந்தாள். பிரபுவைப் பார்க்காமல் மீரா மிகுந்த கவனமாக இருந்தாள். அந்த முகத்தை இனிமேல் பார்க்க அவளுக்கு உண்மையில் விருப்பமில்லை.

கோமதி சரவணனிடம் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள். சரவணன் முதலில் கோமதி சொன்னதை கேட்டு ஆம் என்று தலையசைத்தான், ஆனால் பின்னர் கோமதி சொல்வதை கேட்டு முடியாது என்று சொல்வது போல உறுதியாக அவன் தலையை ஆட்டினான். ஹாலில் அமர்ந்திருந்த இருவருக்கும் என்ன பேசுறார்கள் என்று கேட்க முடியாதபடி அவர்கள் மிகவும் தீவிரமாக ஆனால் மெதுவாக பேசிக் கொண்டிருந்தார்கள். கோமதி எதையோ வற்புறுத்துவதாகத் தோன்றியது, ஆனால் சரவணன் அவன் முகத்தில் வெளிப்படும் முக பாவத்தில் மற்றும் அவன் தலையை ஆட்டிய விதத்தில் அவனுக்கு கோமதி சொல்லியதில் ஈடுபாடு இல்லை என்று தெரிந்தது. உரையாடல் நீண்ட காலமாக நடந்து கொண்டிருப்பதாகத் தோன்றியது, ஆனால் உண்மையில் அது வெறும் பத்து நிமிடங்கள் மட்டுமே நடந்து கொண்டிருந்தது. திடீரென்று கோமதி சரவணனை மீண்டும் சிந்திக்க வைத்த ஏதோ ஒன்றைத் சொன்னது போல் தெரிந்தது. அவன் திடீரென்று அசையாமலும், அவன் கொடுக்கும் கவனத்தில் இருந்து கோமதி சொன்னதை கேட்டு யோசிப்பது போல தெரிந்தது.