வாசமான ஜாதிமல்லி End 22

“வாங்க சரவணனை, உட்காருங்க,” டாக்டர் அருள் அவரது அறைக்குள் நுழையும் சரவணனை பார்த்து கூறினார்.

“மாலை வணக்கம் டாக்டர். மீரா நிலையில் என்ன முன்னேற்றம் இருக்கு என்று சொல்லுங்கள் டாக்டர்? ”

“ஓரளவு முன்னேற்றம் இருக்கு. அவளுடைய மனச்சோர்வு மற்றும் அவளுடைய இப்போது இருக்கும் மனநிலைக்கான முதன்மைக் காரணங்களை நான் புரிந்து கொண்டேன். ”

சரவணன் டாக்டர் அருலைப் பார்த்தான், அவன் மனைவி நலனடையும் பாதையில் இருக்கிறாராளா என்று அறிய ஆவலுடன்.

“உங்கள் மனைவி உங்களை மிகவும் நேசிக்கிறாள் என்பது உங்களுக்குத் தெரியும். எல்லாவற்றிற்கும் மேலாக இப்போது நீங்கள் அவளுக்காக என்னவெல்லாம் சகித்துக்கொண்டீர்கள் என்பது தெறித்து. ”

“ஆனால் அவள் இன்னும் என்னிடம் விலகி இருக்காள், நான் ஏதாவது கேட்டால் பதிலளிப்பாள் தவிர உண்மையில் என்னுடன எதுவும் தானாக வந்து பேச மாட்டாள்.”

“சரவணன், உங்கள் மனைவி உங்கள் அன்புக்கு தகுதியற்றவள் என்று நினைக்கிறாள். அவள் செய்த துரோகத்தால் அதனால் அவள் மேல் அவளுக்கு இருக்கும் வெறுப்புணர்வு நிரம்பியிருப்பதால், உங்களை நேசிக்க அவளுக்கு உரிமை இல்லை என்று மனம் நொறுங்கி இருக்காள். ”

“பிரபு மற்றும் அவளது துரோக செயல்களால் நீங்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்று அவள் உணர்ச்சிகள் அவளை கொல்லுது. அவளால் உங்களிடம் தன் அன்பைக் காட்டவோ அல்லது அவள் உடலை பகிர்ந்து கொள்ளவோ முடியாது என்று அவள் மிகவும் மனச்சோர்வையும் தன மேல் கோபத்தையும் உணர்கிறாள். ”

“அவள் ஒரு தீண்டத்தகாத பெண், அவளை தொட்டால் உங்களுக்கு தீங்கு விளைந்திடும் என்று அவள் ஆழ்மனதில் பதிந்து விட்டது.”

“அதனால் நானும் கஷ்டப்படுகிறேன் இல்லையா டாக்டர்.”

“ஆமாம், அவள் அதை நன்கு அறிந்திருக்கிறாள், அதுவே அவளுக்கு வேதனை கொடுக்கிறது. உண்மையில் அவளுக்கு இருக்கும் உள்ளுணர்வுகள் என்னவென்றால் .. அதை எப்படி சொல்வது .. ஹ்ம் அவள் ஒரு அசுத்தம் ஆனவள் மற்றும் அந்த அசுத்தத்தின் துர்நாற்றம் அவள் உங்களைத் தொட்டால் உங்களுக்கும் பற்றிக்கும் என்ற மனநிலையில் அவளால் விடுபட முடியவில்லை. ”

“அதனால் என்ன செய்வது டாக்டர்.”

“இந்த எண்ணத்தை மெல்ல மெல்ல தான் போக்கணும்.”

“சரவணன் மனம் மிகவும் சக்தி வாய்ந்தது என்று உங்களுக்குத் தெரியுமா, அவள் தன்னைத்தானே தண்டிக்கிறாள், அதனால் அவளுடைய உடல்நிலை எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதைப் பிரதிபலிக்கிறது. உங்கள் மனைவியாக ஒரு நல்ல பெண் உங்கள் வாழ்வில் வரவேண்டும், உங்கள் அன்புக்கு தகுதியானவள் மற்றும் உங்களுக்கு அன்பு செலுத்த தகுதியானவன் வரவேண்டும் என்று மிகவும் விரும்பி வருந்துகிறாள். என்று அவள் உணர்கிறாள். அவள் இறந்தால் மட்டுமே அது நடக்கும் என்று நினைக்கிறாள். அவளை பொறுத்தவரை அவள் வாழ்கை முடிந்துவிட்டது.”

“ஐயோ டாக்டர், இது என்னது, அவள் ஏதாவது செஞ்சிக்க போறாள்,” என்று சரவணன் பதறினான்.

“ஆமாம், சரவணன் நீங்கள் ஒரு புதிய மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தொடங்குவதற்காக அவள் மரணமடைய வேண்டும் என்று அவள் மனதில் எண்ணத்தை வலியுறுத்திக்கொண்டு இருக்கிறாள். இந்த எண்ணத்தை மாற்றுவது என் முக்கிய வேலை.”

“அவள் பிரபுவுடன் சென்றால் நான் வேறொரு பெண்ணுடன் ஒரு புதிய வாழ்க்கைக்குச் அமைத்திருக்க முடியும் என்று அவளால் நினைக்க முடியவில்லையா?”

“அது நடந்திருந்தால், அவள் உங்களுக்கு துரோகம் செய்ததை உலகம் முழுவதும் அறிந்திருக்கும். அதனால் உங்களுக்கு ஏற்படும் அவமானத்தை நினைத்துப் பார்க்க அவளால் தாங்க முடியவில்லை. ”

“இந்த ஒரு காரணத்துக்கு மட்டும் தான அவள் பிரபுவுடன் அவளது கள்ள தொடர்பை முடித்து கொண்டாள்?”

“இல்லை இல்லை… அவள் செய்த காரியத்துக்கு அவள் தன்னை வெறுக்கிறாள். நீங்கள் எந்த தவறும் செய்யாதபோது, அவர்களின் துரோக செயலால் நீங்க மட்டுமே கஷ்டப்படுகிறீர்கள் என்று அவள் உணருவதால், அவள் கடும் மனச்சோர்வடைகிறாள். நீங்க ஒரு பெரிய அநீதிக்கு ஆளானதாக அவள் உணர்கிறாள். அவள் தன்னை தண்டிக்க வேண்டும் என்று விரும்புகிறாள், ஆனால் அதே நேரத்தில் உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட வேதனைக்கும் அவமானத்துக்கு முதன்மையான காரணம் இருந்த இன்னொரு நபர், பிரபு, எந்த பாதிப்பும் இல்லாமல் தப்பித்துவிட்டான் என்று அவளை துன்பத்தில் ஆதிகிறது. அவனும் அவதிப்பட வேண்டும் என்று அவள் விரும்புகிறாள். அவளுடைய மனதில் உங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று ஆழ்ந்து பதிந்திருக்கு.”

“அதனால் என்ன பயன். அது எதையும் மாற்றப்போவதில்லை டாக்டர். ”

“இது தான் அவளுடைய மன அழுத்தத்திற்கு இன்னொரு காரணம். அவர்கள் இருவரும் தண்டிக்கப்பட வேண்டுவார்கள் என்றாலும் நீங்கள் உங்கள் மனைவியோ,ப்ரபுவையோ தண்டிக்க நினைக்கவில்லை. நீங்கள் கொடுக்க கூடிய எந்த தண்டனையையும் விட உங்கள் இரக்கம் தன் அவளுக்கு ரொம்ப வலிக்கிறது. ”

“அதனால் நான் இப்போ என்ன செய்ய வேண்டும்?? அவளை அடிக்க ஆரம்பிக்கலாம்மா?”

மனச்சோர்வு தரும் நகைச்சுவையை டாக்டர் அருள் பார்த்து அவரது முகத்தில் ஒரு புன்னகை தோன்றியது.

“அது உங்கள் இயல்பு குணம் இல்லை” என்று டாக்டர் அருள் கனிவோடு கூறினார்.

“தண்டனைக்கு தகுதியான அனைவரும் உண்மையில் தண்டனை அடைவதில்லை, எந்த தவறும் செய்யாத சிலர் ஏன் வேதனை படுகிறார்கள் என்றும் புரியவில்லை. நம்முடைய நீதி உணர்வு எப்போதும் வாழ்க்கையில் நீதி இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் உண்மையில் வாழ்கை ஒவ்வொரு முறையும் அப்படி இருந்ததில்லை. பிரபு துன்பப்படுகிறாரான இல்லையா என்பது உண்மையில் ஒரு பொருட்டல்ல என்பதை நான் அவளுக்கு உணர்த்த வேண்டும். இது உடனே நடக்காது.”

டாக்டர் அருள் திடீரென்று நிறுத்தி சரவணனிடம், “மீராவுக்கு கடவுள் பக்தி அதிகமா?” என்று கேட்டார்.

“ஆம், நான் அப்படி தான் நினைக்கிறேன். ஏன் டாக்டர்?

“நல்லது. நாம் தண்டனையில் இப்போது தப்பித்தாலும் கூட, ஒவ்வொருவரும் அவர்கள் செய்த பாவங்களின் விளைவுகளை சந்திக்க ஒரு உயர்ந்த சக்தி இருக்கிறது என்ற கருத்தை நான் வலுயுறுத்தி உங்கள் மனைவியை மனா நிறைவு அடைய முயற்சிக்கலாம். பிரபு தனது செயல்களுக்காக ஒரு நாள் தீர்ப்பை எதிர்கொள்வான் என்று உங்கள் மனைவிக்கு நம்பிக்கை வரணும். ”