வாசமான ஜாதிமல்லி End 22

“எனக்கு ஒரு சக ஊழியர் இருக்கிறார், இது போன்ற பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் மிகவும் திறமமைசாலி. உங்களுக்காக அவருடன் ஒரு அப்பொய்ண்ட்மென்ட் செய்கிறேன். அடுத்த வாரம் உங்களுக்கு சரியாக இருக்கும்மா?”

சரவணன் தனது ஆழமான எண்ணங்களில் மூழ்கியபடி தனது காரை ஓட்டிக்கொண்டு வீட்டிற்கு புறப்பட்டான். மீரா ஒரு வார்த்தை கூட பேசாமல் அமைதியாக அவனருகில் அமர்ந்தாள் (சரவணன் அங்கே உட்கார வலியுறுத்தினான்). மாலை நேரம் ரொம்ப ஓடிவிட்டதால் இருட்டாகிவிட்டது.

அதற்க்கு அடுத்த வாரத்தில் சரவணன் மீராவுக்கு இப்போதைக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவரால் சொன்ன அந்த மனநல நிபுணரான டாக்டர் அருள் பிரபாகரனுடன் சந்திப்புக்காக மீராவை அழைத்துச் சென்றான். மீரா அவர்கள் முன்பு சென்ற மருத்துவமனை இல்லாமல் விட வேறு மருத்துவமனைக்குச் செல்வதைக் பார்த்து பீதியடைந்தாள்.

மீரா இப்போது எல்லாம் ரொம்ப அமைதியாக இருப்பவள். பெரும்பாலும் யாரிடமும் பேச மாட்டாள் அதுவும் பேசினால் அளவோடு தான் பேசுவாள். அவள் பிள்ளைகளுடன் பேசும் போது மட்டும் கொஞ்சம் சாதாரணமாக பேசுவாள். அவள் செய்த துரோகத்துக்காக அவள் சரவணனிடம் சாதாரணமாக பேச வெட்கப்படுவாள் அனால் இப்போது அவளாகவே பேசினாள்.

“நாம் எங்கே போகிறோம்? ஏன் இந்த மருத்துவமனை? ” அவள் கேட்டாள்.

“கவலைப்படதே மீரா, நாம இப்போது ஒரு புதிய மருத்துவரைப் பார்க்க போறோம். நம்ம பழைய மருத்துவர் அவரைப் பார்க்க பரிந்துரைத்தார், ”சரவணன் அவளுக்கு ஆறுதலாக கூறினான்.

“இது எதற்கு, நான் நல்ல தான் இருக்கேன். எனக்கு ஒன்னும் இல்லை.”

அவளுக்கு ஆறுதலாக பேசியபடியே அவர்கள் ரிசெப்ஷனுக்கு வந்து சேர்ந்தார்கள். டாக்டர் அருலைக் பற்றி கேட்டதும், அவர்கள் மருத்துவமனையின் 2 வது மாடியில் உள்ள டாக்டரின் சிகிச்சை அறைக்கு அனுப்பப்பட்டனர். டர். அருள் ரிசப்ஷனில், டாக்டர் தற்போது மற்றொரு நோயாளியுடன் இருப்பதால் அவர்களை காத்திருக்கச் சொன்னாள் அங்கே இருக்கும் நேர்ஸ் கம் ரிஷப்ஷனிஸ்ட். அவர்கள் அப்பொய்ண்ட்மென்டுக்கு சுமார் 15 நிமிடங்கள் முன்னதாகவே வந்துவிட்டார்கள். மீரா அங்கேயே காத்திருக்கும்போது மேலும் மேலும் பதற்றமடைவதை சரவணன் பார்க்க முடிந்தது. இறுதியாக, ஒரு ஜோடி மருத்துவரின் அறையிலிருந்து அவர்கள் சிகிச்சை முடிந்து வெளியே வந்தார்கள்.

சரவணனையும் மீராவையும் உள்ளே செல்லச் சொல்ல அவர்கள் டாக்டர் அறை உள்ளே போனார்கள். டாக்டர் அருள் ஒரு 45 தில் இருந்து 48 வயதுடையர் போல தோன்றியது. ஒரு நோயாளியை அமைதிப்படுத்தும் ஒரு கனிவான முகம் அவருக்கு இருந்தது. அவர் சார்ந்த மருத்துவ நிபுணத்துவத்துக்கு அது ஒரு பிளஸ் பாயிண்டாக இருக்கலாம்.

“உள்ளே வாங்க, திரு. சரவணன் மற்றும் திருமதி மீரா,” அவர் ஒரு புன்னகையுடன் அவர்களை அன்புடன் வரவேற்றார். “டாக்டர். கணேஷ் (முன்னதாக மீராவுக்கு சிகிச்சையளித்த நிபுணர்) உங்களைப் பற்றி எனக்கு விளக்கி இருக்கார் . தயவு செய்து உட்காருங்கள்.”

பின்னர் அவர் பொதுவாக வயது, கல்விப் பின்னணி, வீடு மற்றும் குடும்பம், தொழில் போன்ற அவர்களின் பின்னணியைப் பற்றி சில கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார். அவர் பேசும் விதத்தில் ரொம்ப கனிவு இருந்தது. மீரா மெதுவாக அவளது பீதியை இழக்கத் தொடங்கினாள். மீராவை இந்த அறைக்கு இணைக்கப்பட்ட அறைக்கு அழைத்துச் செல்ல டாக்டர் அருள் மற்றொரு செவிலியரை அழைத்தார். மீராவின் எடை, உயரம் மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றை மீராவுக்கு எடுக்க சொன்னார். மீரா சிறிது நேரம் அங்கே இருக்கும் ஒரு படுக்கையில் படுத்துக் கொஞ்சம் ஓவ்வு எடுக்க சொன்னார். இப்போது சில விஷயங்கள் தெரிந்த கொள்ள, சரவணனிடம் தனியாக பேச விருமினார்.

மீரா தயக்கத்துடன் செவிலியர்ருடன் போனாள் (அவள் சரவணனின் பக்கத்தை விட்டு செல்ல விரும்பவில்லை). டாக்டர் அருள் இப்போது தனது கவனத்தை சரவணன் பக்கம் திருப்பினார்.

“திரு. சரவணன், நான் உங்களை சரவணன் என்று பெயர் சொல்லி அழைக்கலாமா? நம்ம ரொம்ப போர்மலாக இருக்க வேண்டாம் என்று நான் நினைக்கிறேன். ”

“நிச்சயமாக டாக்டர், அப்படியே கூப்பிடுங்க, எந்த பிரச்சனையும் இல்லை.”

“நல்லது நல்லது. சரவணன், டாக்டர் கணேஷ் உங்கள் மனைவியிடம் அவர் நடத்திய அனைத்து சோதனைகள் மற்றும் ரிசல்ட் பற்றி என்னிடம் கூறினார். இப்போதைய நிலைமை ஏற்படுத்திய பிரச்சினைகள் அல்லது சிக்கல்கள் என்னவென்று நீங்கள் என்னிடம் சொல்லுங்கள். நான் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும். ”

டாக்டர் அருளுக்கு சரவணனின் தயக்கத்தைக் காண முடிந்தது. அவருக்கு இது நல்லாவே புரிந்தது. அவர் சிகிச்சையளிப்பதில் அவரது 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தில், மக்கள் மனம் திறந்து எல்லாம் சொல்வது எவ்வளவு கடினம் என்பதை அவர் அறிந்திருந்தார். இது பொதுவாக வலிமிகுந்த நினைவுகளைத் மீண்டும் கிளறிவிடும், இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அதைப் பற்றி மீண்டும் பேச சங்கடம் படுவது புரிந்துகொள்ள முடிந்தது. இது போன்ற விஷயங்கள் பொதுவாக மிகவும் தனிப்பட்ட விஷயம் மற்றும் உணர்வுகள் பாதிப்பை கொண்டவை. அவர் பொறுமையாக இருக்க வேண்டியிருந்தது, அவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தனது உதவியை நாடுகிற மக்களுக்கு அவர் நம்பிக்கை கொடுக்க வேண்டியிருந்தது.

“சரவணன், என்ன நடந்தது என்பதைப் பற்றி பேசுவது உங்களுக்கு கடினம் என்று எனக்குத் தெரியும், ஆனால் உங்கள் இருவருக்கும் நான் உதவுவதற்கு எனக்கு முன்பு நடந்த விஷயங்கள் தெளிவாக அறிவது அவசியம். நீங்கள் இங்கே வெளிப்படுத்துவது கண்டிப்பாக மருத்துவர் / நோயாளியின் இரகசியத்தன்மையைக் கொண்டிருக்கும். அது வேறு யாருக்கும் தெரியாது, ஏன்,எனக்கு வேலை செய்யும் செவிலியர்கள் கூட தெரிய வராது என்றும் நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். நான் பரிந்துரைக்கும் சிகிச்சை / மருந்து மட்டுமே அவர்களுக்குத் தெரியும், ஆனால் நோயாளியின் வரலாற்றின் விவரங்கள் எதுவும் கிடையாது. அது எனது தனிப்பட்ட ரகசிய குறிப்புகளில் மட்டுமே இருக்கும்.”

டாக்டர் அருள், சரவணன் அவர் பேசியபின் சற்று அமைதி அடைவதை கண்டார், ஆனாலும் இந்த விஷயத்தைத் திறந்து வெளிப்படுத்த சரவணனின் மன போராட்டத்தைக் காண முடிந்தது. அவர் வெளிப்படுத்த வேண்டியது தனிப்பட்ட முறையில் மிகவும் சங்கடமாக இருந்த ஒரு விஷயமாக இருக்க வேண்டும். அது என்னவாக இருக்கக்கூடும் என்று அவர் ஓரளவு யூகிக்க முடியும், ஆனால் அவர் தானாக முடிவுகளுக்கு செல்ல விரும்பவில்லை, சரவணன் பேசுவதற்காக காத்திருந்தார்.

“சரவணன், உங்கள் மனைவிக்கு அல்லது சொல்லப்போனால் உங்களுக்கே இப்போது நீங்க சந்திக்கும் பிரச்சினையை ஏற்படுத்தியதை பற்றி நீங்கள் சொல்லாவிட்டால் என்னால் உதவ முடியாது.”

சரவணன் ஆழ்ந்த மூச்சு எடுத்தான். பிரபு தனது மனைவியுடன் உடலுறவு கொள்ளும் போது பிரபுவின் தந்தை அதை தர்ச்செய்யலாக பார்த்துவிட, அதன்பின்னே அவன் பிரபுவின் தந்தையுடன் பேசிய சுருக்கமான தருணத்தைத் தவிர, வேறு எந்த நபரிடமும் அவன் இதைப் பற்றி பேசியதில்லை. டாக்டர் அருலுக்கு அதை சொல்ல வேண்டியது அவசியம் என்பதை அவன் அறிந்திருந்தான். ஆனால் அப்படி சொல்லும் போது அது மிகவும் வேதனையான சில காயங்களை மீண்டும் திறக்கப் போகிறது. மனைவியின் மன நலனுக்காக டாக்டருக்கு அவ்வாறு செய்வதைத் தவிர வேறு வழியில்லை.

“டாக்டர் இது அனைத்தும் சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. எனது பால்யாநான்பண், பிரபு என்ற ஒருவன் கல்ப்பில் இருந்து எங்கள் சொந்த ஊருக்கு வந்திருந்த நேரம். ”

டாக்டர் அருளுக்கு பிரச்சினை எங்கிருந்து தொடங்கியது, என்ன பிரச்சினையாக இருக்கக்கூடும் என்பதைப் புரிந்து கொள்ளத் தொடங்கியாது. அவரது பல வருட அனுபவத்தில், ஒரு தம்பதியினரிடையே இனிமையான வாழ்க்கையில் சிக்கல் உருவாகுவதுக்கு பெரும்பாலும் மூன்றாம் நபர் அவர்கள் உறவில் புகுருவதுனால தான். பெரும்பாலும் அந்த மூன்றாம் நபர் ஒரு பெண்ணாக இருக்கும். ஆனால் அந்த மூன்றாம் நபர் ஆணாக இருப்பது முற்றிலும் அரிது என்று சொல்லமுடியாது.

பிரபு மெதுவாக வீட்டுக்குள் எப்படி பாம்புபோல நுழைந்தான் என்பதை டாக்டர் அறிந்தார். எப்படி அவன் தனது வருகைகளை அடிக்கடியாக ஆக்கியது, பின்னர் அவனுக்கு தெரியாமல் தனது வீட்டிற்கு வருகை தருவது என்பதை சரவணன் சொன்னான். சரவணன் தனது சொந்த குடும்பம் எவ்வாறு எல்லாவற்றையும் இழந்தது என்பதையும், தனது சொந்த மனஉறுத்தினாலும் மற்றும் கடின உழைப்பினாலும் தான் ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக மாறியது என்பதையும் சொன்னான். அந்த பணி இன்னும் அவனது நேரத்தை எவ்வாறு எடுக்குது மற்றும் அவனது வியாபாரத்தை கவனித்து, அந்த வெற்றியை தொடர்ந்து உறுதிப்படுத்த வேண்டிய நிலைமையும் எடுத்து சொன்னான். இதை பயன்படுத்தி பிரபு அவன் மனைவியை மயக்கிவிட்டான் என்று சொல்லி முடித்தான்.