வாசமான ஜாதிமல்லி End 22

டாக்டர் அருள் சரவணனைப் பார்த்து, “கவலைப்பட வேண்டாம் சரவணன், நாம குறைந்தபட்சம் இவ்வளவு முன்னேற்றம் கண்டதில் மகிழ்ச்சியடைகிறேன். போரில் வெற்றி பெற முயற்சிப்போம். ”

“சொல்லுங்கள் சரவணன், உங்க நிலை என்ன. நீங்க உண்மையிலேயே எப்படி பீல் பண்ணுறீங்க. ”

“ஏன் டாக்டர், நான் நன்றாக தான் இருக்கிறேன். எனக்கு எந்தத் பிரச்சனையும் இல்லை. ”

டாக்டர் அருள் சரவணனை வினோதமாகப் பார்த்து, “அப்படியா? உங்க மனைவி அல்லது பிரபு மீது நீங்க ஒரு முறை கூட கோபம், வெறுப்பு அல்லது வேறு எதையும் உணரவில்லையா? ”

டாக்டரின் கூர்மையான பார்வையில் சரவணன் சற்று சஞ்சலம் அடைந்தான். “சரவணன், அப்படி பட்ட உணர்ச்சிகளை உணருவது தவறல்ல. நீங்க எலும்புகள், சதை மற்றும் இரத்தத்தால் ஆன மனிதர். நீங்க எப்போதும் ஒரு துணிச்சலான ஆளுமையை ஆள் என்று வெளியில் காட்ட விருப்புறிங்க. உங்களுக்குள் அனைத்தையும் அடக்கி வச்சிக்காதிங்க. அது நல்லதுக்கில்லை.”

ஆமாம், அவனுக்கு பிரபு மீது கோபம் மற்றும் வெறுப்பு வரும் தருணங்கள் பல முறை இருந்தன, மீரா மீது கூட விரைவான கோபம் கொள்ளும் தருணங்கள் இருந்தன, ஆனால் அவன் அதை எப்போதும் அடக்கினான். அவன் ஒரு பிடிவாதமான தன்மையைக் கொண்டிருந்தான், அவன் எப்போதும் குடும்பத்துக்கு ஒரு பாறை போல் வலுவாக இருக்க வேண்டும், மேலும் வாழ்க்கை எறியும் எந்த சவால்களையும் எதிர்கொள்ள உறுதி இருக்க வேண்டும் என்று தனுக்குத்தானே வகுத்துக்கொண்டான்.

“சரவணன், நான் உன்னைப் பற்றியும் கவலைப்படுகிறேன். எல்லாவற்றையும் அடக்கி வைப்பது நீங்கள் எதிர்பார்க்காத போது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். எனக்கு மேலும் பிசினெஸ் வென்றும் என்று நான் இதை சொல்லுல்லா, ”டாக்டர் சிரித்தார்,” ஆனால் உங்களுடனும் சில கோன்சலிங் நடத்த விரும்புகிறேன்.”

இது நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, சரவணன் வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருந்தான். மீரா அவனிடமிருந்து சற்று தொலைவில் அமர்ந்து இருந்து தொலைக்காட்சியைப் பார்த்தாள், ஆனால் அவள் சரவணன் அறியாதபடி பெரும்பாலும் தன் கணவரை தன் பார்த்துக்கொண்டு இருந்தாள். பிள்ளைகள் டுவிஷேனுக்கு போயிருந்தார்கள். அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்க சரவணன் திரும்பி கதவைப் பார்த்தான். அவன் எழுந்திருக்குமுன், மீரா எழுந்து சென்று கதவைத் திறந்தாள். ஒரு மூச்சுத்திணறலுடன் அவள் இரண்டு மூன்று படிகளை பின்னோக்கி நகர்த்தினாள். இதைப் பார்த்த சரவணன் எழுந்து விரைவாக வாசலுக்கு நடந்தான். அவனும் திகைத்துப் போனான். மீராவின் எதிர்வினைக்கான காரணம் அவனுக்கு இப்போது புரிந்தது. அங்கே பிரபு மற்றும் கோமதி நின்றுகொண்டு இருந்தார்கள். பிரபு தங்கள் மகளை சுமந்தபடி நின்றான், அவர்கள் மகளுக்கு இப்போது ஒரு வருடத்துக்கு மேலாக ஆகி இருக்க வேண்டும்.

சரவணனுக்கு இப்போ என்ன நடக்குது என்று அதிர்ந்த நிலை. பிரபு அவனது குடும்பத்தினருடன் இங்கே ஏன் வந்தான்? சரவணன் மீண்டும் பிரபுவை பார்ப்பான் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. மிஞ்சி மிஞ்சி போனால், மிக அரிதான நிகழ்வுகளில், பிரபு மீண்டும் ஊருக்கு வந்தபோது அவர்கள் ஒருவருக்கொருவர் தற்செயலாக கடந்து சென்றிருக்கலாம். பிரபு உண்மையில் தனது வீட்டிற்கு வருவான் என்று அவன் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை, குறிப்பாக அவர்கள் கடைசியாக எப்படி பட்ட நிலைமையில் பிரிந்தார்கள் என்று எடுத்துக்கொள்ளும் போது. சரவணன் மீராவைப் பார்த்தான். ஆரம்ப அதிர்ச்சிக்குப் பிறகு, வந்த விருந்தாளிகளை வா என்று அழைக்காமல் கூட உள்ளே சென்று விட்டாள். அதை இப்போது சரவணன் செய்ய வேண்டியதாக ஆகிவிட்டது.

“உள்ளே வாங்க, என்ன ஆச்சரியம் உங்களை இங்கே பார்க்குறது,” சரவணன் உண்மையிலேயே அப்படி உணர்ந்து இதை சொன்னான், வெறும் சம்பிரதாயத்திற்காக அவன் இதைச் சொல்லவில்லை.

சரவணனுக்கு பிரபுவின் முகத்தில் இருந்த சங்கடத்தை காண முடிந்தது. சங்கடம் மட்டுமல்ல, அவன் முகத்தி பார்த்தால் அவனுக்கு மனத்தளர்ச்சி இருப்பதாகத் தோன்றியது. அதைப் பாரதத்தின் மூலம் சரவணனுக்கு விளங்கியது அவர்கள் இங்கே வருகை தருவது பிரபுவின் எண்ணமல்ல. அநேகமாக அது அவன் மனைவி கோமதியின் யோசனையாக இருந்திருக்கும்.

“நன்றிங்க, உங்களை மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சி.”

கோமதி தான் அவள் முகத்தில் மகிழ்ச்சியான புன்னகையுடன் இதை சொன்னாள். பிரபுவின் புன்னகை செயற்கூச்சமுள்ள புன்னகை போல வித்யாசமாக இருந்தது. வழக்கமாக அவன் முகத்தில் இருந்த தன்னம்பிக்கையான, ஏன் திமிர்பிடித்த புன்னகையை என்று கூட நீங்க சொல்ல முடியமா அந்த புன்னகை இல்லை. கோமதி விறுவிறுவென்று உள்ளே நடந்து வந்தாள், பிரபு சற்றே பணிவாக நடந்து வந்தான்.

மீரா அவர்களை உள்ளே கூட அழைக்காமல் உள்ளே போயிருந்தாலும், கோமதி நேராக அவளிடம் நடந்து மீராவின் கைகளை அவள் கைகளில் எடுத்தாள்.

“அக்கா, நீங்க எப்படி இருக்கீங்க? என்ன நடந்தது, உடம்புக்கு என்ன? உடல்நலம் சரி இல்லாதது போல இருக்கே.”

மீரா பதற்றத்தோடு அவள் கணவனைப் பார்த்தாள். அவளுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவள் விரும்பாத முக்கியமான விஷயம், அவர்கள் பிரிந்ததால் ஏற்பட்ட ஏக்கத்தினால் அவள் உடல்நிலை பாதிக்கப்பட்டது என்று பிரபு நினைத்துவிடுவானோ என்பது. சரவணன் அவள் தடுமாற்றத்தில் இருந்து காப்பாத்த பேசினான்.

இல்லை, அவளுக்கு சமீபத்தில் கேஸ்ட்ரிக் பிரச்சினை இருந்தது, சரியாக சாப்பிட முடியவில்லை. அவளுக்கு கொஞ்ச நாளில் நல்ல போய்விடும். நாங்கள் டாக்டரை பார்த்திட்டோம். இப்போது சரியான மருந்துகளை எடுக்கிறாள். ”

சரவணன் சோபாவின் சிங்கிள் நாற்காலியில் அமர்ந்தான், பிரபு நீண்ட சோபாவில் அவனருகில் அமர்ந்திருந்தான், கோமதி பிரபுவுக்கு மறுபுறம் அமர்ந்திருந்தாள். கோமதி மீராவை தன்னுடன் இழுத்துச் வந்திருந்தாள், மீராவுக்கு வேறு வழியில்லை, நீண்ட சோபாவின் மறுபுறம் உள்ள மற்ற சிங்கிள் நாற்காலியில் உட்கார்ந்தாள். பிரபு தனது மகளை மடியில் வைத்திருந்தான். மீரா பிரபுவைப் பார்க்க விரும்பவில்லை. உண்மையில், ஏறக்குறைய மூன்று வருடங்களுக்குப் பிறகு அவன் தந்தையின் இறுதிச் சடங்கிற்காக பிரபு திரும்பி வந்த நேரத்தில் ரொம்ப அவள் காதலனைப் பார்க்க ஆவலாக ஏங்கி கொண்டு இருந்தது போல் இல்லாமல், இந்த முறை அவனைப் பார்க்க அவளுக்கு எந்த விருப்பமும் இல்லை. பிரபுவுடன் கணவருக்கு அடிக்கடி அநீதி இழைத்த சோபாவில் அவர்கள் உட்கார்ந்திருப்பது அவளுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், அவளுக்கு மிகவும் துரதிட்டமுடையக இருந்தது.

நீங்க எப்போது ஊருக்கு வந்தீங்க? சரவணன் பிரபுவிடம் கேட்டான்.

சரவணனுக்கு பதில் அளிக்கும் போது பிரபு மிகவும் தயக்கத்துடன் பேசினான். “அம்மா அதிக நேரம் பப்பு வீட்டில் செலவிடுகிறார். என்ன அவள் வீடு இங்கிருந்து அதிக தூரம் இல்லை. வீட்டை சுத்தம் செய்ய மட்டுமே அவுங்கு வந்திட்டு அப்பப்போ வந்துட்டு போவாங்க. ”

“அப்படியா? மன்னிக்கவும், நான் அம்மாவுடன் தொடர்பு வச்சிக்கில்ல.” மீறவும் பிரபுவும் இடையே உள்ள கள்ள தொடர்பு இறுதியாக முடிவடைந்த காலத்திலிருந்தே சரவணன் பிரபுவின் குடும்பத்துடன் எந்தவிதமான தொடர்பையும் வைத்திருக்கவில்லை. அவுங்க குடும்பத்தில் என்ன நடக்குது என்றே சரவணனுக்கு தெரியாது.