மதன மோக ரூப சுந்தரி – 1 67

“ஒருவாரமாவது ஆகிடும் ஆதிரா.. ரொம்ப ஏங்கிப் போயிடுவேன்..!!” சிபி பாவமாக கெஞ்ச, அவனுக்கு பதில் சொல்கிற ஜோரில்

“என்னை ஒருமாசமா ஏங்க வச்சிங்கள்ல.. நீங்க ஒருவாரம் ஏங்கினா ஒன்னும் தப்பு இல்ல..!!”

என்று மனதில் இருந்த ஏக்கத்தை ஆதிரா உளறிக் கொட்டிவிட்டாள்.. உளறியது புரிந்ததும் உடனே நாக்கை கடித்துக் கொண்டாள்..!! ஆனால்.. சிபி அந்த வார்த்தைகளை கற்பூரம் மாதிரி கப்பென்று பற்றிக்கொண்டான்.. முகத்தில் ஒரு புதுவித பிரகாசம் பிறந்தவனாய்..

“ஹேய்ய்ய்… என்ன சொன்ன இப்போ.. என்ன சொன்ன.. கொஞ்சம் திரும்ப சொல்லு..!!”

“எ..என்ன சொன்னேன்.. ஒ..ஒன்னும் சொல்லலையே..??” முழுக்க நனைந்தபிறகு முக்காடு தேடினாள் ஆதிரா.

“இல்ல.. ஒருமாசமா ஏங்கிட்டு இருந்தேன்னு சொன்ன..!!”

“சேச்சே.. அப்டிலாம் ஒன்னும் சொல்லல.. உங்களுக்கு காது ஸ்லிப் ஆகி இருக்கும்..!!”

“ஹாஹா.. எனக்கு காது ஸ்லிப் ஆயிடுச்சா.. இல்ல.. உன் மனசு வெளில ஜம்ப் ஆயிடுச்சா..??” சிபி அவ்வாறு கேட்க, ஆதிராவுக்கு இப்போது குப்பென்று முகம் சிவந்து போனது.

“ஹையோ.. போங்கத்தான்.. நான் அப்டிலாம் ஒன்னும் சொல்லவே இல்ல.. நான் கெளம்புறேன் போங்க..!!” என்று எழுந்து ஓடினாள்.

“ஹேய்ய்ய்.. இரு இரு..!!”

“விடுங்க..!!”

சிபி ஆதிராவின் கையை எட்டி பிடிக்க.. அவள் வெடுக்கென்று உதறிவிட்டு வெட்கத்துடன் கதவை நோக்கி ஓடினாள்..!!

“ஹேய் ஆதிரா.. ஒரு நிமிஷம்..!!”

சிபி அந்த மாதிரி கத்தவும்.. வாசல் வரை சென்றிருந்த ஆதிரா பட்டென்று நின்றாள்.. வெட்கம் சற்றும் குறையாதவளாய், கணவனிடம் திரும்பி கேட்டாள்..!!

“எ..என்ன..??”

“உன்கிட்ட ஒன்னு சொல்ல மறந்துட்டேன்..!!”

“என்னது..??”

“அந்த மச்சம் சூப்பரா இருந்தது..!!” சிபியிடம் ஒரு குறும்பு.

“எந்த மச்சம்..??” ஆதிராவிடம் ஒரு குழப்பம்.

“அதான்.. உன் இடுப்புக்கு கீழ.. அதுக்கு பக்கத்துல.. இவ்வளவு பெருசா..!!” சொல்லிவிட்டு சிபி கண்சிமிட்ட,

“ஹையோஓஓஓஓ..!!!!”

உச்சபட்ச நாணத்துக்கு உள்ளான ஆதிரா.. படக்கென முகத்தை இருகைகளாலும் மூடிக்கொண்டாள்..!! தான் சந்தேகித்த மாதிரியே, கணவன் தன் உடலை வெளிச்சத்தில் ரசித்திருக்கிறான் என்று தெரிந்து போனதில்.. வெட்கம் அப்படியே அவளை பிடுங்கித் தின்றது..!! சிபியின் முகத்தைப் பார்க்கவே கூசிப் போனவளாய் சில வினாடிகள் நின்றிருந்தவள்.. அப்புறம் இரண்டு விரல்களை விரித்து, ஒற்றைக் கண்ணால் கணவனை பார்த்து.. சிணுங்கல் சிந்துகிற குரலில் கேட்டாள்..!!

“பாத்துட்டிங்களா..??”

“முத்தம் கூட குடுத்தேன்.. ஈரமா..!!” சிபி அவளை மேலும் சீண்டினான்.

“ச்ச்ச்ச்சீய்ய்ய்ய்..!!!!!!!”

கத்திய ஆதிரா அதன்பிறகு ஒற்றை வினாடி கூட அந்த அறையில் இருக்கவில்லை.. கதவு திறந்தவள், புள்ளிமானாய் துள்ளிக் குதித்து ஓடிப்போனாள்..!!