நான் பண்றேன்.. நல்லாருக்கும்.. என்ஜாய் பண்ணு..! 73

“எமி..!! வாட் ஹேப்பன்ட்…?”

நான் கேட்டதும் எமி பட்டென்று எழுந்து கொண்டாள். அவளுடைய கூந்தல் ஒருமாதிரி கலைந்திருந்தது. கண்களில் நீர் கொட்டிக் கொண்டிருந்தது. அவளுக்கு உடல்நிலை சரியில்லை என்று உடனே எனக்கு புரிந்து போனது. அவளோ சமாளிக்க முயன்றாள்.

“நத்திங் அசோக்.. ஐ ஆம் ஆல்ரைட்..!!”

“இல்லை எமி.. பார்த்தாலே தெரியுது.. உடம்பு சரியில்லையா..?”

எமி அப்புறமும் தயங்கினாள். என்னை ஒரு மாதிரி பரிதாபமாக பார்த்தாள். அப்புறம் தலையை குனிந்து கொண்டு சொன்னாள்.

“லைட்டா ஃபீவர்..!! தலை வேற வலிக்குது..!!”

நான் தயங்கி தயங்கி என் கைகளை நீட்டி அவளுடைய நெற்றியை தொட்டுப் பார்த்தேன். லைட்டாக எல்லாம் இல்லை. அனலாக கொதித்துக் கொண்டிருந்தது.

“என்ன எமி இது.. இவ்வளவு ஃபீவர் இருக்கு.. லீவ் போடிருக்கலாம்ல..?” நான் அவள் மேல் இருக்கும் அன்பினால், சற்றே கோபமாக கேட்டேன்.

“இட்ஸ் ஓகே அசோக்.. ஐ கேன் மேனேஜ்..!!” என்று அவள் புன்னகைத்தாள்.

“நோ எமி..!! கமான்.. கெளம்பு.. லீவு போட்டுட்டு.. வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடு..!!”

“நோ அசோக்.. ஐ ஹவ் ஸம் இஷ்யூஸ் டூ பிக்ஸ்..!!”

“அதெல்லாம் நாளைக்கு பாக்கலாம்.. ஹெல்த் இஸ் இம்பார்ட்டன்ட்.. கெட் அப்..!!” நான் அவளை வற்புறுத்தினேன்.

“ஐ கான்’ட் கோ நவ் அசோக்.. இதெல்லாம் இன்னைக்கு முடிக்கணும்..!!”

“பைத்தியம் மாதிரி பேசாத எமி.. வா.. ஸ்டீவ்ட்ட சொல்லிட்டு கிளம்பு..!!”

ஸ்டீவ் என்பது எங்கள் ஆன்சைட் மேனேஜர்.

“ஸ்டீவ் ஒரு இம்பார்ட்டன்ட் மீட்டிங்ல இருக்கான் அசோக்.. அவன்ட்ட இப்போ பேச முடியாது..”

“ஓகே.. நான் அங்கேயே போய் பேசுறேன்..” சொல்லிவிட்டு நான் திரும்பி நடக்க,

“அசோக்.. ப்ளீஸ்.. வெயிட்.. அவன் திட்டுவான்…!!”

என்று எமி பின்னால் இருந்து கத்தினாள். நான் கண்டுகொள்ளாமல் நடந்தேன். அவள் இப்படி கஷ்டப் பட்டுக்கொண்டிருக்கையில், யாரிடமும் எப்படியும் திட்டு வாங்கலாம்.. பரவாயில்லை.. என்று தோன்றியது. மீட்டிங் ரூம் எது என்று ரிசப்ஷனில் விசாரித்தேன். அங்கேயே சென்று கதவை தட்டினேன். திறந்த ஸ்டீவ் என்னை பார்த்ததும், கடித்து குதறுவது மாதிரி முறைத்தான். திட்டுவதற்காக வாயை திறந்தவன், நான் எமியை பற்றி சொன்னதும் சமாதானம் ஆனான். ‘அவளை வீட்டுக்கு போக சொல்லு..’என்றுவிட்டு கதவை திரும்ப சாத்திக் கொண்டான்.

நான் எமியை அழைத்துக் கொண்டு ஆபீசை விட்டு வெளியே வந்தேன். ‘டாக்டரை பார்க்கலாம்..’என்று சொன்னபோது, ‘வேண்டாம்..’ என்று மறுத்தவளை, சம்மதிக்க வைத்தேன். ஒரு டாக்சி பிடித்துக் கொண்டு டாக்டரை சென்று பார்த்தோம். அப்புறம் இன்னொரு டாக்சியில் அவள் வீட்டிற்கு சென்றோம். மிகவும் களைப்பாக இருந்த அவளை, கைத்தாங்கலாக அழைத்து சென்று பெட்டில்படுக்க வைத்தேன்.

கிச்சன் சென்று ப்ரெட் டோஸ்ட் செய்து, சான்ட்விச் தயாரித்து, அவளை சாப்பிட வைத்தேன். மாத்திரைகளை விழுங்க வைத்தேன். அப்புறம் அவள் மெத்தையில் படுத்துக் கொள்ள, பிளாங்கெட்டை இழுத்து போர்த்தி விட்டேன். எதிரே கிடந்த சேரில் அமர்ந்து கொண்டு, அவளுடைய அழகு முகத்தையே பார்த்தேன். எமி அந்த நிலையிலும், கன்னத்தில் குழி விழ, அவளுடைய ட்ரேட் மார்க் புன்னகையை வீசினாள். மெல்லிய குரலில் சொன்னாள்.

“நீ வேணா கெளம்பு அசோக்.. இனிமே நான் மேனேஜ் பண்ணிப்பேன்..!!”

“பரவால்லை எமி.. நீ தூங்குறவரை இங்கேயே உக்காந்திருக்கேன்.. அப்புறம் ஆபீஸ் போறேன்..!!”

எமி ஒருமாதிரி நன்றியுணர்ச்சியுடன், நட்பாக புன்னகைத்தாள். அவளுடைய கண்கள் பணித்தன. என் முகத்தை ஆசையாக பார்த்துக்கொண்டே, ஒரு குழந்தை மாதிரி தூங்கிப் போனாள் எமி.

அந்த சம்பவம்தான், என்னை காதலிக்க சொல்லி, எமியை தூண்டி விட்டிருக்க வேண்டும். அன்புக்காக ஏங்கியவளுக்கு, நான் உரிமை எடுத்துக் கொண்டு, சற்றே கோபத்துடன் காட்டிய அன்பு, மிகவும் பிடித்துப் போயிருக்க வேண்டும். அதற்கப்புறந்தான் எமியிடம் நிறைய மாற்றங்கள் என்று, இப்போது யோசித்துப் பார்த்தால், புரிந்து கொள்ள முடிகிறது.