நான் பண்றேன்.. நல்லாருக்கும்.. என்ஜாய் பண்ணு..! 73

“ஓகே அசோக்.. நான் பேசுறேன்.. எனக்கு ஒருநாள் டைம் கொடு..!!”

“ம்ம்.. தேங்க்ஸ் ஷிவா..!!”

காஃபி, லஞ்ச் சாப்பிடுவதற்கு அன்று எமி என்னை அழைக்கவில்லை. நான் தனியாகத்தான் சென்று வந்தேன். மெசஞ்சரில் கூட எதுவும் பிங் செய்யவில்லை. ஒரே ஒருமுறை எதிரே பார்த்தபோது கூட, தலையை குனிந்துகொண்டே கடந்து சென்றுவிட்டாள். என்மீது ரொம்ப கோபமாக இருக்கிறாள் என்று புரிந்தது. நல்லதுதான் என்று நினைத்துக் கொண்டேன்.

அடுத்து இரண்டு நாட்கள் சனி, ஞாயிறு. ஆபீஸ் விடுமுறை. திங்கட்கிழமை அதிகாலை..

ரூமில் இருந்து மெயில் செக் செய்தபோதே, ஷிவாவின் மெயில் வந்திருந்தது. அதற்கு மறுநாளே நான் இண்டியா திரும்ப அனுமதி அளித்திருந்தான். ஓப்பன் டிக்கெட்டை என்டோர்ஸ் செய்துக்கொள்ள சொல்லியிருந்தான். எனக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. தேங்க்ஸ் சொல்லி ரிப்ளை பண்ணினேன்.

அன்று நான் ஆபீஸ் செல்லவில்லை. ஏர்-இண்டியா ஆபீஸ் சென்று டிக்கெட் என்டோர்ஸ் செய்து கொண்டேன். நாளை இரவு ஃப்ளைட் என்றார்கள். அங்கே சென்று வரவே மதியம் ஆகிவிட்டது. அப்புறம் ஷாப்பிங் சென்றேன். அம்மா, அப்பா, தங்கை எல்லாருக்கும் ஏதாவது வாங்கினேன்.

திரும்ப ரூமுக்கு வந்தபோது மாலை ஆறுமணி ஆகியிருந்தது. மூர்த்தி எனக்கு முன்பே வந்திருந்தான். நாளையே இண்டியா திரும்பும் விஷயத்தை அவனிடம் சொன்னேன். அவன் எதுவும் சொல்லவில்லை. அமைதியாக கேட்டுக் கொண்டான்.

அப்புறம் என் பெட்ரூம் சென்று திங்க்ஸ் பேக் பண்ண ஆரம்பித்தேன். ஒரு அரை மணி நேரத்தில் ஓரளவு எல்லா வேலையும் முடிந்தது. சற்றே நிம்மதியாக இருந்தது. அவ்வளவுதான்..!! இனி நாளை காலை ஆபீஸ் சென்று, ஸ்டீவை மட்டும் பார்த்து, ஃபார்மலாக ஒரு வார்த்தை சொல்லிவிட்டு, இண்டியா கிளம்ப வேண்டியதுதான்..!! எமியை இனிமேல் பார்க்கவே போவதில்லை என்ற நினைவு வந்தபோது, இதயம் லேசாக வலித்தது.

அப்போதுதான் காலிங் பெல் அடித்தது. மூர்த்தி கதவை திறக்க செல்ல, நான் என் ரூமில் இருந்தபடியே எட்டிப் பார்த்தேன். வெளியே எமி நின்றிருந்தாள். யெல்லோ கலர் டாப்ஸ்.. லைட் ப்ளூ ஜீன்ஸ்.. கையில் ஒரு பாக்ஸ்..!! அவளை பார்த்ததும், நான் பக்கென்று அதிர்ந்து போக, மூர்த்தியோ பற்களை காட்டியவாறு அவளை வரவேற்றான்.

“ஹாய் எமி.. கம்..!! கம் ஆன் இன்..!!”

“அசோக்..?”

“இருக்குறார்.. உள்ள வா எமி.. ப்ளீஸ் சிட்..!!”

அழைத்து வந்து அவளை சோபாவில் அமரவைத்தான். அணிந்திருந்த பனியன் மீது, ஒரு சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு, என்னிடம் வந்தான்.

“பாஸ்.. நல்லா ஃப்ரீயா.. மனசு விட்டு பேசுங்க.. நான் போயிட்டு.. கொஞ்ச நேரம்.. இல்லை இல்லை.. ரொம்ப நேரம் கழிச்சு வர்றேன்..!!”

சொன்னவன் என் பதிலுக்காக காத்திராமல், வீட்டை விட்டு வெளியேறினான். போகும் வழியில் எமியிடம்,

“நீங்க பேசிட்டு இருங்க எமி.. நான் இப்போ வந்துர்றேன்…”

என்று சிரித்தவாறே சொல்லிவிட்டு சென்றான். நான் கொஞ்ச நேரம் என்ன செய்வது என்று தெரியாமலே நின்றிருந்தேன். எமியே சோபாவில் இருந்து எழுந்து, மெல்ல நடந்து என்னுடைய அறைக்குள் நுழைந்தாள். என்னை நெருங்கினாள். முகத்தில் அவளுடைய வழக்கமான புன்னகையுடன்,

“ஹாய் அசோக்..” என்றாள்.

“ஹாய் எமி..” என்றேன் நானும் வேறு வழியில்லாமல்.

“ஸோ.. இண்டியா போற..?”

“யா.. நெக்ஸ்ட் வீக்..!!”

“பொய் சொல்லாத அசோக்.. எனக்கு தெரியும்.. நீ நாளைக்கு போற..!!”

“எ..எமி.. அ..அது..?” நான் திகைப்பாய் கேட்க,

“இன்னைக்கு நீ ஆபீசுக்கு ஏன் வரலைன்னு ஸ்டீவ்ட்ட கேட்டேன்.. அவன் சொல்லிட்டான்..!!”

என்று எமி அமைதியாக சொன்னாள். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. தலையை குனிந்து கொண்டேன். எமி பரிதாமான குரலில் கேட்டாள்.

“ஏன் அசோக் எங்கிட்ட சொல்லலை..?”

“ஸாரி எமி..!!”

“நான் இப்போ வரலைன்னா.. என்னை பாக்காமலே பறந்திருப்ப.. இல்லை..? என் மேல அப்டி என்ன கோபம் உனக்கு..?” எமியின் குரல் இப்போது உடைந்து போயிருந்தது.

“ச்சேச்சே.. அப்டிலாம் இல்லை எமி..”

“அப்புறம் ஏன் சொல்லலை..?”

“சரி.. இப்போ சொல்றேன்..!! நாளைக்கு இண்டியா போறேன்..!!”