நான் பண்றேன்.. நல்லாருக்கும்.. என்ஜாய் பண்ணு..! 73

“ஓகே..!! தேங்க்ஸ்..!!”

சொன்ன எமி பட்டென்று எழுந்துகொண்டாள். காஃபி கப்பை எடுத்துக் கொண்டு நகரப் போனவள், பின்பு அப்படியே நின்றாள். ஒரு கையை டேபிளில் ஊன்றி.. அவளுடைய முகத்தை எனக்கு அருகே கொண்டுவது.. என் கண்களை கூர்மையாக பார்த்தபடி.. ஆத்திரமாக ஆனால் அழுத்தம் திருத்தமாக சொன்னாள்.

“வாட் யு செட்.. எவ்ரித்திங் வில் பி ஆல்ரைட்..!! ம்ம்ம்…? நவ் லிஸன் டு திஸ்..!! நத்திங் வில் பி ஆல்ரைட் அசோக்..!! நத்திங் வில் பி ஆல்ரைட் ஃபார் மீ, வித்தவுட் யு..!! எத்தனை வருஷம் ஆனாலும் என்னால உன்னை மறக்க முடியாது.. அதே மாதிரி.. நீ இல்லாம இன்னொரு ஆம்பளை என் லைஃப்ல கெடையவே கெடையாது..!!”

படபடவென பொரிந்து தள்ளிவிட்டு, எமி விடுவிடுவென நடந்து சென்றாள். நான் திகைத்துப் போய் அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தேன். நடந்து செல்கையிலேயே, கண்களில் வழிந்த நீரை அவள் துடைத்துக் கொள்வது தெரிந்தது. நான் ஆடிப்போயிருந்தேன். கொஞ்ச நேரம் அப்படியே அமர்ந்திருந்தேன். அப்புறம் எழுந்து ஆபீஸ் சென்றேன். அன்று முழுவதும் எந்தப்பக்கம் திரும்பினாலும், எமி அங்கே நிற்பது மாதிரியே இருந்தது.

அன்று நான் ரூமுக்கு திரும்பியபோது, மூர்த்தி சோபாவில் அமர்ந்து லேப்டாப்பை தட்டிக் கொண்டிருந்தான். நான் மெல்ல அவனுக்கு அருகே சென்று அமர, அவனோ கம்ப்யூட்டரில் இருந்து கவனத்தை விலக்காமலே, ‘ஹாய்..!!’ என்றான். நான் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்துவிட்டு, மெல்லிய குரலில் சொன்னேன்.

“எமி எங்கிட்ட ‘ஐ லவ் யூ..’சொல்லிட்டா மூர்த்தி..!!”

நான் சொன்னதும் அவன் ரொம்ப சந்தோஷப் பட்டான். முகமெல்லாம் மலர்ந்து போய், கையை நீட்டினான்.

“கைய கொடுங்க பாஸ்..!! கலக்கிட்டீங்க..!! ஹையோ…!! எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா பாஸ்..? நான்தான் ஆரம்பத்துல இருந்தே சொன்னேன்ல..? இது லவ்வுதான்னு.. நீங்கதான் நம்பலை..!! எப்போ ட்ரீட் தர்றீங்க..?” அவன் உற்சாகமாக பேசிக்கொண்டே போக, நான் இடைமறித்தேன்.

“நான் அந்த லவ்வை அக்ஸப்ட் பண்ணிக்கலை மூர்த்தி.. என்னை மறந்துடுன்னு சொல்லிட்டேன்..!!”

மூர்த்தி இப்போது பட்டென்று அதிர்ந்தான். நம்பமுடியாமல் என்னை பார்த்தான்.

“பாஸ்.. என்ன சொல்றீங்க நீங்க..? ஏன் அப்படி பண்ணுனீங்க..?”

“நான்தான் எங்க ஆளுங்களை பத்தி சொல்லிருக்கேன்ல மூர்த்தி..? அவங்க முன்னாடி இவளை கொண்டு போய் நிறுத்த சொல்றியா..?”

நான் சொன்னதும் மூர்த்தி என்னை ஒரு மாதிரியாக பார்த்தான். சற்றே கேலியான குரலில் கேட்டான்.

“உயிர் போயிருமேன்னு பயப்படுறீங்களா பாஸ்..?” இப்போது நான் எரிச்சலானேன்.

“மூர்த்தி.. நான் ஒன்னும் அந்த அளவுக்கு கோழை இல்லை..!! எனக்கு என்ன ஆனாலும் பரவால்லை.. எமிக்கு ஏதாவது ஒன்னுனா.. என்னால தாங்க முடியாது மூர்த்தி..!!”

“ஸோ.. என்ன பண்ணப் போறீங்க..?”

“இண்டியா போகப் போறேன்.. அடுத்த வாரம் இல்லை.. ரெண்டே நாள்ல..!! என் மேனேஜர்ட்ட பேசப் போறேன்..!!”

“அப்போ எமி..?”

“அவ கொஞ்ச நாள்ல எல்லாத்தையும் மறந்துடுவா மூர்த்தி.. நிம்மதியா இருப்பா..!!”

அப்புறம் மூர்த்தி கொஞ்ச நேரம் எதுவுமே பேசவில்லை. அமைதியாக என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். ஒருமாதிரி முறைக்கிறான் என்று தோன்றியது. அப்புறம் ஒரு நீண்ட பெருமூச்சை வெளிப்படுத்திவிட்டு சொன்னான்.

“பாருங்க பாஸ்.. நான் எமியை ரெண்டு மூணு தடவை பாத்ததை வச்சு சொல்றேன்..!! அவ மாதிரி ஒரு நல்ல பொண்ணு.. உலகத்துல எங்கே தேடுனாலும் கெடைக்க மாட்டா..!! அந்த மாதிரி ஒரு பொண்ணுக்காக என்னவேனா செய்யலாம் பாஸ்..!! உசுரு போனா மசுரே போச்சு..!! நீங்க பெரிய தப்பு பண்றீங்கன்னு தோணுது பாஸ்..!! உங்க எடத்துல நான் இருந்தா.. கண்டிப்பா எமியை கூட்டிட்டு போய்.. அவங்க முன்னாடி நிறுத்துவேன்..!! நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்.. அப்புறம் உங்க இஷ்டம்..!! நான் ஏதாவது தப்பா பேசிருந்தா.. என்னை மன்னிச்சுடுங்க பாஸ்..!!”

சொல்லிவிட்டு அவன் லேப்டாப்பை தூக்கிக் கொண்டு, அவனுடைய பெட்ரூமுக்கு நடந்தான். நான் சுத்தமாக குழம்பிப்போய் தலையை பிடித்துக் கொண்டேன்.

அடுத்த நாள் காலை.. ஆபீஸ் சென்றதுமே, முதல்வேலையாக என்னுடைய ஆஃப்ஷோர் மேனேஜருக்கு போன் செய்தேன்.

“ஹாய் அசோக்.. எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு..?”

“ஒன்னும் பிரச்னை இல்லை ஷிவா..!!”

“ம்ம்.. நெக்ஸ்ட் வீக் வர்றியா..?”

“அதுக்காகத்தான் இப்போ கால் பண்ணினேன் ஷிவா.. நான் உடனே இண்டியா திரும்பனும்..!!”

“உடனேவா..? எதுக்கு..?”

“ஃபேமிலில ஒரு எமர்ஜென்சி.. நான் உடனே வந்தா.. நல்லாருக்கும்னு ஃபீல் பண்றாங்க..!!”

“நீ வந்துட்டா.. அப்போ.. அங்க சப்போர்ட்..?”

“அதுதான் எல்லாம் ஸ்மூத்தா.. எந்தப் பிரச்னையும் இல்லாம போயிட்டு இருக்கே ஷிவா..? நான் சப்போர்ட்ன்ற பேர்ல.. தெண்டத்துக்குதான இங்க உக்காந்திருக்கேன்..? பிசினஸ் ஹெட்கிட்ட பேசு ஷிவா.. எமர்ஜென்சி சிச்சுவேஷன்னு சொல்லி.. எப்படியாவது நான் உடனே திரும்ப வர.. ஏற்பாடு பண்ணு..!!”

ஷிவா ‘ம்ம்ம்… ம்ம்ம்…’ என்றவாறு கொஞ்ச நேரம் யோசித்தான். அப்புறம்,