நான் பண்றேன்.. நல்லாருக்கும்.. என்ஜாய் பண்ணு..! 72

“யெஸ் அசோக்.. இட் லுக்ஸ் டேஞ்சரஸ்..!!” எமியின் குரல் அபாய அவசரத்தில் ஒலித்தது.

“எமி..”

“அசோக்க்க்க்க்…!!!”

எமி என் பேரை சொல்லி அலறும்போதே, எங்கிருந்துதான் வந்ததென்றே தெரியாமல் அந்த விமானம் பறந்து வந்து, படுவேகமாய் அந்த பில்டிங்கை மோதியது. அந்த உயரமான பில்டிங்கின் உச்சியே சுத்தமாய் மறைந்துபோக, ஒரு பெரிய நெருப்புக்கோளம் ஒன்று உருவானது. ‘பட.. பட.. பட…’ வென எது எதுவோ வெடித்து சிதறியது. குப்பென்ற கரும்புகை அந்த ஏரியா முழுவதும் பரவியது. நான் ‘எமி.. எமி.. எமி..’ என்று, முட்டாள்தனமாய் அணைந்துபோன செல்போனில் அலறிக் கொண்டிருந்தேன்.

இன்று…

ஊர்: சென்னை, இந்தியா.
இடம்: என் வீடு
தேதி: செப்டம்பர் 11, 2010

நான் சோபாவில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த ஆங்கில ந்யூஸ் சேனலில் அந்த ரெட்டை கட்டிடங்கள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தன. பின்பு அந்த ந்யூஸ் ரீடர் தோன்றினான். முகத்தில் ஒரு போலி சோகத்தை வரவழைத்துக் கொண்டு சொன்னான்.

“வேர்ல்ட் ட்ரேட் செண்டர் தகர்க்கப்பட்ட தினம்.. இன்று அமெரிக்கா முழுவதும் அனுசரிக்கப் படுகிறது.. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இதே தினத்தில்.. அல்-கொய்தா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில்.. ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் பலியானார்கள்.. இதையொட்டி.. அமெரிக்க அதிபர் திரு. ஒபாமா..”

என் மனைவி வள்ளி பட்டென்று சேனலை மாற்றினாள். ந்யூஸ் சேனல் மறைந்து சன் டிவி தோன்றியது. எரிச்சலாக முணுமுணுத்துக் கொண்டே எனக்கு அருகில் சோபாவில் வந்து அமர்ந்தாள்.

“ஐயோ.. திருமதி செல்வம் போட்டிருப்பான்.. நீங்க கண்டதையும் உக்காந்து பாத்துக்கிட்டு இருப்பீங்க…!!”

சொல்லிவிட்டு.. அந்த சீரியலில் யாரோ யாருக்காவோ அழுததைப் பார்த்து உருகி, இவளும் அழ ஆரம்பித்தாள். எனக்கும் அழுகை வந்தது. கண்ணில் இருந்து வழிந்த நீரை, என் மனைவிக்கு தெரியாமல் துடைத்துக் கொண்டேன்.

( முற்றும் )