நான் பண்றேன்.. நல்லாருக்கும்.. என்ஜாய் பண்ணு..! 73

“சொல்லு அசோக்.. புரிஞ்சுக்க ட்ரை பண்ணுறேன்..!!”

“எனக்கு வள்ளினு ஒரு முறைப்பொண்ணு இருக்குறா.. ஐ மீன்.. மாமா பொண்ணு..!! இண்டியால இந்தமாதிரி.. முறைப்பொண்ணை மேரேஜ் பண்ணிக்கிறது சகஜம்..!! எனக்கும் அவளுக்கும் போன வருஷமே என்கேஜ்மென்ட் முடிஞ்சது.. இன்னும் ரெண்டு மாசத்துல.. மேரேஜ் பிக்ஸ் பண்ணிருக்காங்க..!!”

“என்கேஜ்மென்ட்தான முடிஞ்சிருக்கு.. மேரேஜ் ஆனாத்தான ப்ராப்ளம்..? உங்க ஊர் பொண்ணுங்க.. தாலி, அது இதுன்னு.. செண்டிமெண்ட்..!!”

“உனக்கு எங்க கேஸ்ட் பத்தி தெரியாது எமி..!!”

“சொல்லிருக்க..!! என்ன பண்ணுவாங்க..?”

“நாம ரெண்டுபேரும் இப்போ அங்க போய்.. அந்த கல்யாணத்தை நிறுத்துங்க.. நாங்க ரெண்டு பேரும்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறோம்னு சொன்னா.. என் மாமா நம்மை அரிவாளை தூக்கிட்டு.. வெட்ட வருவாரு..!!”

“அரிவாள்..? வாட் இஸ் அரிவாள்..?”

“யூ டோன்ட் க்னோ.. இட்ஸ்.. இட்ஸ் எ டெட்லி வெப்பன்..!! நம்மை.. கொன்னாலும் கொன்னுருவாங்க எமி..!!”

“அசோக்.. அங்கே போகாமலேயே.. எதுவும் பேசாமாலேயே.. நீயா ஏன் எல்லாத்தையும் கற்பனை பண்ற..? நாம போய்த்தான் பார்ப்போமே.. போய் அவங்க முன்னாடி நின்னு.. கெஞ்சிப் பார்ப்போம்..!! நீ எவ்வளவு நல்லவனா இருக்குற..? அவங்க உன்னை பெத்தவங்க.. உன் ரிலேட்டிவ்ஸ்..!! அவங்களுக்கு அந்த நல்ல உள்ளம் இல்லாமா போகுமா..? போய் பாக்கலாம் அசோக்..!!”

உண்மையை சொல்லப்போனால் அவர்கள் இந்த விஷயத்திற்கு எந்த மாதிரி ரியாக்ட் பண்ணுவார்கள் என்றே எனக்கு தெரியவில்லை. எமி சொன்னமாதிரி எல்லோருமே நல்லவர்கள்தான். அன்பானவர்கள்தான். இதுவரை என்னிடம் கோபமாக ஒருவார்த்தை கூட பேசியது கிடையாது. ஆனால் எல்லோருமே முரடர்கள். படிக்காதவர்கள். உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். எந்தநேரத்தில் எந்தமாதிரி பிஹேவ் பண்ணுவார்கள் என்பதே தெரியாது. இதில்.. எந்த பாவமும் அறியாத எமியை அவர்கள் முன்னால் கொண்டு சென்று நிறுத்தி..

“நோ எமி.. ஐ டோன்ட் வான்ட் டு புட் யுவர் லைஃப் இன் ரிஸ்க்..!!”

நான் சொன்னதும் எமி அமைதியானாள். கொஞ்ச நேரம் எதையோ தீவிரமாக யோசித்தாள். அப்புறம் என் பக்கமாக திரும்பி, அந்த கன்னத்தில் குழிவிழும் புன்னகையுடன் சொன்னாள்.

“ஸீ அசோக்.. நீ என் கூட இருக்குறதா இருந்தா.. எதுக்கு வேணா நான் ரெடி..!! என் உயிர் இண்டியால போனா.. அது எனக்கு சந்தோஷந்தான்..!! என்னை கூட்டிட்டு போ அசோக்..!!”

“ஸாரி எமி.. என்னால அது முடியாது..!!”

“தென்.. வாட்ஸ் யுவர் டெசிஷன்..?”

“எமி.. நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு.. இந்த லவ்.. இப்போதான் இது பெருசா தோணும்.. உயிரை கூட விடலாம்னு தோணும்..!! ஆனா.. லவ்வை விட லைஃப் ரொம்ப முக்கியம் எமி..!! ஆக்சுவலா எனக்கு பதிலா வேறொருத்தன் ஆன்சைட் வந்திருக்கணும்.. கடைசி நேரத்துல.. அவனுக்கு ஹெல்த் சரியில்லாம போய்.. நான் வர்ற மாதிரி ஆயிடுச்சு..!! நெனச்சு பாரு.. ஒருவேளை நான் யூ.எஸ் வராமலே போயிருந்தா..? நான் யார்னே உனக்கு தெரிஞ்சிருக்காது..!! இப்போவும் அப்படி நெனச்சுக்கோ எமி..!! என்னை மறந்துடு..!! நான் இண்டியா போறேன்..!! உனக்கு ஆரம்பத்துல கஷ்டமா இருக்கும்.. அப்புறம் என்னை மறக்க ஆரம்பிச்சுடுவ.. காலம் எல்லாத்தையும் மறக்கடிச்சுடும்.. ஒரு ரெண்டு வருஷத்துல.. அசோக்குனு ஒரு ஆள் இருந்ததையே நீ மறந்துடுவ..!! எவ்ரித்திங் வில் பி ஆல்ரைட்..!!”

“அசோக்..” அவள் கெஞ்சும் குரலில் ஆரம்பிக்க,

“ப்ளீஸ் எமி.. இதுக்கு மேல இதைப்பத்தி பேசாத..!!” என நான் பட்டென்று சொன்னேன்.

எமியின் முகம் வாடிப்போனது. எப்போதுமே அந்தமுகத்தில் தவழும், அந்த கள்ளம் கபடமற்ற புன்னகை காணாமல் போனது. கண்களை இடுக்கி, என்னையே முறைத்துக் கொண்டிருந்தாள். இத்தனை நாட்கள் பழகியதில், கோபம் கொப்பளிக்கும் அவளுடைய முகத்தை இப்போதுதான் பார்க்கிறேன். கஷ்டமாக இருந்தது. எமி அந்த கோபம் தெறிக்கும் குரலிலேயே கேட்டாள்.

“இதுதான் உன் முடிவா..?”

“எஸ்..!!”