நான் பண்றேன்.. நல்லாருக்கும்.. என்ஜாய் பண்ணு..! 73

“நோ.. நோ.. நோ.. நானும் வருவேன்.. எனக்கு இண்டியாவை பாக்கணும் போல இருக்கு..!! உங்க ஊர்.. உன் ஃபேமிலி.. அந்த நாய்க்குட்டி.. எல்லாரையும் பாக்கணும்.. உங்க ஊர் ஏரில குளிக்கணும்.. ப்ளீஸ் அசோக்.. என்னையும் கூட்டிட்டு போ.. ப்ளீஸ்…!!” அவள் கெஞ்ச, நான் திணறினேன்.

“உடனே எப்படி எமி..? உனக்கு விசா, ஃப்ளைட் டிக்கெட்..?”

“இண்டியன் விசா என்கிட்டே இருக்கு.. இன்னும் எக்ஸ்பயர் ஆகலை..”

“ஓகே..!! ஃப்ளைட் டிக்கெட்..? அதுவும் நாளைக்கே..? திடீர்னு அவ்வளவு பணம் எப்படி மேனேஜ் பண்ணுவ..? எல்லாம் எப்படி அரேஞ் பண்ணுவ..?”

“அதான் யோசிக்கிறேன்.. ஆங்.. ஒரு ஐடியா..!! என் அங்கிள்ட்ட கேக்கலாம்..!! அவரு ஹெல்ப் பண்ணுவாரு..!!”

“கண்டிப்பா பண்ணுவாரா..?”

“கண்டிப்பா பண்ணுவாரு..!! ஹீ ஜஸ்ட் லவ்ஸ் மீ..!! ஹையோ.. ஐ கான்’ட் பிலீவ் திஸ்..!! ஐ’ம் கோயிங் டு இண்டியா வித் யூ..!!”

அவள் சின்னக்குழந்தை மாதிரி உற்சாகத்தில் துள்ள, நான் ஊரில் என்ன நடக்கப் போகிறதோ என்ற கவலையில் அவளுடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

“என்னாச்சு அசோக்..? ஏன் அப்படி பாக்குற..?”

“இல்லை எமி.. உன்னை கூட்டிட்டு போனா.. என் அப்பா, அம்மா என்ன சொல்லப் போறாங்களோ..?”

“ஒன்னும் சொல்ல மாட்டாங்க..!! நான் ஸாரி கட்டி.. வளையல் போட்டு.. பொட்டு வச்சு.. அப்புறம்.. ஆங்.. தலை நெறைய மல்லிகைப்பூ வச்சுக்கிட்டு.. அவங்க கால்ல விழுவேன்..!! அவங்க ஒன்னும் சொல்ல மாட்டாங்க..!! என்னை அவங்களுக்கு புடிக்கும்..!! நீ வேணா பாரேன்..!!”

கண்களில் ஆயிரம் கனவுகளும், ஆசைகளுமாய் அவள் சொல்ல, நான் அப்படியே அவளை இழுத்து என் மார்போடு அணைத்துக் கொண்டேன்.

அடுத்தநாள் காலை. நானும் எமியும் அந்த உயரமான பில்டிங்கில் செக்யூரிட்டி ஏரியாவில் நின்றிருந்தோம். நூறு ஃப்ளோராவது இருக்கும் என்று நினைக்கிறேன். ரொம்ப பெரிய, உயரமான கட்டிடம்..!! கொஞ்ச நேரத்தில் அந்த செக்யூரிட்டி வந்தான். எமியுடைய அங்கிள் அவளை மட்டும் மேலே வர சொல்லுவதாகவும், என்னை வெளியில் வெயிட் பண்ணுமாறும் சொன்னான். எமி என்னிடம் திரும்பி, அவளுடைய அந்த கன்னத்தில் குழி விழும், கள்ளம் கபடமற்ற சிரிப்பை உதிர்த்துவிட்டு சொன்னாள்.

“ஒரு டென் மினிட்ஸ் வெயிட் பண்ணு அசோக்.. ஐ வில் பீ பேக்..!!”

“ஓகே எமி.. நீ வர்ற வரை.. நான் அந்த காஃபி ஷாப்ல வெயிட் பண்ணுறேன்..!!”

சொல்லிவிட்டு நான் திரும்ப, எமி என்ன நினைத்தாளோ..? பட்டென்று என் தோளை பிடித்து திருப்பி, என் உதட்டில் ‘இச்ச்..’ என்று முத்தமிட்டாள். மீண்டும் அந்த புன்னகையை உதிர்த்துவிட்டு, லிஃப்ட் நோக்கி நடந்தாள்.

நான் அந்த பில்டிங்கை விட்டு வெளியே வந்து, எதிரே இருந்த காஃபி ஷாப்புக்குள் நுழைந்தேன். ஒரு காஃபியும், டோனட்டும் வாங்கிக்கொண்டு வெளியே கிடந்த டேபிளில் வந்து அமர்ந்தேன். அந்த டோனட்டை ஒரு கடி கடித்தபோது, என் செல்போன் சிணுங்கியது. எமிதான் அழைக்கிறாள். எடுத்து பேசினேன். ஒரு மாதிரி உற்சாகமான குரலில் சொன்னாள்.

“ஐ கேன் ஸீ யூ..!!”

“எமி.. எமி.. எங்க இருக்குற..?”

“நான் எண்பதாவது ஃப்ளோர்ல இருக்குறேன்..!!”

“அங்கே இருந்து எப்படி என்னை பாக்குற..?”

“இங்க ஒருத்தர் பைனாகுலர் வச்சிருந்தாரு.. அவர்ட்ட இருந்து வாங்கி பாக்குறேன்..!! யூ லுக் ஆவ்ஸம்..!! டோனட் நல்லாருக்கா..?”

“ம்ம்.. நல்லாருக்கு..!! என்னாச்சு..? உன் அங்கிளை பாக்கலையா..?”

“அவரு சின்ன டிஸ்கஷன்ல இருக்காரு.. அஞ்சு நிமிஷம் என்னை வெயிட் பண்ண சொன்னாரு..!!”

“ஓகே…!!”

“ஜஸ்ட் டென் மோர் மினிட்ஸ் பேபி.. ஐ வில் பீ வித் யூ..!!” என்று கொஞ்சினாள்.

“ஓகே…!! ஓகே…!!” என்று நானும் கொஞ்சிக்கொண்டு இருக்கும்போதே, எமி திடீரென்று,

“வாட்ஸ் தேட்..???” என்று ஒரு மாதிரி அதிர்ச்சியாக சொன்னாள்.

“என்ன எமி..?”

“ஒரு ஃப்ளைட்..!!”

“ம்ம்.. வானத்துல ஃப்ளைட் பறக்கத்தான செய்யும்..?”

“நோ அசோக்..!! இது ரொம்ப லோவா பறக்குது..!! ஐ தின்க்.. இட்ஸ் கம்மிங் டுவார்ட்ஸ் திஸ் பில்டிங்..!!” இப்போது எமியின் குரலில் ஒருவித திகில் தெரிந்தது.

“எமி.. என்ன சொல்ற..?” இப்போது பதட்டம் என்னையும் தொற்றிக் கொண்டது.