மல்லி மாற்றான் தோட்டத்து மல்லிகா – Part 5 112

இந்நேரத்துல யாரா இருக்கும்னு சென்று பார்க்க வாசலில் நின்றது ஷாம் !

நான் ஷாம் எங்க வீட்டுக்கு வருவான்னு நினைக்கவே இல்லை !

இவன் ஏன் இங்க வந்தான் இப்ப என்ன பண்றது ?

ஒன்றும் புரியாமல் கதவை திறக்க ….

ஹாய் உள்ள வரலாமா ?

ம்! வாங்க சார் …

என்ன மல்லி அங்க பார்ட்டிக்கு வருவீங்கன்னு பார்த்தா இங்க இருக்கீங்க …

இல்லை நைட் டைம்ல எப்புடி வரதுன்னு …

அதுக்குன்னு … சுடிதார் கூட வேணாம்னு வந்துட்டியாம் ….

“ஆஹா அந்த பேக்க கதிர்கிட்ட விட்டுட்டு வந்ததை பையன் அப்படியே மாத்தி
சொல்ல்லிட்டான் போல ….”

இல்லை இறங்குன அவசரத்துல மறந்துட்டேன் !!!

சரி இந்தா உனக்கு வாங்குன கிப்ட் ….

இதெல்லாம் வேணாம் சார் …

எனக்காக வாங்கிக்க மல்லி … பிளீஸ் !!!

ம்க்கும் இவரு மட்டும் அப்டியே ஒழுங்கு …. நான் மவுனமாக நிற்க …

மல்லி பிளீஸ் வாங்கிக்க என்று என்னருகில் நெருங்கி என் கை பிடித்து அந்த

பார்சலை என் கையில் வைக்க ….

நான் சட்டென்று கையை உதர அவரோ மீண்டும் என் கையை இறுக்கமாக பற்றி பிளீஸ்

மல்லி எனக்காக ….

ஷாமின் கெஞ்சலான பார்வையை தாங்க முடியாமல் நானும் அதை வாங்க …

குட் குட் … போங்க போயி மாத்திட்டு வாங்க ….

இல்லை சார் ….

சார் இல்லை ஷாம் ….

நானும் சிரித்தபடி இல்லை வேணாம் ஷாம் இனிமே நான் வெளில கிளம்புனா

யாராச்சும் பார்த்தா தப்பா நினைப்பாங்க ….

பிளீஸ் மல்லி நான் இப்ப கூட கார தெரு முனையில் நிப்பாட்டிருக்கேன் …

பிளீஸ் வாங்க ….

இல்லை சார் அது பெரிய ரிஸ்க் இந்த தெருவுல எல்லாருக்கும் என்னை தெரியும் !

சரி நான் கிளம்பி போறேன் நீ ஒரு ஆட்டோல பஸ்ஸ்டாண்ட் வந்துடு நான் அங்க

பிக் அப் பண்ணிக்கிறேன் !

சார் சொன்னா கேக்க மாட்டீங்ககளா ?

நீங்க போயி கிளம்பி வாங்க நான் தெருமுனையில் கார்ல வெயிட் பண்றேன் !

என் பதிலுக்கு காத்திருக்காமல் கடகடன்னு கிளம்பிட்டார் !

இப்ப என்ன பண்றது ? ச்ச வந்தவருக்கு ஒரு காபி கூட போட்டு தரலை !

ம்க்கும் ரொம்ப முக்கியம் ….

இப்ப என்ன பண்ணலாம் ?

கடவுளே இது என்ன சோதனை …. இந்த உலகத்துல நான் இப்ப தனித்து விடப்பட்ருக்கேன் …

4 Comments

  1. இந்த கதை ஆசிரியர் நான் பேச வேண்டும் மெயில் ஐடி கிடைக்குமா

  2. Super send next part ji

  3. கதை ஆசிரியரிடம் பேச வேண்டும்

    1. Hlo raja

Comments are closed.