உன்ன என்னமோன்னு நினைச்சேன் – Part 4 110

அவன் கேள்வியைக் கேட்டு முடிக்கிறதற்குள், அவள் அவனை அடிக்க ஆரம்பித்திருந்தாள். அப்பக் கொடுத்ததை வாங்கிகிட்டீங்கள்ல, அப்ப இதையும் வாங்கிக்கோங்க! என்று மீண்டும் அடித்தாள்!

ஏய், இப்பியே இப்பிடி அடிக்கிற! இன்னும் போகப் போக எப்பிடியெல்லாம் அடிப்பியோ! அவன் சீண்டச் சீண்ட அவள் இன்னும் முகம் சிவந்து அடித்தாள்.

உங்களை…

செல்லமாய் அடித்துக் கொண்டிருந்தவளின் இரு கைகளையும் ஒரு கையால் இறுகப் பற்றியவன், இன்னமும் அருகே இழுத்து, அவள் முகமெங்கும் வேகமாக முத்தமிட ஆரம்பித்தான்.

அவனுடைய சீண்டல்களில் மலர்ந்திருந்தவள், அவனது முத்தங்களில் இன்னும் சிவந்து, முகத்தை அவனிடம் ஒப்புவித்து, கண்களை மூடியிருந்தாள்!

அவள் அவனை முத்தமிட்ட போது, மெதுவாய் ஆரம்பித்து பின் ஆவேசமாய் முத்தமிட ஆரம்பித்தாளென்றால், இவனோ, ஆவேசமாய் முத்தமிட பின் மெதுவாய் முகமெங்கும் முத்தமிட்டுக் கொண்டிருந்தான்!

நீண்ட நாட்களுக்குப் பின், மிகுந்த மகிழ்ச்சியுடன், எந்தக் கவலையுமின்றி, மலர்ந்த முகத்துடன், தன்னை அவனிடம் தந்துவிட்டு, கண் மூடி லயித்துக் கிடந்தவளின் காதில் மெதுவாய் சொன்னான்… உன்னை மாதிரி கஞ்சனில்லைடி நானு! முத்தம் கேட்டா அடிக்கிற ஆளில்லை, நீ என்னை அடிச்சாக் கூட, திருப்பி முத்தம் கொடுக்கிற ஆளு!

விழித்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளின் கண்களில் காதல் பொங்கியது. அவளது விழிகளில், இன்னமும் குழப்பத்தின் சாயையும் இருந்தது. அவளை ஏதோ வாட்டுவது புரிந்த ராஜாவும், அவளை மார்பில் சாய்த்து, கன்னங்களை வருடியவாறே கேட்டான்!

என்னடி உன் பிரச்சினை? என்ன உன் மண்டைக்குள்ள குடையுது? மனசுக்குள்ள இவ்வளவையும் வெச்சுகிட்டு ஏன் தடுமாறிகிட்டு இருக்க?

கொஞ்சம் கில்ட்டியா இருக்குப்பா? அப்புறம், நமக்கும், அவங்களுக்கும் என்ன வித்தியாசம்? அவிங்க ஒண்ணு சேந்தாங்க, நாமளும் ஒண்ணு சேர்றோம்! இதுல இவிங்க என்ன யோக்கியம்னு வெளிய இருந்து பாக்கிறவங்க பேச மாட்டாங்களா?

அவள் எதைக் கண்டு பயப்படுகிறாள், எதனால் குழம்பிக் கொள்கிறாள் எனப் புரிந்தது!

இங்கப் பாரு, பெரிய வித்தியாசம் இருக்கு!

நாம யாரையும் ஏமாத்தலை! எந்தத் துரோகமும் பண்ணலை. எனக்கும், உனக்கும் ரெண்டு வருஷமா பழக்கம் இருக்கு! நம்ம ரெண்டு பேருக்குமே, ஒருத்தரை ஒருத்தர் புடிச்சிருக்குன்னு தெரியும். ஆனா, எந்தத் தப்பும் பண்ணலியே? ஆம்பளைக்கு, கொஞ்சம் அழகா இருந்தா, எந்த பொண்ணையும் புடிக்கும்! ஏன், பொண்ணுங்க கூட, இப்பல்லாம் வெளிப்படையா ஆண்களை ரசிக்கிறாங்க! எல்லாரும் எல்லார் கூடவுமா வாழ்ந்துடுறாங்க?

இதுக்குப் பேருதான் சுய ஒழுக்கம். ரெண்டு பேருக்கும் இன்னொருத்தரைப் புடிச்சிருந்தாலும், மாரல் சப்போர்ட்டா மட்டுந்தானே இருந்தோம். தப்பா ஒரு செயல் இல்லை ஒரு பார்வை பார்த்திருப்போமா? எல்லாத்துக்கும் மேல, இப்பியும், நமக்குள்ள இந்த காதலே வராமா இருந்திருந்தா, தள்ளி நின்னிருந்தாலும், நமக்கு ஒரு வகையில் மாரல் சப்போர்ட்டா இருந்திருப்போமே ஒழிய வேற தப்பு ஏதாவது பன்ணியிருந்திருப்போமா? நமக்கு புடிச்சிருக்கு, யாருக்கும் துரோகம் பண்ணலைங்கிறப்ப, எதுக்கு நாம மாத்தவங்களைப் பத்தி கவலைப் படனும்?

இதையும் அவிங்க பண்ணதையும் எப்டி கம்பேர் பண்ற? வெளிய இருக்குறவன், ஆயிரம் பேசுவான். நீ கஷ்டப் பட்டப்ப என்ன ஹெல்ப் பண்ணாங்க? நாளைக்கு நீ சந்தோஷமா இருக்கிறப்ப என்ன பண்ணப் போறாங்க? சும்மா கண்டதையும் போட்டு குழம்பிகிட்டு…

இப்போது அவள் முகம் தெளிந்திருந்தாலும், கேட்டாள், வெளிய இருக்கிறவிங்க என்னமோ சொல்லிக்கட்டும். ஆனா, நம்ம வீட்ல என்ன நினைப்பாங்க? அதான்…

ம்க்கும், ஒரே ஆளு, ஓவர் புத்திசாலியாவும், அடி முட்டாளாவும் இருக்கிறதை உன்கிட்டதாண்டி பாக்குறேன்.
_____